45. ஹலாலா ? ஹராமா ?
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم قَالَ " لَيَأْتِيَنَّ
عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ، أَمِنْ
حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று
மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 2083 ) நஸாயீ ( 4454 ) தாரமீ ( 2536 ) அஹ்மத் ( 9337 ) ஸுனன் குப்ரா (10166 )
விளக்கம் :
விஞ்ஞான வளர்ச்சியின்
உச்சியில் இருக்கும் இக்காலத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக
, அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வழிவகைகளையும் கையாளுகின்றனர்.
எந்தத் தொழிலில்
அதிக லாபம் வருகிறது என்பதை மட்டும் பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். அந்த வியாபாரம்
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா ? அல்லது தடை செய்யப்பட்டதா என்பதையெல்லாம் இந்த அவசர
உலகத்தில் சிந்திப்பதில்லை.
பணம் ! பணம்
என்பது மட்டுமே குறிக்கோள் என்பதால் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமான வட்டித் தொழியில்
இஸ்லாமியர்கள் ஈடுபடுகின்றனர். லாட்டரி , மது என்று மனிதனுக்குக் கேடு விளைவிக்கும்
வியாபாரத்தையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர்.
இவையெல்லாம்
உலக அழிவுக்கு அறிகுறியாகும் . மறுமை வெற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் எந்தத்
தொழிலாக இருந்தாலும் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா ? இல்லையா ? என்பதை அறிந்து
ஈடுபட வேண்டும்.
No comments:
Post a Comment