14 . பெற்றோரைப் பேணுதல்
وَقَضَى رَبُّكَ
أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ
عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا
تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا(23) سورة الإسراء
""என்னைத் தவிர வேறு யாரையும்
வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும்
அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை
அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
(அல்குர்ஆன் 17:23)
وَوَصَّيْنَا الْإِنسَانَ
بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ
أَنْ اشْكُرْ لِـي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ(14) سورة لقمان
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய்
பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.
எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி
செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல்குர்ஆன் 31:14)
527 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ
هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ
أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ
هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ الصَّلَاةُ
عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيٌّ
قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوْ اسْتَزَدْتُهُ
لَزَادَنِي رواه البخاري
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று
பதிளித்தார்கள். அதற்கு அடுத்தது எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்தது எது? என்றேன். அல்லாஹ்வின் பாதையில் போர்புரிதல்
என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.(கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்திருந்தால்
நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லிருப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரீ(527)
5971 حَدَّثَنَا قُتَيْبَةُ
بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ
عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ رَجُلٌ
إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ
مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي قَالَ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ
أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أُمُّكَ قَالَ ثُمَّ مَنْ قَالَ ثُمَّ أَبُوكَ
وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَيَحْيَى بْنُ أَيُّوبَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ مِثْلَهُ
رواه البخاري
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில்
உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர்கள் யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உன் தாய் என்றார்கள்.அவர் பிறகு யார்? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன்
தாய் என்றார்கள். அவர் பிறகு யார்? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் உன் தாய் என்றார்கள். அவர் பிறகு யார்? என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள்
பிறகு உன் தந்தை என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (5971)
4627 حَدَّثَنَا شَيْبَانُ بْنُ
فَرُّوخَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَغِمَ أَنْفُ ثُمَّ رَغِمَ
أَنْفُ ثُمَّ رَغِمَ أَنْفُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ
عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلْ الْجَنَّةَ رواه مسلم
மூக்கு மண்ணை கவ்வட்டும்! (நாசமாகட்டும்!). மூக்கு மண்ணை கவ்வட்டும்! (நாசமாகட்டும்!).
மூக்கு மண்ணை கவ்வட்டும்! (நாசமாகட்டும்!). அல்லாஹ்வின் தூதரே! யார் என்று கேட்டபோது
பெற்றோரில் இருவரே அல்லது ஒருவருரே இருந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்) சுவர்க்கம்
செல்லாதவன் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் (4627)
No comments:
Post a Comment