Monday, November 7, 2016

கடன் தள்ளுபடி



30. கடன் தள்ளுபடி


سمع أبا هريرة رضي الله عنه  عن النبي صلى الله عليه وسلم قال كان تاجر يداين الناس فإذا رأى معسرا قال لفتيانه تجاوزوا عنه لعل الله أن يتجاوز عنا فتجاوز الله عنه


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரின் தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 2078 ) முஸ்லிம் ( 1562 )  நஸாயீ ( 4694 ) அஹ்மத் ( 7525 )

விளக்கம் :

இவ்வுலகில் சிரமப்படுபவர்கள் தான் அதிகம் இவ்வாறு சிரமப்படுபவர்களை கண்டால் அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் அவர்களது சிரமங்களை நம்மால் முடிந்தளவு போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

“ மனிதனுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்” ( பார்க்க ; புஹாரி 7376 ) என்ற நபிமொழியும் கஷ்டப்படுவர்களுக்கு உதவ வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


கஷ்டத்தினால் அல்லது அவசியத் தேவையின் காரணத்தால் கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவதற்குச் சிரமப்படும் போது அவர்களது கடனை நாம் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு நாம் செய்தால் மறுமை நாளில் நமது பாவங்களை அல்லாஹ் தள்ளுபடி செய்வான்.

No comments:

Post a Comment