52. தற்கொலை செய்ய முயன்றார்களா நபிகள் நாயகம்?
الطبقات الكبرى كاملا 230 (1/ 196)
469- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ :
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى عَنْ دَاوُدَ بْنِ
الْحُصَيْنِ عَنْ أَبِي غَطَفَانَ بْنِ طَرِيفٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ عَلَيْهِ الْوَحْيُ
بِحِرَاءٍ مَكَثَ أَيَّامًا لاَ يَرَى جِبْرِيلَ فَحَزِنَ حُزْنًا شَدِيدًا حَتَّى
كَانَ يَغْدُو إِلَى ثَبِيرٍ مَرَّةً ، وَإِلَى حِرَاءٍ مَرَّةً يُرِيدُ أَنْ
يُلْقِيَ نَفْسَهُ مِنْهُ ، فَبَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَذَلِكَ عَامِدًا لِبَعْضِ تِلْكَ الْجِبَالِ إِلَى أَنْ سَمِعَ صَوْتًا مِنَ
السَّمَاءِ ، فَوَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِقًا
لِلصَّوْتِ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ ، فَإِذَا جِبْرِيلُ عَلَى كُرْسِيٍّ بَيْنَ
السَّمَاءِ وَالأَرْضِ مُتَرَبِّعًا عَلَيْهِ يَقُولُ : يَا مُحَمَّدُ ، أَنْتَ
رَسُولُ اللَّهِ حَقًّا ، وَأَنَا جِبْرِيلُ قَالَ : فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَقَرَّ اللَّهُ عَيْنَهُ ، وَرَبَطَ
جَأْشَهُ ثُمَّ تَتَابَعَ الْوَحْيُ بَعْدُ وَحَمِيَ.
நபிகளாருக்கு வஹீ வந்த போது
சில நாட்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை. எனவே கடும் கவலை கொண்டு தற்கொலை செய்யும்
நோக்கில் ஒரு முறை ஸபீர் என்ற மலைக்கும், மற்றொரு முறை ஹிராவுக்கும் சென்றார்கள். இம்மலைகளை
நாடிச் சென்று வந்த நிலையில் வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டு திடுக்கம் அடைந்து
நின்றுவிட்டார்கள். பிறகு தம் தலையை உயர்த்திப் பார்த்தால் அங்கே ஜிப்ரீல் அலை வானத்திற்கும்
பூமிக்குமிடையிலுள்ள இருக்கையில் உள்ளடக்கி இருந்தவாறே, ‘முஹம்மதே உண்மையிலேயே நீர் அல்லாஹ்வின் தூதர் தாம், நான் தான் ஜிப்ரீல்’ என்று
கூறினார்கள். அதன் பிறகு நபியின் கண்களை அல்லாஹ் குளிர்ச்சிப்படுத்தி உள்ளத்தை இணைத்த
நிலையில் திரும்பிச் சென்றார்கள். அதன் பிறகு வஹீ தொடர்ந்து எழுச்சியுடன் வரலாயிற்று.
ஹதீஸ் எண் 469
தப்காதுல் குப்ரா பாகம் 1 பக்கம் 196
இந்தச் செய்தி முற்றிலும்
நிரகாரிக்கத்தக்க பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
இதில் இடம் பெறும் முஹம்மத் பின் உமர்
அல்வாகிதீ என்பவர் பல அறிஞர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானவர் ஆவார்.
இமாம் அஹ்மத் இவரை பொய்யர் என்றும் இமாம் நஸாயி, புகாரி ஆகியோர் வாகிதீ ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட
வேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
பார்க்க: அல்காமில், பாகம் 7, பக் 481
தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 9, பக் 324
எனவே இது இட்டுக்கட்டப்பட்ட
செய்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதே செய்தி இப்னு ஹிப்பானில்
ஆயிஷா (ரலி) அறிவிப்பாக வருகிறது.
அதில் இப்னுல் முதவக்கில் என்பார் இடம் பெறுகிறார். இவரும்
அறிஞர்களால் குறை சொல்லப்பட்டவரே.
ميزان الاعتدال (3/ 560)
7580 -
محمد بن أبي السري العسقلاني.
هو ابن المتوكل.
له مناكير
இவரிடம் மறுக்கப்பட வேண்டிய
செய்திகள் உள்ளன என தஹபீ விமர்சித்துள்ளார்.
மீஸானுல் இஃதிதால், பாகம் 3, பக்கம் 560
المغني في الضعفاء (2/ 628)
5938 -
د / محمد بن المتوكل بن أبي السري
العسقلاني صدوق قال أبو حاتم لين
இமாம் அபூஹாதம் அவர்களும்
இவரை பலவீனமானவர் என்று குறை கூறியுள்ளார்
அல்முக்னி, பாகம் 2, பக்கம் 628
அதிகம் தவறிழைப்பவர் என்று
இப்னு அதீ விமர்சித்துள்ளார்.
தத்கிரதுல் ஹூஃப்பாழ், பாகம் 2, பக்கம் 46
No comments:
Post a Comment