Wednesday, November 16, 2016

புத்தகத்தில் ஸலவாத் எழுதினால் மலக்குமார்களின் பிரார்த்தனை கிடைக்கும்



31 . புத்தகத்தில் ஸலவாத் எழுதினால் மலக்குமார்களின் பிரார்த்தனை கிடைக்கும்


المعجم الكبير للطبراني - (19 / 181(
447 - حَدَّثَنَا أَحْمَدُ , قَالَ: نا إِسْحَاقُ بن وَهْبٍ الْعَلافُ , قَالَ: نا بِشْرُ بن عُبَيْدِ اللَّهِ الدَّارِسِيُّ , قَالَ: نا حَازِمُ بن بَكْرٍ، عَنْ يَزِيدَ بن عِيَاضٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ"

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை  மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி).
இந்தச் செய்தி தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835, ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
 இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்.
இவரை இமாம் புகாரி ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் மாலிக், இப்னு மயீன் ஆகியோர்  இவர் ஹதீஸில் பொய் கூறுபவர் என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பார்க்க : மீஸானுல் இஃதிதால், பாகம்: 4,பக்கம்: 436
ஆகவே இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான, இட்டுக்கட்டுப்பட்ட தரத்தில் அமைந்த செய்தியாகும்.
மேற்கண்ட அதே செய்தி அத்தர்கீப் வத்தர்ஹீப் எனும் நூலில் பாகம்: 2, பக்கம்: 330ல் பதிவாகியுள்ளது. எனினும் இதன் அறிவிப்பும் பலவீனமாகவே உள்ளது.

الترغيب والترهيب لقوام السنة - (2 / 330(
1697- أخبرنا عبد الواحد بن إسماعيل، أنبأ أبو محمد الخبازي ثنا أبو محمد: عبد الله بن أحمد الحفصي، ثنا إبراهيم بن إسماعيل الزاهد -المعروف بالخزاز- ثنا عبد السلام بن محمد المصري بمصر، ثنا سعيد بن عفير قال: حدثني محمد بن إبراهيم بن أمية القرشي المديني، عن عبد الرحمن بن عبد الله الأعرج، عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كتاب لم تزل الملائكة يستغفرون له ما دام اسمي في ذلك الكتاب)).

இதில் அப்துஸ் ஸலாம் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், மறுக்கப்பட வேண்டிய செய்திகள் கொண்டவர் என்று இமாம் கதீப் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.
நூல்:லிஸானுல் மீஸான்,  பாகம்: 5,  பக்கம்: 179

No comments:

Post a Comment