19. நீங்காத இரண்டு ஆசைகள்
عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم يهرم ابن آدم وتشب منه اثنتان الحرص
على المال والحرص على العمر
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின்
மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:
1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள
ஆசை.
இதை அனஸ் பின் மாலிக் ( ரழி ) அறிவித்தார்கள்
நூல்
: புஹாரி ( 6421 ) முஸ்லிம் ( 1892 ) திர்மிதீ ( 2339 ) இப்னு மாஜா ( 4234) அஹ்மத்
( 11792 )
விளக்கம் :
மனிதனின்
ஆசைக்கு எல்லை எதுவும் இல்லை. எவ்வளவு பணம் சேர்ந்தாலும் இன்னும் சேர்க்க வேண்டும்
. இன்னும் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே தவிர இவ்வளவு பணம் சேர்த்தது
போதும் என்று நிறுத்திக் கொள்வதில்லை.
தனக்கும்
தன் குடும்பத்தினருக்கும் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கும் என்று
எல்லையில்லாமல் சேர்க்க ஆசைப்படுகிற மனிதன் இறைவனை வணங்குவதில் இவ்வாறு
ஆசைப்படுவதில்லை.
இதைப்
போன்று எத்தனை வருடங்கள் அவன் வாழ்ந்திருந்தாலும் இன்னும் வாழவேண்டும் என்றே
ஆசைப்படுகின்றான். 100 வயதை எட்டியவர் கூட இன்னும்
கொஞ்சம் காலம் வாழ்ந்தால் நன்றாக இருக்குமே என்றே ஆசைப்படுவார்.
ஆனால் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் இது போன்று ஆசைப்படுவதில்லை.
ஆயிரம் ரூபாய் தர்மம் செய்துவிட்டோம் அடுத்த தடவை பத்தாயிரம் தர்மம் செய்ய வேண்டும்
அதற்கு அடுத்த தடவை ஒரு லட்சம் தரமம் செய்ய வேண்டும் என்று யாருக்கும் ஆசை நீண்டு கொண்டே
போவதில்லை.
No comments:
Post a Comment