Monday, November 7, 2016

ஹஜ்ஜும் உம்ராவும்



22. ஹஜ்ஜும் உம்ராவும்


عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ"


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 1773 ) முஸ்லிம் ( 1349 ) திர்மிதீ ( 933 ) நஸாயீ ( 2622 ) இப்னு மாஜா ( 2888) அஹ்மத் ( 7307 ) முஅத்தா மாலிக் ( 776 ) தாரமீ ( 1795 )

விளக்கம் :

மனிதனைப் படைத்த இறைவன் இவ்வுலகத்தில் ஏராளமான வசதி வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான் . அவன் கொடுத்த அருட்கொடைகளை கணக்கிட்டுப் பார்க்க முயன்றால் நாம் தோல்வியையே அடைவோம்.

நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல் குர் ஆன் 14 :34 )

இந்த இறை வசனம், மனிதனுக்கு இறைவன் வழங்கியுள்ள அருட்கொடையின் எண்ணிக்கையை அழகுற விளக்குகிறது. இவ்வளவு அருட்கொடைகளையும் அனுபவிக்கும் மனிதன் , படைத்தவனை மறந்து வாழ்கிறான் . படைத்தவனைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.


இவ்வாறு பெரும் அருட்கொடைகளை அனுபவித்து, படைத்தவனை மறந்திருப்பவன் இறைந்தவனுக்கு சமம் என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். யார் படைத்தவனை எண்ணிப் பார்த்து அவனுக்கு அடிபணியவில்லையோ அவர்கள், இருந்தும் இல்லாதவர்களைப் போன்றவர்கள்.

எனவே படைத்தவனை நினைத்துப் பார்த்து அவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்.

No comments:

Post a Comment