55 . இறையில்லம்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم قَالَ
" أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللَّهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلاَدِ
إِلَى اللَّهِ أَسْوَاقُهَا " .
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும்.
ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் ( 1190 )
விளக்கம்
:
உலகில் உள்ள
இடங்களில் மன அமைதி தரும் இடம் இறையில்லங்களாகும். படைத்தவனை நினைப்பதற்கும் , அவனது
வேதத்தை ஓதுவதற்கும், தொழுவதற்கும் உருவாக்கப்பட்ட இந்த இறையில்லங்கள் தான் இறைவனுக்கு
மிகவும் விருப்பமான இடமாகும். அந்த இடத்திற்கு அவனை வணங்குவதற்காக வரும் போது நாம்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் இறைவனிடம் மதிப்பு உயர்வதுடன் பாவங்களும் அழிக்கப்படுகின்றன.
எனவே அதிகமதிகம்
இறையில்லங்களுக்குச் சென்று வருபவர்களாகவும் அங்கு சென்று தொழுபவர்களாகவும், திக்ர்
மற்றும் திருக்குர் ஆனை ஓதுபவர்களாகவும் இருக்க வேண்டும்.
கடை வீதிகள்
என்பது ஆண்கள் , பெண்கள் கலந்துறவாடும் இடமாக மாறிவிட்டது மேலும் பொய், புரட்டு, மோசடி
, ஏமாற்று வேலைகள் போன்றவை இங்கு நடப்பதால் இறைவனுக்கு வெறுப்புக்குரிய இடமாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment