வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 6 முதல் 10 வரை
6 ) நபி
( ஸல் ) அவர்களிடம் மிருந்து ஹஸன் இப்னு அலீ எந்த வார்த்தைகளை மனனம் செய்தார்கள் ???
A ) நற்செயல் புரிவது நற்குணமாகும்
B ) சந்தேகமளிப்பதை விட்டு விடுவிராக
C ) நீர் உனது இயத்திடமே தீர்ப்பு கேள் !
இதற்கான விடை :
وعن الحسن بن على
رضي الله عنهما، قال: حفظت من رسول الله صلى الله عليه وسلم: "دع ما يريبك
إلى ما لا يريبك" ((رواه الترمذى وقال: حديث حسن صحيح))
நபி ஸல்
அவர்களிடமிருந்து “ உமக்கு சந்தேகமளிப்பதை
விட்டு விடுவீராக ! உமக்கு சந்தேகம்
ஏற்படுத்தாத செயலின் பக்கம் ( விரைவீராக ) “ என்ற வார்த்தையை மனனம்
செய்து கொண்டேன்.
அறிவிப்பவர் : ஹஸன் இப்னு அலீ ( ரழி )
நூல் : திர்மிதீ ( 2518 )
7 ) மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்
அவர்களைத் தூய்மை படுத்தவும் மாட்டான் அவர்களை பார்க்கவும் மாட்டான் ,அவர்களுக்கு கடும் வேதனையும் உண்டு அவர்கள் யார் ??
A ) விபச்சாரம் செய்யும் வயோதிகள்
B ) பொய் கூறும் அரசன்
C ) பொருமை கொள்ளும் ஏழை
D ) A ,B மற்றும் C
இதற்கான விடை :
وعنه قال: قال رسول الله صلى الله
عليه وسلم: “ثلاثة لا يكلمهم الله يوم القيامة، ولايزكيهم، ولا ينظر إليهم ،
ولهم عذاب أليم: شيخ زان وملك كذاب، وعائل مستكبر” ((رواه مسلم))
மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்
அவர்களைத் தூய்மை படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான்
அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு , விபச்சாரம் செய்யும் வயோதிகள் , பொய் கூறும் அரசன் மற்றும் பெருமை கொள்ளும் ஏழை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் ( 107 )
8 ) “ மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையாக வேதனை பெறுபவர்கள்
யார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???
A ) விபச்சாரம் செய்தவர்
B ) உருவம் வரைபவர்கள்
C ) வட்டி வாங்குபவர்கள்
இதற்கான விடை :
وعن ابن مسعود
رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "إن أشد الناس
عذابًا يوم القيامة المصورون" ((متفق عليه))
மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையாக வேதனை
பெறுபவர்கள் , உருவம் வரைபவர்களாவர்
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ( ரழி )
நூல் : புகாரி ( 5950 ) முஸ்லிம் ( 2109 )
9 ) “ தேவையில்லாமல் கூடுதல் சிரமத்தை
எடுப்பவர்கள் பற்று நபி ஸல் என்ன கூறினார்கள் ???
A ) நாசமடைவார்கள்
B ) வெற்றி பெறுவார்கள்
C ) சபித்தார்கள்
இதற்கான விடை :
وعن
ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: "هلك
المتنطعون" قالها ثلاثاً " ((رواه مسلم))
“தேவையில்லாமல் கூடுதல்
சிரமத்தை எடுப்பவர்கள் நாசமடைவார்கள் “ என்று நபி ஸல் அவர்கள் மூன்று தடவை கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் ( ரழி )
நூல் : முஸ்லிம் ( 2670 )
10 ) “ தொழுகையில் மிகச் சிறந்தது எது ? என்று
நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???
A ) நடுத்தரமான கிரா அத்துடன் தொழுகை
B ) நீளமான கிரா அத்துத்துடைய தொழுகை
C ) லூஹா தொழுகை
இதற்கான விடை :
B ) நீளமான கிரா அத்துத்துடைய தொழுகை ஆகும்
وعن جابر رضي الله عنه قال: سئل رسول الله صلى
الله عليه وسلم : أي الصلاة أفضل؟ قال: "طول القنوت" ((رواه
مسلم)
“ தொழுகையில் மிகச்
சிறந்தது எது ?” என்று நபி ஸல் அவர்களிடம்
கேட்கப்பட்டது,” நீளமான கிரா அத்துடைய
தொழுகைதான் “ என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் ( ரழி )
நூல் : முஸ்லிம் ( 756 )
No comments:
Post a Comment