4 . பொய் சத்தியம் செய்தல்
أَلَمْ تَرَى إِلَى الَّذِينَ تَوَلَّوْا قَوْمًا
غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ مَا هُمْ مِنْكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ
وَهُمْ يَعْلَمُونَ(14) سورة المجادلة
அல்லாஹ் யார் மீது கோபம் கொண்டுள்ளானோ அந்தச் சமுதாயத்தை உற்ற நண்பர்களாக்கிக்
கொண்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் உங்களைச் சேர்ந்தோரும் அல்லர். அவர்களைச் சேர்ந்தோரும் அல்லர். அறிந்து
கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் 58:14)
اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا
عَنْ سَبِيلِ اللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُهِينٌ(16) سورة المجادلة
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும்
தடுத்தார்கள். இழிவு தரும் வேதனை அவர்களுக்கு உண்டு.
(அல்குர்ஆன் 58:16)
154 َثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى
وَابْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ عَلِيِّ
بْنِ مُدْرِكٍ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ
يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ
أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ
مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ
الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ رواه
مسلم
மறுமையில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான் அவர்களை பார்க்கவும் மாட்டான், அவர்களை தூய்மையாக்கவும் மாட்டான் என்று
மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது (அவர்கள்) நஷ்டமடைந்துவிட்டார்கள்,தோல்வியடைந்துவிட்டார்கள் அந்த (மூன்று)
நபர்கள் யார்? என்று நான் கேட்டேன்,
1. தரையில் இழுபடுமாறு ஆடையை அணிபவன்.
2.. (செய்த தர்மத்தை) சொல்லிக்
காட்டுபவன்.
3. தனது சரக்குகளை பொய் சத்தியம்
செய்து விற்றவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
நூல் : முஸ்லிம் (154)
No comments:
Post a Comment