Sunday, November 13, 2016

பெண்கள் ஸியாரத் செய்தல்



1 . பெண்கள் ஸியாரத் செய்தல்

294 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ وَأَبُو صَالِحٍ هَذَا هُوَ مَوْلَى أُمِّ هَانِئِ بِنْتِ أَبِي طَالِبٍ وَاسْمُهُ بَاذَانُ وَيُقَالُ بَاذَامُ أَيْضًا رواه الترمذي

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத்(2817), அஹ்மத்(1926,2472,2829,2952)

இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

நான் உங்களை அடக்கத் தலங்களைச் சந்திக்க வேண்டாமென்று தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி), நூல் : முஸ்லிம் (1778)

இந்த செய்தியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கப்ருக்குச் சென்று வந்ததை நபிகளார் கண்டிக்கவில்லை என்பதும் கப்ருச் சென்றால் கூறவேண்டிய வாசகங்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபிகளார் கற்றுக் கொடுத்ததும் பெண்கள் கப்ருக்கு ஸியாரத் செல்லலாம் என்பதை அனுமதிக்கிறது. 

(பார்க்க : முஸ்லிம் 1774,1778)

No comments:

Post a Comment