Sunday, January 15, 2017

பொறுமையாளன்



50. பொறுமையாளன்


عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الْوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ ‏"‏‏.‏

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 7378 ) முஸ்லிம் ( 5145 )

குறிப்பு : இவ்விரண்டு நூல்கள் இல்லாத இன்ன பிற நூல்களில் இதே ஹதீஸ் பதிவாகி உள்ளது அவைகள் அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசைகளில் இடம்பெற்று உள்ளது.

விளக்கம் :

இறைவனால் மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகக் கருதப்படுவது அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவதாகும். அவன் தனித்தவன்; அவனுக்கு மனைவியில்லை; குழந்தை இல்லை; அவன் யாராலும் பெறப்படவும் இல்லை. இவ்வாறு இறை நெறிகள் இருக்க அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவது அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் சொல்லாகும்.

ஆனாலும் அல்லாஹ் இவ்வாறு சொல்பவர்களை இவ்வுலகில் உடன் தண்டிக்காமல் திருந்துவதற்குக் கால அவகாசத்தைத் தருகின்றான்.

மனிதன் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கத் தயாராக இருக்கிறான். இறைவனுக்குக் குழந்தை இருப்பதாக ஒருவன் கூறினாலும் அவன் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான் .


மேலும் இவ்வுலகில் இவ்வளவு பெரிய பாவ காரியத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கூட உடல் ஆரோக்கியத்தையும் செல்லவத்தையும் கொடுத்து பெருந்தன்மை உள்ளவனாகவும் பொறுமை யாளனாகவும் அல்லாஹ் திகழ்கின்றான்.

No comments:

Post a Comment