பாதிக்கப்பட்டோரின் பண்புகள்
இந்த
உலகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதனுக்கு அநியாயம் செய்யக் கூடாது. பிற
மனிதனுக்குச் செய்கின்ற அநியாயத்தை அந்த மனிதர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க
மாட்டான் என்றெல்லாம் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துககிறது.
பழிக்குப்பழி:-
நமக்கு
அநியாயம் இழைக்கப்படும்போது திருப்பி அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்று
விரும்பினால் அதை இஸ்லாம் அனுமதிக்கிறது
அறிவுடையோரை!
பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது.
அல்குர்ஆன்2:179
நம்பிக்கை
கொண்டோரே! சுதந்திரமானவனுக்கு (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது
உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன்2:178
திட்டுதல்:-
நமக்குப்
பாதிப்பு ஏற்படுத்தியவர்களை ஏசுவதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
அநீதி
இழைக்கப்பட்டவர் தவிர (வேறெருவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான்.
அல்குர்ஆன்4:148
மன்னித்தல்:-
தீமையின்
கூலி அது போன்ற தீமையே. மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி
அல்லாஹ்விடம் உள்ளது.
திருக்குர்ஆன்42:40
இன்று
நாம் பலர் நமக்குச் செய்கிற தவறுகளை மன்னிக்க முன்வருவதில்லை அது எவ்வளவு சிறிய
தவறானாலும் அவனை எப்படியாவது தண்டித்து விட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால்
நமக்கு அநீதி இழைத்தவனை நாம் மன்னிப்பதால் அல்லாஹ் நம்மை மன்னிப்பதாக குர்ஆனில்
கூறுகிறான்
உறவினர்களுக்கும்
ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்
என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து
அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப
மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்
அல்குர்ஆன்24:22
இந்த
வசனம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்ட போது இறங்கியது. அதைப்
பரப்பியவர்களின் ஒருவரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) வின் தந்தை அபூபக்கர் (ரலி)
அவர்களின் ஆதரவில் இருந்தார். தன் மகள் மீது அவதூறு சொல்லிவிட்டாரே என்ற கோபத்தில்
அபூபக்ர் (ரலி) அவர்கள், இவருக்கு
இனி எந்த உதவியும் செய்ய மாட்டேன் எனக் கூறிவிடுகிறார். இதைத்தான் இந்த வசனத்தில்
கண்டித்து, அப்படிச் செய்யாதீர்கள் எனக் கூறுகிறான். மேலும் அல்லாஹ்
உங்கள் பாவத்தை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என நீங்கள் விரும்பமாட்டீர்களா? எனக் கேட்கிறான்.
அல்லாஹ்வின்
மன்னிப்பைப் பெற எளிதான வழி நமக்கு அநீதி இழைத்தோரை நாம் மன்னிப்பதுதான். நாம்
மன்னித்தால் அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான்
தீமை
செய்தோருக்கும் நன்மை செய்:-
இந்தச்
சட்டம் மிகவும் சிறப்பான சட்டம் தீமை செய்தோருக்கு நாம் நன்மை செய்தால் அவரும் நம்
உற்ற நண்பாராகி விடுவார் என அல்லாஹ் கூறுகிறான்
நன்மையும்
தீமையும் சமமாகாது நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இறுக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.
அல்குர்ஆன்41:34
பொறுமையை
மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்த பண்பு) வழங்கப்படாது. பாக்கியம்
உடையவர் தவிர மற்றவருக்கு வழங்கப்படாது. அல்குர்ஆன்41:35
ஆகவே
நாம் பாதிக்கப்படும்போது இஸ்லாம் கூறும் மேற்கூறிய பண்புகளைப் பின்பற்ற வேண்டும்.
அதிலும் குறிப்பாக தீமை செய்தவரை மன்னித்தல், அதற்கு
ஒரு படி மேலேபோய் தீமை செய்தோருக்கே உதவி செய்தல் இதுப்போன்ற பண்புகளை அதிகம்
வளர்த்து, நமது பாவங்களை இறைவன் மன்னிக்க முயற்சிப்போமாக!
No comments:
Post a Comment