இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா?
பாவமறியாக் குழந்தையின் நிலை
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5175
ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட சுவர்க்கவாசி என்று கூறும் அதிகாரம் நமக்கு இல்லை எனும் போது பாவம் செய்ய வாய்ப்புள்ள பெரியவர்களை அவ்லியாக்கள் என்றும், அல்லாஹ்வின் நேசர் என்றும் நாம் எவ்வாறு கருத முடியும்?
No comments:
Post a Comment