Tuesday, November 8, 2016

ஈமான் என்றால் என்ன?




இஸ்லாமியக் கொள்கை விளக்கம்

ஈமான் என்றால் என்ன?

ஜிப்ரீல்( அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஈமான்(இறைநம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின்  (நாட்டமாகிய) விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர்(ரலி)

நூல் : முஸ்லிம் (9)

அல்லாஹ்வை நம்புதல்

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீது இருக்கின்றான். இதற்கான சான்றுகள் வருமாறு : 

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).

நபி(ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி(ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி)

நூல் : முஸ்லிம் (836)

அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

قَالَ لَا تَخَافَا إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى(46) سورة طه

""அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)

இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களை பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.

அர்ஷ்

அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.


قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(86) سورة المؤمنون

""ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக் கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)

وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ  ...(255) سورة البقرة

அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255)

وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ(17) سورة الحاقة

அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17)

அல்லாஹ்வின் தோற்றம்

இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.

அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள். 

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)

மறுமையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அவனைப் பற்றி எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாது வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் தடவையாக வந்து நானே உங்கள் இறைவன் என்று கூறுவான்.

அறிவிப்பவர் :  அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல் : புகாரீ (7439)

இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் : 

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)

அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?

இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது
அல்லாஹ் கூறுகிறான் : 

لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ(103) سورة الأنعام

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் 6:103)


وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنظُرْ إِلَيْكَ قَالَ لَنْ تَرَانِي وَلَكِنْ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنْ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ(143) سورة الأعراف


நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸô வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ""என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ""என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸô மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ""நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)

நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

நூல் : முஸ்லிம் (261)

மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة 

அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? 

என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல் : புகாரீ (4581)

காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.

كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ(15) سورة المطففين

அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15)

அழகிய திருநாமங்கள்

وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ(180) سورة الأعراف 

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! 

قُلْ ادْعُوا اللَّهَ أَوْ ادْعُوا الرَّحْمَانَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا(110) سورة الإسراء

""அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)

அவன் ஒருவனே!

وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَانُ الرَّحِيمُ(163) سورة البقرة

உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُوْلُوا الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(18) سورة آل عمران

""தன்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்க ளும், நீதியை நிலை நாட்டும் அறிவுடை யோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாரு மில்லை. மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 3:18)

ذَلِكُمْ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ(102) سورة الأنعام

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன். (அல்குர்ஆன் 6:102)

قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا(42) سورة الإسراء

""அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடையவ(இறை) வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:42) 

No comments:

Post a Comment