தஃப்ஸீர் விளக்கம் : 11
.....நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை''
என்று கூறி விடாதீர்கள் ( வசனத்தின் விளக்கம் )
يَا أَيُّهَا
الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّـهِ فَتَبَيَّنُوا وَلَا
تَقُولُوا لِمَنْ أَلْقَىٰ إِلَيْكُمُ السَّلَامَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ
عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا فَعِندَ اللَّـهِ مَغَانِمُ كَثِيرَةٌ ۚ كَذَٰلِكَ
كُنتُم مِّن قَبْلُ
فَمَنَّ اللَّـهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوا ۚ إِنَّ اللَّـهَ
كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿٩٤﴾
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்!
உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக
"நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள்
உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான்.
எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
( அல் குர் ஆன் 4:94 )
விளக்கம் :
عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ لَقِيَ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ رَجُلاً فِي غُنَيْمَةٍ لَهُ
فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ . فَأَخَذُوهُ فَقَتَلُوهُ وَأَخَذُوا تِلْكَ
الْغُنَيْمَةَ فَنَزَلَتْ { وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ
السَّلَمَ لَسْتَ مُؤْمِنًا} وَقَرَأَهَا ابْنُ عَبَّاسٍ السَّلاَمَ .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது சிறு ஆட்டு மந்தை(யை
மேய்த்துக்கொண்டு அதன்) உடன் இருந்தார். அப்போது (ஒரு படைப்பிரிவில் வந்த) முஸ்லிம்கள்
அவரை (வழியில்) சந்தித்தனர். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (இஸ்லாமிய முகமன்)
கூறி, (தம்மை முஸ்லிம் என இனம் காட்டி)னார்.
ஆனால், அவரைப் பிடித்து அவர்கள் கொன்றுவிட்டனர்;
அந்த ஆட்டு மந்தையையும் எடுத்துக்கொண்டனர்.
அப்போதுதான்,
"உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியவரிடம்
"நீ இறைநம்பிக்கையாளன் அல்லன்" என்று இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளைப்
பெறுவதற்காகக் கூறி (அவரைக் கொன்று)விடாதீர்கள்" (4:94) எனும் வசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில்
வந்துள்ளது.
இந்த (4:94ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள "அஸ்ஸலம்" எனும் சொல்லை,
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அஸ்ஸலாம்" என்று
ஓதினார்கள். (பொருள் ஒன்றே.)
நூல் : முஸ்லிம் ( 4591 )
இதே செய்தி பின்வரும் நூல்களிலும் பதிவாகி
உள்ளது
புஹாரி ( 4591 ) அபூதாவூத் ( 3974
) தாரமீ ( 3030 ) அஹ்மத் ( 2986,2462,2023 )
No comments:
Post a Comment