மத்ஹப் வெறி
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே
பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது.
""மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்'' என்ற நம்பிக்கையே இதற்குக்
காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள்
மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக்
கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை
ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது
தான் இவர்களின் நோக்கம்.
மத்ஹபுகள் மீது எந்த அளவுக்கு
வெறியூட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதற்கு மத்ஹபு நூல்கள் தரும்
வாக்குமூலத்தைப் பாருங்கள்!
அபூ ஹனீஃபாவே கேடயம்
قَالَ مُسَافِرُ بْنُ كِدَامٍ : مَنْ جَعَلَ أَبَا حَنِيفَةَ
بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ رَجَوْت أَنْ لَا يَخَافَ .
( الدر المختار - (1 / 56
யார் தமக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே அபூஹனீபாவை
ஏற்படுத்திக் கொள்கிறாரோ அவர் அஞ்சத் தேவையில்லை என்று நான் நம்புகிறேன் என்று முஸôபிர் என்பார் கூறியுள்ளார்.
நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 1, பக்கம்: 48
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்று சுவனத்தைக்
கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர்கள் எல்லாம் தங்களின் நிலை என்னவாகுமோ? தங்களிடம் முனாஃபிக் தனம்
இருக்குமோ என்று அஞ்சியுள்ளனர். தங்களுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையில் நபி (ஸல்) அவர்களை நிறுத்திக்
கொள்ளலாம் என்று இறுமாப்புடன் அவர்கள் நடந்து கொண்டதில்லை.
ஆனால் அபூஹனீபாவைக் கேடயமாக
ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் எதற்கும் அஞ்சத் தேவையில்லையாம். மத்ஹபு வெறி இவர்களை
எங்கே கொண்டு செல்கிறது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
அபூஹனீபா நல்லவராக இருக்கலாம்; அவருக்கு அல்லாஹ் மறுமையில்
நல்ல அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்திக்கிறோம். ஆனால்
""அபூஹனீஃபா, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு விட்டார்; அவர் இறைவனின் அன்பைப் பெற்று
விட்டார்'' என்று உறுதி கூற முடியுமா? மறுமையில் அவரைப் பற்றி அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன் அந்தத்
தீர்ப்பை நாம் வழங்க முடியுமா?
அபூஹனீஃபா அவர்களின் நிலையே
என்னவென்று தெரியாத போது, அல்லாஹ்வுக்கும் தமக்குமிடையே அவரைக் கேடயமாகப் பயன்படுத்துவோம்
என்று கூறுவோர் கொஞ்சமாவது அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?
இவர்களின் மத்ஹபு வெறிக்கு
உதாரணமாக, அதே நூலில் காணப்படும் இன்னொரு
தத்துவத்தைப் பாருங்கள்.
حسبي من الخيرات ما أعددته يوم القيامة في رضا الرحمن دين النبي محمد
خير الورى ثم اعتقادي مذهب النعمان
(الدر
المختار - (1 / 56)
மறுமையில் இறைவனின் திருப்தியைப் பெற நான் தயாரித்து
வைத்துள்ள முஹம்மதின் மார்க்கமும், அபூஹனீபாவின் மத்ஹபை நான் நம்புவதும் எனக்குப் போதுமாகும்.
(துர்ருல் முஹ்தார் பாகம் : 1 பக்கம் : 56)
நபி (ஸல்) அவர்களின் மார்க்கம்
இவர்களுக்குப் போதாதாம். அத்துடன் அபூஹனீபாவின் மத்ஹபையும் நம்பியாக வேண்டுமாம். நபித்தோழர்களில்
யாரும் இந்த மத்ஹபுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின்
மார்க்கத்தை மட்டுமே மறுமைக்காகத் தயாரித்து வைத்திருந்தனர். அவர்களெல்லாம் இறைவனுடைய
திருப்தியைப் பெறுவது சாத்தியமில்லை என்கிறது இந்த நூல்.
முஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்துடன்
இன்னொரு மார்க்கத்தையும் கற்பனை செய்வதன் மூலம் அபூஹனீபாவை அல்லாஹ்வின் தூதருக்குச்
சமமாக ஆக்கி விட்டனர்.
இத்துடன் நிற்கவில்லை! அல்லாஹ்வுடைய
தூதரை விடவும் அபூஹனீபாவை உயர்வானவராகச் சித்தரித்துக் காட்டும் திமிரான வாசகங்களையும்
மத்ஹபு நூற்களில் நாம் காணலாம்.
நபியவர்கள் மீது இட்டுக்கட்டு
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي
اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتي) وعنه عليه الصلاة والسلام (إن ساير
الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد
أبغضني )
الدر المختار - (1 / 56)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஆதம் என்மூலம் பெருமை
கொண்டார். நான் என்னுடைய உம்மத்தில் ஒருவரைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவர் பெயர்
நுஃமான். அவருடைய பட்டப் பெயர் அபூ ஹனீஃபா. அவர் என்சமுதாயத்தின் விளக்காவார்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எல்லா நபிமார்களும்
என்மூலம் பெருமை கொண்டார்கள். நான் அபூ ஹனீஃபாவைக் கொண்டு பெருமை கொள்கிறேன். அவரை
யார் நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்தவராவார். யார் அவரை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்தவராவார்.
(நூல் : துர்ருல் முஹ்தார் பா : 1 பக் : 56)
இதில் அடங்கியுள்ள அபத்தங்களைப்
பார்ப்போம்.
""என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில்
தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி 108,
1291
நபி (ஸல்) அவர்களின் இந்த
எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு, நபியவர்கள் மீது இட்டுக்கட்டும் துணிவை இந்த மத்ஹபு
வெறி ஏற்படுத்தி விட்டது.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு
கூறினால் அதை அறிவித்தவர் யார்? அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களா? இது இடம் பெற்றுள்ள ஹதீஸ்
நூல் எது? இப்படி எந்த விபரமும் இல்லை.
இப்னுல் ஜவ்ஸீ போன்றவர்கள், ""இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி'' என்று தக்க காரணத்துடன் இனம் காட்டியுள்ளனர்.
""இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுவது மத்ஹபு
வெறியாகும்'' என்று துர்ருல் முக்தாரில் தொடர்ந்து கூறப் பட்டுள்ளது. மத்ஹபு வெறியில் ஊறிப்
போனவர்கள், அதைச் சுட்டிக் காட்டுபவர்களுக்கே அந்தப் பட்டத்தைச் சூட்டுவது கொடுமையிலும் கொடுமை!
அறிவிப்பாளர் தொடரை விட்டு
விடுவோம். இதன் கருத்தைச் சிந்தித்தால் கூட இது நபியவர்களை மட்டம் தட்டுவதற்காகச் செய்யப்பட்ட
சூழ்ச்சி என்பதை அறிய முடியும்.
ஆதம் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மூலம் பெருமையடைந்தார்கள்
என்றால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் ஆதம் (அலை) அவர்கள் பெருமையடைவதற்குரிய
எல்லாத் தகுதிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு என்று கூறலாம். ஆனால் அபூஹனீபா மூலமாக
நபி (ஸல்) அவர்கள் பெருமையடைவார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறப்புக்குரியவரா?
இந்த மத்ஹபை ஏற்றால், இந்த நூலில் எழுதப்பட்ட சட்டங்களை
நம்பினால், நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா சிறந்தவர் என்று ஈமான் கொண்டதாக ஆகாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மத்ஹபை உருவாக்கியவர்களின்
நோக்கம் இது தான். இஸ்லாத்தின் எதிரிகள் செய்த சூழ்ச்சியே மத்ஹபுகள் என்பதற்கு இது
தெளிவான சான்றாகும்.
நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீபா
சிறந்தவர் என்று போதிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டதால் தான் இதைப் பயின்ற மவ்லவிமார்கள், மத்ஹபு வெறியிலிருந்து விடுபட
மறுக்கிறார்கள். தெளிவான நபிவழியை எடுத்துக் காட்டிய பின்னரும் அதற்கு முரணான மத்ஹபுச்
சட்டங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஈமானுக்கு வேட்டு வைக்கும் மத்ஹபு மாயையிலிருந்து
அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.
ஹனஃபி மத்ஹபில் ஈஸா நபி
மத்ஹபுகள் மீது எவ்வாறு வெறியூட்டப்படுகிறது
என்பதற்கு மேலும் சில சான்றுகளைக் காண்போம்.
وَالْحَاصِلُ أَنَّ أَبَا حَنِيفَةَ النُّعْمَانَ مِنْ أَعْظَمِ
مُعْجِزَاتِ الْمُصْطَفَى بَعْدَ الْقُرْآنِ
( الدر المختار ج: 1ص: 56)
சுருங்கச் சொல்வதென்றால் நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில்
குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனிஃபா தான்.
(நூல்: துர்ருல் முக்தார், பாகம்: 1, பக்கம்: 52)
ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாக
அரபிக் கல்லூரிகளில் போதிக்கப் படும் துர்ருல் முக்தாரில் இந்தத் தத்துவம் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் அற்புதங்களில்
திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம்
அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?
நபி (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத
அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்?
குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது
போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும்
தவறே இருக்காது என்று அர்த்தமா? அப்படியானால் அல்லாஹ்வைப் போன்று அபூஹனீஃபாவும் தவறுக்கு அப்பாற்பட்டவர்
என்று நிலை நாட்டப் போகிறார்களா?
உலகில் உள்ள எல்லா நூற்களையும்
விட திருக்குர்ஆன் சிறப்பாக இருப்பது போன்று, உலகிலுள்ள அனைத்து மனிதர்களிலும் அபூஹனீஃபா சிறந்தவர்
என்று அர்த்தமா?
அப்படியானால் நபித்தோழர்களை
விட, நான்கு கலீபாக்களை விட இவர்
சிறந்தவர் என்று கூறப் போகிறார்களா? எந்தப் பொருள் கொண்டாலும் அது அபத்தமாகவே உள்ளது.
நபியவர்கள் தமது நபித்துவத்தை
நிரூபிக்க குர்ஆனைச் சமர்ப்பித்தார்கள். அது போல் அபூஹனீஃபாவையும் சமர்ப்பித்து தமது
நுபுவ்வத்தை நபியவர்கள் நிரூபித்தார்களா? இப்படியும் அர்த்தம் கொள்ள முடியாது.
எனவே இமாம்கள் மீது பக்தி
வெறியூட்டுவதற்காக இவ்வாறு உளறியுள்ளனர் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம்.
وقد جعل الله الحكم لاصحابه وأتباعه من زمنه الى هذه الايام الى ان
يحكم بمذهبه عيسى عليه السلام
( الدر المختار ج: 1ص: 56)
அபூ ஹனீஃபாவின் காலம் முதல், இன்றைய காலம் வரை அல்லாஹ் அவரை பின்பற்றக்
கூடியவர்களுக்கும், அவருடைய தோழர்களுக்கும் ஞானத்தை வழங்கிவிட்டான்.. அவருடைய மத்ஹபைக் கொண்டுதான் ஈஸô (அலை) அவர்கள் தீர்ப்பளிப்பார்கள்
(துர்ருல்
முஹ்தார் பா : 1 பக் : 56 )
இதுவும் மாபெரும் இட்டுக்கட்டாகும்
அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையிலும், அவனது தூதரின் போதனையின் அடிப்படையிலும் முஸ்லிம்கள்
மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை ஓரணியில் திரட்டக்கூடிய ஈஸô
(அலை) அவர்கள் # மத்ஹபுகளை எல்லாம் தகர்த்தெறியக்
கூடிய ஈஸô (அலை) அவர்கள் # அபூஹனீஃபாவைப் பின்பற்றுவார்கள் என்று எழுத இவர்களின் கை கூசவில்லை.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்
கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற
மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:21)
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை
இட்டுக் கட்டுபவன், எதுவுமே அவனுக்கு (இறைவனிடமிருந்து) அறிவிக் கப்படாதிருந்தும்
"எனக்கு அறிவிக்கப்படு கிறது' எனக் கூறுபவன், மற்றும் "அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்கு
வேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட
மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின்
வான வர்கள் அவர்களை நோக்கித் தமது கை களை விரிப்பார்கள்.165
"உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்!
அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும்
இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப் படுகிறீர்கள்!' (எனக் கூறுவார்கள்). (அல்குர்ஆன்
6: 93)
தேவைகளை நிறைவேற்றுபவர்
وَمِمَّا رُوِيَ مِنْ تَأَدُّبِهِ مَعَهُ أَنَّهُ قَالَ : إنِّي
لَأَتَبَرَّكُ بِأَبِي حَنِيفَةَ وَأَجِيءُ إلَى قَبْرِهِ ، فَإِذَا عَرَضَتْ لِي
حَاجَةٌ صَلَّيْت رَكْعَتَيْنِ وَسَأَلْت اللَّهَ تَعَالَى عِنْدَ قَبْرِهِ
فَتُقْضَى سَرِيعًا
. (رد المحتار - (1 / 134)
""நான் அபூஹனீஃபாவின் பரக்கத்தை நாடி அவரது கப்ருக்குச்
செல்வேன். எனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு, அவரது கப்ருக்கருகே நின்று அல்லாஹ்விடம் கேட்பேன்.
விரைந்து அந்தத் தேவை நிறைவேற்றப்படும்'' என்று ஷாஃபி இமாம் கூறினார்கள்.
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
அல்லாஹ்வைத் தொழும் போது கூட
கப்ரை நோக்கித் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். கப்ரைத் தொழுவதாகப்
பிறருக்குத் தோன்றாமல் இருக்க நபியவர்கள் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால் இங்கு அபூஹனீபாவின்
கப்ருக்கருகில் நின்று பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும் என்று கூறி இமாம்கள் மீது
பக்தி ஊட்டப்படுவதுடன் இணை வைப்பதற்கான வாசலும் திறந்து விடப்படுகின்றது.
ஷாஃபி, அபூஹனீஃபா ஆகிய இரண்டு இமாம்களுமே
இது போன்ற சமாதி வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருந்தும் அவர்கள் பெயரிலேயே இவ்வாறு
இட்டுக் கட்டுவதற்கு இவர்களுக்கு வெட்கமில்லை.
நபிவழியை ஓரங்கட்டிய ஷாஃபி
أَنَّ الشَّافِعِيَّ صَلَّى الصُّبْحَ عِنْدَ قَبْرِهِ فَلَمْ
يَقْنُتْ ، فَقِيلَ لَهُ لِمَ ؟ قَالَ : تَأَدُّبًا مَعَ صَاحِبِ هَذَا الْقَبْرِ
. وَزَادَ غَيْرُهُ أَنَّهُ لَمْ يَجْهَرْ بِالْبَسْمَلَةِ .
(رد المحتار - (1 /
134(
ஷாஃபி அவர்கள் அபூஹனீஃபாவின் கப்ருக்கு அருகே சுப்ஹு
தொழுதார்கள். அப்போது குனூத் ஓதவில்லை. ஏன் என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ""இந்தக் கப்ரில் இருப்பவரை மதிப்பதற்காக'' என்று விடையளித்தார்கள். இவ்வாறே பிஸ்மியைச் சப்தமின்றி ஓதினார்கள்.
துர்ருல் முக்தார் விரிவுரை, பக்கம்: 51
சுப்ஹு தொழுகையில் குனூத்
ஓதுவது நபிவழி என்பது ஷாஃபி இமாம் அவர்களின் நம்பிக்கை. அது போல் பிஸ்மியை சப்தமாக
ஓதுவது நபிவழி என்று அவர்கள் நம்பினார்கள்.
ஷாஃபி அவர்கள் எதை நபிவழி
என்று நம்பினார்களோ அதை ஒரு மனிதருக்காக விட்டு விட்டார்கள் என்றால் நபியை விட அபூஹனீஃபாவுக்கு
அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகின்றது.
உண்மையான இமாம்கள் ஒருக்காலும், உயிரே போனாலும் நபிவழியை எவருக்காகவும்
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஷாஃபி இமாமை சந்தர்ப்பவாதியாகவும், கொள்கைப் பிடிப்பில்லாதவராகவும்
காட்டி, தங்கள் இமாமுக்கு மதிப்பை
உயர்த்தத் திட்டமிடுகின்றார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.
அபூ பக்ர் சித்தீக்கைப் போன்றவர்
كيف لا وهو كالصديق رضي الله عنه
(الدر المختار ج: 1 ص: 57)
அவர் அபூ பக்கர் (ரலி) அவர்களைப் போன்றவராவார் (நூல் : துர்ருல் முஹ்தார்
பா : 1 ப : 57)
அருமைச் ஸஹாபாக்களுக்கு நிகராக
யாரும் வரமுடியாது. அதிலும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள்
அபூ பக்கர் (ரலி) அவர்களாவார்கள்.
ஹிஜ்ரத் செய்தோரிலும்,
அன்ஸôர்களிலும் முந்திச் சென்ற
முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக்
கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை
அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள்
என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அத் 9 )
ஸஹாபாக்களுக்கு நிகராக யாரும்
ஆகமுடியாது என்பதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு
அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களுடைய சாட்சியம் அவர்களின்
சத்தியத்தையும், அவர்களுடைய சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) நூல் : புகாரி (2651)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு
தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான)
அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்
குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தர்மம் எட்ட முடியாது.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ
(ரழி) நூல் : புகாரி 3673
தங்களுடைய மத்ஹப் இமாமை மற்றவர்களை
விட உயர்த்திக் கூற வேண்டும் என்ற இயக்க வெறியே இது போன்ற வார்த்தைகளுக்கு அடிப்படைக்
காரணமாகும்.
No comments:
Post a Comment