Monday, November 7, 2016

பாவ மன்னிப்பு



16. பாவ மன்னிப்பு


ابْنَ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ ‏"‏


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 நூல் : முஸ்லிம் ( 5235 ) அபூதாவூத் ( 1515 ) அஹ்மத் (17391 )

விளக்கம் :

றைவனுக்கு அதிகம் பயந்து நடப்பவர்கள் இறைத் தூதர்கள். சிறப்பு மிக்க இறைத்தூதர்களில் முதலிடம் பெறும் நபி ஸல் அவர்கள் இறைவனை அதிகமதிகம் பயந்து, அவனது கட்டளைகளை நிறைவேற்றி வந்தார்கள்.

இருந்தாலும் அவர்களும் மனிதர் என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படலாம் , அதற்காக நாள் ஒன்றுக்கு நூறு தடவை இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள்.


நபி ஸல் அவர்களே இவ்வாறு செய்துள்ளார்கள் என்றால் நாம் எம்மாத்திரம் ? பாவங்களிலேயே முழ்கி இருக்கும் நாம் தினமும் நூறுக்கும் மேற்பட்ட தடவை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு, மறுமையில் இறைவனின் கருணைப் பார்வைக்கு உர்த்தானவர்களாக ஆக வேண்டும்.

No comments:

Post a Comment