Monday, November 14, 2016

ஹிதாயாவில் இடம்பெற்ற தவறான செய்திகள் ( ஒர் பார்வை )



ஹனஃபி மத்ஹப் சட்டநூல் ஹிதாயாவின் தவறுகள்

மனிதன் என்ற அடிப்படையில் ஏற்படும் சிலதவறுகளைக்கூட பூதகரமாக மாற்றி இவர்களின் பேச்சை கேட்கலாமா? அவர்களை பின்பற்றலாமா? என்று தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் மத்ஹப்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நம்மிடம் ஏற்படும் சிற்சில தவறுகளைவிட மிகப்பெரிய தவறுகளை இவர்கள் மதிக்கும் இமாம்கள் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் இவர்கள் கண்களுக்கு தவறாக தெரிவதில்லை. அந்த இமாம்களின் சொற்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை தெளிவுபடுத்தவே இங்கு அதன் விவரங்களை உங்களுக்கு கொடுக்கபடுகிறது

ஹனஃபி மத்ஹபினரின் மிக முக்கிய சட்ட நூலாக கருதப்படும் ஹிதாயா என்ற நூலில் அவர் சொல்லும் சட்டங்களுக்கு நபிமொழி மற்றும் நபித்தோழர்களின் கூற்றுகளை ஆதாரமாக காட்டுகிறார். ஆனால் காட்டும் பல ஆதாரங்கள் நபிமொழி தொகுப்புகளில் இருக்கவில்லை. இவரின் நூலை ஆய்வு செய்த இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் அத்திராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் நோக்கமே ஹிதாயா என்ற நூலில் இடம்பெறும் செய்திகள் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்வதுதான். இதை ஆய்வு செய்த ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் 200க்கும் மேற் பட்ட செய்திகளுக்கு ஆதாரம் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சிலதை நாம் இதில் கோடிட்டு காட்டியுள்ளோம்.

(ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஜமாலுத்தீன் அபூமுஹம்மத் அப்துல்லாஹ் பின் யூசுப் (இறப்பு ஹிஜ்ரீ 762) என்பவர் ஹிதாயாவில் உள்ள ஹதீஸ்களின் நிலையை ஆய்வு செய்து நஸ்புர் ராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் சுருக்கம்தான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய அத்திராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்று கூறப்படுகிறது.)

முதலில் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான ஹிதாயாவைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

ஹனஃபி மத்ஹபின் மிக முக்கியமான சட்ட நூலாக கருதப்படுவது ஹிதாயா என்ற நூலாகும். இந்நூல் இன்றும் ஹனஃபி மத்ரஸாக்களில் படித்துக் கொடுக்கப்படுகிறது.

இந்நூலை அலீ பின் அபீபக்ர் பின் அப்துல் ஜலீல் என்பவர் எழுதியுள்ளார். இவர் ஹிஜ்ரி 511ல் பிறந்து 593ல் இறந்தவர்.

இவர் ஆரம்பத்தில் குதூரீ என்ற நூலையும் அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலையும் ஒன்றிணைத்து அத்துடன் அவசியமான சில சட்டங்களை அதிகமாக்கி பிதாயத்துல் முப்ததீ என்ற நூலை தொகுத்தார். பின்னர்

அந்த நூலுக்கு அவரே விரிரையும் எழுதினார். அதற்கு கிஃபாயா என்று பெயரிட்டார். இது எண்பது பாகங்களை கொண்டதாக இருந்தது. பின்னர் இந்த நூலை சுருக்கி 13 ஆண்டுகளில் ஹிதாயா என்ற நூலை உருவாக்கினார்.

(ஆதாரம் : நஸ்புர் ராயா,பாகம் :1, பக்கம் : 14)

குறிப்பு : ( Red Color - ஹிதாயா வாசகம் ஆகும் மற்றும் Fuchia color இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் உடைய கருத்துகள் ஆகும் )

1 .அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 28)

18 லி حَدِيث إِن الله يحب التَّيَامُن فِي كل شَيْء لم أَجِدهُ هَكَذَا وَإِنَّمَا الحَدِيث فِي الصَّحِيحَيْنِ عَن عَائِشَة أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ يحب التَّيَامُن فِي كل شَيْء الحَدِيث

ஒவ்வொரு விஷயத்திலும் வலது புறத்தில் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான் என்ற நபி மொழி (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு (அல்லாஹ் கூறியதாக) நான் பெற்றுக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் வலதுபுறத்தில் செய்வதை விரும்புவார்கள் என்றே ஆயிஷா (ரலிலி ) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 .ஹதஸ் என்பதற்கு நபிமொழியில் உள்ளதாக கூறும் ஹிதாயா ஆசிரியரின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 30)
19 லி حَدِيث سُئِلَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ مَا الْحَدث فَقَالَ مَا يخرج من السَّبِيلَيْنِ لم أَجِدهُ

ஹதஸ் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இரண்டு வழிகளில் வெளியேறுவது என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

3. நபிகளார் வாந்தி எடுத்தார்கள் உளூச் செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லை

20 - حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قاء فَلم يتَوَضَّأ لم أَجِدهُ

நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள் உளூச் செய்யவில்லை. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

4 . நபிகளார் கடமை என்று கூறினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 47)
31 லி حَدِيث الْمَضْمَضَة والإستنشاق فرضان فِي الْجَنَابَة سنتَانِ فِي الْوضُوء لم أَجِدهُ

கடமையான குளிப்பின்போது வாய்கொப்பளிப்பதும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதும் கடமையாகும். உளூச் செய்யும் போது சுன்னதாகும் என்ற நபிமொழி.(ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

5 . கொதிக்கப்பட்ட இலந்தை இலை என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 55)
قَوْله لِأَن الْمَيِّت يغسل بِالْمَاءِ الَّذِي أَغْلَى فِيهِ السدر بذلك وَردت السّنة لم أَجِدهُ بِقَيْد الغلي

மய்யித்தை இலந்தை இலை கொண்டு கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு கழுவப்படும். இவ்வாறு நபிமொழி வந்துள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : கொதிக்க வைக்கப்பட்ட என்ற நிபந்தனை வாசகத்தை நான் பெற்றுக் கொள்ளவில்லை.

6 . தூய்மையின் குறைந்த பட்ச அளவு தொடர்பாக ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 88)
قَوْله رَوَى عَن إِبْرَاهِيم النَّخعِيّ قَالَ أقل الطُّهْر خَمْسَة عشر يَوْمًا لم أَجِدهُ

தூய்மையின் குறைந்த பட்ச காலம் பதினைந்து நாட்களாகும் என்று இப்ராஹீம் நகயீ அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

7 . ஹிதாயா ஆசிரியர் கூறிய நபித்தோழர்கள் இடம்பெறவில்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 121)
125 லி قَوْله قَالَ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم لا بني أبي مليكَة إِذا سافرتما فأذنا وأقيما لم أَجِدهُ وَإِنَّمَا فِي الصَّحِيحَيْنِ أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ ذَلِك لمَالِك بن الْحُوَيْرِث وَابْن عَمه وَقد ذكره المُصَنّف عَلَى الصَّوَاب فِي كتاب الصّرْف

நபி (ஸல்) அவர்கள் அபு முலைக்காவின் இருமகன்களிடம், நீங்கள் பயணித்தால் நீங்கள் இருவரும் பாங்கு சொல்லுங்கள், நீங்கள் இருவரும் இகாமத் கூறுங்கள் என்று கூறினார்கள். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை. புகாரி, முஸ்லிம் மில் நபி (ஸல்)அவர்கள் மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி ) அவர்களிடமும் அவரின் தந்தையின் உடன்பிறந்தவரின் மகனிடமும் கூறியதாகத்தான் இடம்பெற்றுள்ளது. இந்த சரியான கருத்தை நாணயம் மாற்றல் என்ற பாடத்தில் (ஹிதாயா) ஆசிரியரும் கூறியுள்ளார்.

8 . வித்ரு தொழுகையில் முடிக்க வேண்டிய தஸ்பீஹ்

الدراية في تخريج أحاديث الهداية (1/ 147)
176 லி حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ يخْتم بالوتر فِي تسبيحات الرُّكُوع وَالسُّجُود لم أَجِدهُ

நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையை ருகூவு,ஸஜ்தாவின் தஸ்பீஹ்களைக் கொண்டு முடிப்பார்கள். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

9 . தொழுகையில் கைகளை உயர்த்துதல்

الدراية في تخريج أحاديث الهداية (1/ 149)
قَوْله وَرَوَى عَن ابْن الزبير أَنه حمل مَا رَوَى عَن الرّفْع فِي الصَّلَاة عَلَى الإبتداء لم أَجِدهُ

கைகளை உயர்த்த வேண்டும் என்ற நபிமொழியின் கருத்து ஆரம்ப (தக்பீருக்கு மட்டும்) உரியது என்று கருத்திக் கொள்ளவேண்டுமென இப்னு சுபைர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

10. பகலின் தொழுகை சப்தமில்லாமல் இருப்பதாகும்

பகலின் தொழுகை சப்தமில்லாமல் இருப்பதாகும் என்ற நபிமொழி (ஹிதாயா)

الدراية في تخريج أحاديث الهداية (1/ 160)
193 லி حَدِيث صَلَاة النَّهَار عجماء لم أَجِدهُ وَهُوَ عِنْد عبد الرَّزَّاق من قَول مُجَاهِد وَمن قَول أبي عُبَيْدَة بن عبد الله بن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِمَا

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை. இக்கருத்து அப்துர்ரஸ்ஸாக்கில் முஜாஹிதின் கூற்றாகவும் அபுஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூதின் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது. (நபிமொழியாக இடம்பெறவில்லை)

11 . இறையச்சமுள்ள ஆலிமுக்கு பின்னால் தொழுவது

الدراية في تخريج أحاديث الهداية (1/ 168)
حَدِيث من صَلَّى خلف عَالم تَقِيّ فَكَأَنَّمَا صَلَّى خلف نَبِي لم أَجِدهُ

இறையச்சமுள்ள ஆலிமுக்கு பின்னால் தொழுவது நபிக்கு பின்னால் தொழுவதைப் போன்றதாகும். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

12 . லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத் தொழாமல் இருப்பது

الدراية في تخريج أحاديث الهداية (1/ 205)
حَدِيث من ترك الْأَرْبَع قبل الظّهْر لم تنله شَفَاعَتِي لم أَجِدهُ

லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத் தொழுவதை விட்டுவிட்டவருக்கு என்னுடைய பரிந்துரை கிடைக்காது என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

13 . ஜுமுஆ தொழுகை பெருநகரங்களில் தவிர கிடையாது

الدراية في تخريج أحاديث الهداية (1/ 214)
275 லி حَدِيث لَا جُمُعَة وَلَا تَشْرِيق وَلَا فطر وَلَا أَضْحَى إِلَّا فِي مصر جَامع لم أَجِدهُ . . . وَقَالَ الْبَيْهَقِيّ لَا يروي عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فِي ذَلِك شَيْء

ஜுமுஆ, தக்பீர் கூறுதல், நோன்பு பெருநாள் தொழுகை,ஹஜ்ஜுப் பெருநாள் ஆகியவை பெருநகரங்களில் தவிர இல்லை என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை... இது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் வழியாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று பைஹகீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

14 . நபிகளார் பட்டுமெத்தையில் அமர்ந்தார்களா?

الدراية في تخريج أحاديث الهداية (2/ 221)
حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ جلس عَلَى مرفقة حَرِير لم أَجِدهُ

நபி (ஸல்) அவர்கள் பட்டுமெத்தையில் அமர்ந்திருந்தார்கள் என்ற நபிமொழி (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

இதுபோன்ற இன்னும் எத்தனையோ தவறுகள் ஹிதாயாவில் மலிந்து கிடக்கின்றன.


No comments:

Post a Comment