Sunday, December 11, 2016

மருத்துவம் செய்யுங்கள்



14 . மருத்துவம் செய்யுங்கள்


எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்று நபிகளார் கூறியுள்ளதால் நோய் அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக மருத்துவம் செய்ய வேண்டும்.
سنن الترمذي ت شاكر (4 / 383):

عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: " نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً، "
நபி (ஸல்) அவர்களிடம் கிராமப் புறத்தவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் அடியார்களே மருத்துவம் செய்யுங்கள். ஏனெனில் அல்லாஹ் எந்த நோய் கொடுத்தாலும் அதற்கு நிவாரணம் இல்லாமல் வைக்கவில்லை என்று கூறினார்கள்………
அறிவிப்பவர்  உஸாமா பின் ஷரீக் (ரலி).
நூல்கள்  திர்மிதீ (2038), அபூதாவூத் (3855), இப்னுமாஜா (2672) அஹ்மத் ( 18454 )
صحيح مسلم (4 / 1729):

عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لِكُلِّ دَاءٍ دَوَاءٌ، فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ»
நபி (ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
அறிவிப்பர் ஜாபிர் (ரலி),
நூல் முஸ்லிம் (4432)  நஸாயீ ( 7514 ) அஹ்மத் ( 14597 ) பைஹகீ ( ஸகீர் ) 3095

No comments:

Post a Comment