1.
நேசத்திற்குரியவர்
யார்
?
عن أنس قال قال
النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
உங்களில் ஒருவருக்கு அவரின்
தந்தை, அவரின் குழந்தைகள்,
ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர்
(உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நூல் : புஹாரி (15 )
முஸ்லிம் ( 69 ) நஸாயீ ( 5013 ) இப்னு
மாஜா ( 67 ) அஹ்மத் (13499) தாரமீ ( 2741 )
விளக்கம் :
இஸ்லாத்தின் முக்கியமான ஒரு
அடிப்படை விஷயத்தைத் தெளிவுபடுத்தும் நபிமொழி இது ! இந்த நபிமொழியை
சரியாகக் புரிந்து கொண்டால் இன்று இஸ்லாத்தின் அடிப்படையை முஸ்லிகளிடம் விளக்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டிருக்காது.
மார்க்கச் சட்டங்கள் என்று வழக்கத்தில்
இருப்பவை திருக்குர் ஆனுக்கும் நபிமொழிக்கும் முரணாக இருந்தால் , திருக்குர்
ஆனுக்கும் நபிமொஇக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் உள்ள சட்டங்களை தூக்கி
எறிந்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு மாற்றமாக நபிமொழியை
நிராகரித்து விட்டு ,” எங்கள் முன்னோர்கள் சொன்னார்கள் ; என் தந்தை
சொன்னார்; என் தாய் இப்படி செய்யச் சொல்கிறார் “ என்றூ வாதிடுகிறார்.
இவர்கள் இந்த நபிமொழியை கொஞ்சம்
சிந்தித்துப் பார்த்தால் உலகத்தில் உள்ள எவரையும் விட இறைத்தூதரின் சொல்லுக்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு நபிமொழியின் அடிப்படையில் தங்கள் அமல்களை அமைத்துக்
கொள்வார்கள்.
No comments:
Post a Comment