இஸ்லாமிய
அடிப்படைக் கல்வி
அறிமுகம்
இஸ்லாமிய அடிப்படைக் கல்வி
எனும் இந்த நூல் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தினர் முதல் வெளியீடாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களிலும் முஸ்லிம்கள் நட்த்தும் பள்ளிக்கூடங்களிலும்
இஸ்லாத்தை உரிய முறையில் போதிக்க சரியான பாடத்திட்டம் இல்லை என்ற குறையை நீக்குவதற்காக
இப்பாடத் திட்டம் தயாரிக்கப்படுள்ளது.
மாணவர்கள் மட்டுமின்றி
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் கோட்பாடுகளையும் அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும்
பயன்படும் வகையில் இப்பாடத் திட்டம் வடிமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலை தொகுத்தவர்கள்
1. அப்துல் நாஸீர்
2. ஸஹ்ஃபுல்லாஹ் ( அல்லாஹ்
இருவர்க்கு அருள்புரிவானாக )
3. முஹம்மத் அப்பாஸ்
4. ரஹ்மத்துல்லாஹ்
போன்றோரின்
உழைப்பில் உருவான இந்த நூலை மக்கள் பயன்பெற வேண்டி சமூக தளங்களில் பதியப்படுகிறது.
அகீதா பகுதி
ஈமான்
என்றால் என்ன?
قَالَ فَأَخْبِرْنِي عَنِ الإِيمَانِ . قَالَ " أَنْ تُؤْمِنَ
بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ
بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ "
ஜிப்ரீல்( அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஈமான்(இறைநம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் (நாட்டமாகிய) விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர்(ரலி)
நூல் : முஸ்லிம் (9)
அல்லாஹ்வை நம்புதல்
அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
அல்லாஹ் வானத்தின் மீதுள்ள அர்ஷின் மீது இருக்கின்றான். இதற்கான சான்றுகள் வருமாறு :
வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும், (அல்குர்ஆன் 67:16.)
அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5).
قَالَ
وَكَانَتْ لِي جَارِيَةٌ تَرْعَى غَنَمًا لِي قِبَلَ أُحُدٍ وَالْجَوَّانِيَّةِ
فَاطَّلَعْتُ ذَاتَ يَوْمٍ فَإِذَا الذِّيبُ قَدْ ذَهَبَ بِشَاةٍ مِنْ غَنَمِهَا
وَأَنَا رَجُلٌ مِنْ بَنِي آدَمَ آسَفُ كَمَا يَأْسَفُونَ لَكِنِّي صَكَكْتُهَا صَكَّةً
فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَظَّمَ ذَلِكَ عَلَىَّ قُلْتُ
يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُعْتِقُهَا قَالَ " ائْتِنِي بِهَا "
. فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ لَهَا " أَيْنَ اللَّهُ " .
قَالَتْ فِي السَّمَاءِ . قَالَ " مَنْ أَنَا " . قَالَتْ
أَنْتَ رَسُولُ اللَّهِ . قَالَ " أَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ
"
அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை
செய்துவிடட்டுமா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை
என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது
அவளிடம், "அல்லாஹ் எங்கே
இருக்கின்றான்?" என்று நபியவர்கள்
கேட்டார்கள். அவள், "வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், "நான் யார்?" என்று கேட்டார்கள். அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்"
என்றாள். அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை
செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய
(முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள்.
அறிவிப்பவர்
: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல் : முஸ்லிம் (836)
அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
நூல் : முஸ்லிம் (836)
அல்லாஹ் தூணிலும் இருக்கின்றான். துரும்பிலும் இருக்கின்றான் என்று நம்புவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?
قَالَ لَا تَخَافَا
إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَى(46) سورة طه
""அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 20:46)
இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதன் கருத்து அவன் நம்மைக் கண்காணித்து நாம் செய்யும் செயல்களை பாதுகாத்து வைத்துக் கொள்வான் என்பதாகும்.
அர்ஷ்
அர்ஷ் என்பது அவனுடைய மிகப் பிரம்மாண்டமான ஆசனமாகும்.
قُلْ مَنْ رَبُّ
السَّمَاوَاتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ(86) سورة المؤمنون
""ஏழு
வானங்களுக்கும் அதிபதி, மகத்தான
அர்ஷுக்கும் அதிபதி யார்?'' எனக்
கேட்பீராக! (அல்குர்ஆன் 23:86)
وَسِعَ كُرْسِيُّهُ
السَّمَاوَاتِ وَالْأَرْضَ ...(255) سورة البقرة
அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். (அல்குர்ஆன் 2:255)
وَالْمَلَكُ عَلَى
أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ(17)
سورة الحاقة
அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள். (அல்குர்ஆன் 69:17)
அல்லாஹ்வின் தோற்றம்
இறைவன் உருவமற்றவன் என்று கூறுவது இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கையாகும்.
அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது, அவனுடைய தோற்றத்தை மறுமையில் நல்லடியார்கள் காண்பார்கள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ
نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قُلْنَا يَا
رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ " هَلْ
تُضَارُونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ وَالْقَمَرِ إِذَا كَانَتْ صَحْوًا ".
قُلْنَا لاَ. قَالَ " فَإِنَّكُمْ لاَ تُضَارُونَ فِي رُؤْيَةِ رَبِّكُمْ
يَوْمَئِذٍ، إِلاَّ كَمَا تُضَارُونَ فِي رُؤْيَتِهِمَا ـ ثُمَّ قَالَ ـ يُنَادِي
مُنَادٍ لِيَذْهَبْ كُلُّ قَوْمٍ إِلَى مَا كَانُوا يَعْبُدُونَ. فَيَذْهَبُ
أَصْحَابُ الصَّلِيبِ مَعَ صَلِيبِهِمْ، وَأَصْحَابُ الأَوْثَانِ مَعَ
أَوْثَانِهِمْ، وَأَصْحَابُ كُلِّ آلِهَةٍ مَعَ آلِهَتِهِمْ حَتَّى يَبْقَى مَنْ
كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ، وَغُبَّرَاتٌ مِنْ أَهْلِ
الْكِتَابِ، ثُمَّ يُؤْتَى بِجَهَنَّمَ تُعْرَضُ كَأَنَّهَا سَرَابٌ فَيُقَالُ
لِلْيَهُودِ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ عُزَيْرَ ابْنَ
اللَّهِ. فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ لِلَّهِ صَاحِبَةٌ وَلاَ وَلَدٌ
فَمَا تُرِيدُونَ قَالُوا نُرِيدُ أَنْ تَسْقِيَنَا، فَيُقَالُ اشْرَبُوا فَيَتَسَاقَطُونَ
فِي جَهَنَّمَ ثُمَّ يُقَالُ لِلنَّصَارَى مَا كُنْتُمْ تَعْبُدُونَ فَيَقُولُونَ
كُنَّا نَعْبُدُ الْمَسِيحَ ابْنَ اللَّهِ. فَيُقَالُ كَذَبْتُمْ لَمْ يَكُنْ
لِلَّهِ صَاحِبَةٌ وَلاَ وَلَدٌ، فَمَا تُرِيدُونَ فَيَقُولُونَ نُرِيدُ أَنْ
تَسْقِيَنَا. فَيُقَالُ اشْرَبُوا. فَيَتَسَاقَطُونَ حَتَّى يَبْقَى مَنْ
كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ أَوْ فَاجِرٍ فَيُقَالُ لَهُمْ مَا
يَحْبِسُكُمْ وَقَدْ ذَهَبَ النَّاسُ فَيَقُولُونَ فَارَقْنَاهُمْ وَنَحْنُ
أَحْوَجُ مِنَّا إِلَيْهِ الْيَوْمَ وَإِنَّا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي
لِيَلْحَقْ كُلُّ قَوْمٍ بِمَا كَانُوا يَعْبُدُونَ. وَإِنَّمَا نَنْتَظِرُ
رَبَّنَا ـ قَالَ ـ فَيَأْتِيهِمُ الْجَبَّارُ. فَيَقُولُ أَنَا رَبُّكُمْ.
فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا. فَلاَ يُكَلِّمُهُ إِلاَّ الأَنْبِيَاءُ
فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ آيَةٌ تَعْرِفُونَهُ فَيَقُولُونَ
السَّاقُ. فَيَكْشِفُ عَنْ سَاقِهِ فَيَسْجُدُ لَهُ كُلُّ مُؤْمِنٍ، وَيَبْقَى
مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ رِيَاءً وَسُمْعَةً، فَيَذْهَبُ كَيْمَا يَسْجُدَ فَيَعُودُ
ظَهْرُهُ طَبَقًا وَاحِدًا، ثُمَّ يُؤْتَى بِالْجَسْرِ فَيُجْعَلُ بَيْنَ ظَهْرَىْ
جَهَنَّمَ ". قُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْجَسْرُ قَالَ
" مَدْحَضَةٌ مَزِلَّةٌ، عَلَيْهِ خَطَاطِيفُ وَكَلاَلِيبُ وَحَسَكَةٌ
مُفَلْطَحَةٌ، لَهَا شَوْكَةٌ عُقَيْفَاءُ تَكُونُ بِنَجْدٍ يُقَالُ لَهَا
السَّعْدَانُ، الْمُؤْمِنُ عَلَيْهَا كَالطَّرْفِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ
وَكَأَجَاوِيدِ الْخَيْلِ وَالرِّكَابِ، فَنَاجٍ مُسَلَّمٌ وَنَاجٍ مَخْدُوشٌ
وَمَكْدُوسٌ فِي نَارِ جَهَنَّمَ، حَتَّى يَمُرَّ آخِرُهُمْ يُسْحَبُ سَحْبًا،
فَمَا أَنْتُمْ بِأَشَدَّ لِي مُنَاشَدَةً فِي الْحَقِّ، قَدْ تَبَيَّنَ لَكُمْ
مِنَ الْمُؤْمِنِ يَوْمَئِذٍ لِلْجَبَّارِ، وَإِذَا رَأَوْا أَنَّهُمْ قَدْ
نَجَوْا فِي إِخْوَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا إِخْوَانُنَا كَانُوا يُصَلُّونَ مَعَنَا
وَيَصُومُونَ مَعَنَا وَيَعْمَلُونَ مَعَنَا. فَيَقُولُ اللَّهُ تَعَالَى
اذْهَبُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ إِيمَانٍ
فَأَخْرِجُوهُ. وَيُحَرِّمُ اللَّهُ صُوَرَهُمْ عَلَى النَّارِ، فَيَأْتُونَهُمْ
وَبَعْضُهُمْ قَدْ غَابَ فِي النَّارِ إِلَى قَدَمِهِ وَإِلَى أَنْصَافِ
سَاقَيْهِ، فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا، ثُمَّ يَعُودُونَ فَيَقُولُ اذْهَبُوا
فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ فَأَخْرِجُوهُ.
فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا، ثُمَّ يَعُودُونَ فَيَقُولُ اذْهَبُوا فَمَنْ
وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ.
فَيُخْرِجُونَ مَنْ عَرَفُوا ". قَالَ أَبُو سَعِيدٍ فَإِنْ لَمْ
تُصَدِّقُونِي فَاقْرَءُوا {إِنَّ
اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا} "
فَيَشْفَعُ النَّبِيُّونَ وَالْمَلاَئِكَةُ وَالْمُؤْمِنُونَ فَيَقُولُ
الْجَبَّارُ بَقِيَتْ شَفَاعَتِي. فَيَقْبِضُ قَبْضَةً مِنَ النَّارِ فَيُخْرِجُ
أَقْوَامًا قَدِ امْتُحِشُوا، فَيُلْقَوْنَ فِي نَهَرٍ بِأَفْوَاهِ الْجَنَّةِ
يُقَالُ لَهُ مَاءُ الْحَيَاةِ، فَيَنْبُتُونَ فِي حَافَتَيْهِ كَمَا تَنْبُتُ
الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، قَدْ رَأَيْتُمُوهَا إِلَى جَانِبِ الصَّخْرَةِ
إِلَى جَانِبِ الشَّجَرَةِ، فَمَا كَانَ إِلَى الشَّمْسِ مِنْهَا كَانَ أَخْضَرَ،
وَمَا كَانَ مِنْهَا إِلَى الظِّلِّ كَانَ أَبْيَضَ، فَيَخْرُجُونَ كَأَنَّهُمُ
اللُّؤْلُؤُ، فَيُجْعَلُ فِي رِقَابِهِمُ الْخَوَاتِيمُ فَيَدْخُلُونَ الْجَنَّةَ فَيَقُولُ
أَهْلُ الْجَنَّةِ هَؤُلاَءِ عُتَقَاءُ الرَّحْمَنِ أَدْخَلَهُمُ الْجَنَّةَ
بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلاَ خَيْرٍ قَدَّمُوهُ. فَيُقَالُ لَهُمْ لَكُمْ
مَا رَأَيْتُمْ وَمِثْلُهُ مَعَهُ ".
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், '(மேகமூட்டமில்லாது) வானம் தெளிவாக இருக்கையில் சூரியனையும்
சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியத்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'இல்லை' என்று பதிலளித்தோம். இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப்
போன்றே அந்த நாளில் உங்களுடைய இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) விளக்கினார்கள்.
(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப்
பின்தொடர்ந்து செல்லட்டும்' என்று அழைப்புவிடுப்பார். அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவையுடனும், சிலை வணங்கிகள் தங்கள் சிலைகளுடனும், ஒவ்வொரு (பொய்த்) தெய்வ வழிபாட்டார்கள் தத்தம் கடவுள்களுடனும்
செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து
வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர்.
பின்னர் நரகம் கொணரப்பட்டுக் கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?' என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கே மனைவியோ மக்களோ
இருக்கவில்லை' என்று சொல்லப்படும். பிறகு அவர்களிடம், 'இப்போது நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள், 'எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!' என்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம்
காட்டப்பட்டு), 'குடியுங்கள்' என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும்போது) அவர்கள் நரகத்தில்
விழுந்து விடுவார்கள். பின்னர் கிறிஸ்தவர்களிடம், 'நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்கப்படும் அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள்; அல்லாஹ்வுக்கு மனைவியோ மக்களோ இருக்கவில்லை' என்று கூறப்பட்ட பின் 'நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே நாங்கள் விரும்புகிறோம்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம் (கானலைப் போன்று
காட்சி தரும் நரகத்தைக் காட்டி) 'குடியுங்கள்!' என்று கூறப்படும். அப்போது நரகத்தில் அவர்களும் விழுந்துவிடுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து)
கொண்டிருந்த நல்லோர், அல்லது
(அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர்.
அவர்களிடம் 'மக்கள் (அனைவரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால்) சென்றார்களே!
நீங்கள் மட்டும் ஏன் இங்கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், '(உலகத்தில்) நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி
செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும் (அவர்களுடன்
ஒட்டி உறவாடிக் கொண்டிராமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். (இப்போது மட்டும் அவர்கள்
பின்னால் நாங்கள் செல்வோமா?) இங்கு ஓர் அழைப்பாளர்' 'ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்த
அவர்களுடன் சேர்ந்துகொள்ளட்டும் என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த)
எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறுவார்கள். அப்போது சர்வ வல்லமை படைத்தவ(னான இறைவ)ன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றம் அல்லாத
வேறொரு தோற்றத்தில் அவர்களிடம் முதல் முறையாக வந்து, 'நானே உங்கள் இறைநம்பிக்கையாளர்கள், 'நீயே எங்கள் இறைவன்' என்று சொல்வார்கள். அப்போது இறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர
வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, 'அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம்
உண்டா?' என்று (ஒருவர்) கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், '(இறைவனி) கால் (பாதம்) தான்' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் தன்னுடைய காலை வெளிப்படுத்துவான்.
இறைநம்பிக்கையாளர்கள் யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும்
பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள் மட்டுமே
அப்போது எஞ்சியிருப்பார்கள்; அவர்கள் சிரவணக்கம் செய்ய முற்படுவார்கள். ஆனால், அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று
மாறிவிடும். (அவர்களால் சிரம் வணக்கம் செய்ய முடியாது.)78
பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு, நரகத்தின் மேலே கொண்டுவைக்கப்படும். (இவ்வாறு நபி(ஸல்) அவர்கள்
சொன்னபோது,) நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன பாலம்?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'அது (கால்கள்) வழுக்குமிடம்; சறுக்குமிடம்; அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும்.
அந்த முட்கள் வளைந்திருக்கும். 'நஜ்த்' பகுதியில் முளைக்கும் அவை 'கருவேல மர முற்கள்' எனப்படும்' என்றார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) இறைநம்பிக்கையாளர் அந்தப்
பாலத்தை கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்)
கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பிவிடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும்
உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள்
கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார். பின்னர், தாம் தப்பித்துவிட்டோம் என்பதை இறைநம்பிக்கையாளர்கள் காணும்போது
தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள்.
அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்கத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம்
வலியுறுத்திக் கேட்டிருக்கமாட்டீர்கள். அப்போது அவர்கள், 'எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்; எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள்
(எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)' என்று வேண்டுவார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், 'நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை
இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள்.
அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான்.
அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தம் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரம்னுள் கிடப்பார்கள்.
உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகு மீண்டும்
(இறைவனிடம்) செல்வார்கள். 'எவருடைய உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறைநம்பிக்கை உள்ளதெனக்
காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்' என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு
மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், 'எவருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ
அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்' என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை
(அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூ ஸயீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை) நீங்கள் நம்பாவிட்டால், 'நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவு கூட அநீதி இழைக்கமாட்டான்.
அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை இரட்டிப்பாக்குவான்' எனும் (திருக்குர்ஆன் 04:40 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகியோர் (தத்தம் தகுதிக்கேற்ப) பரிந்துரை
செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்த (இறை)வன் '(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கிறது' என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை
வெளியேற்றுவான். அவர்கள் கரிந்து போயிருப்பார்கள். எனவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள் போடப்படுவார்கள். அதற்கு
'ஜீவ நீர்' ('மாஉல் ஹயாத்') என்று பெயர். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர்
முளைப்பதைப் போன்று நதியின் இரண்டு மருங்கிலும் முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள்.
பாறையில் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப் பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும், நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.
ஆக, இவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும்போது முத்தைப் போன்று
(புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களின் கழுத்தில் (நரகத்திலிரந்து விடுதலை
பெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள் நுழைவார்கள்.
அப்போது சொர்க்கவாசிகள் (இவர்களைப் பார்த்து), 'இவர்கள் பேரருளாளனால் விடுதலை செய்யப்பட்டவர்கள்; இவர்கள் எந்த நற்செயலும் புரியாமல், எந்த நன்மையும் ஏற்கெனவே செய்திராமல் அவனே இவர்களைச் சொர்க்கத்தினுள்
பிரவேசிக்கச் செய்தான்' என்று கூறுவர். பிறகு (அவர்களிடம்) நீங்கள் காண்கிறீர்களே இதுவும்
உங்களுக்கு உண்டு; இதைப் போன்று
இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு' என்று (நற்செய்தி) சொல்லப்படும்.
நூல் : புஹாரி (
7439 )
இறைவனுக்கு நாமாக உருவத்தைக் கற்பிக்கக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான் :
لَيْسَ كَمِثْلِهِ
شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ(11) سورة الشورى
அவனைப் போல்
எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)
அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?
இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது
அல்லாஹ் கூறுகிறான் :
அல்லாஹ்வைப் பார்க்கமுடியுமா?
இவ்வுலகில் யாரும் அல்லாஹ்வைப் காண முடியாது
அல்லாஹ் கூறுகிறான் :
لَا تُدْرِكُهُ
الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ(103)
سورة الأنعام
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் 6:103)
وَلَمَّا جَاءَ مُوسَى
لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ قَالَ رَبِّ أَرِنِي أَنظُرْ إِلَيْكَ قَالَ
لَنْ تَرَانِي وَلَكِنْ انظُرْ إِلَى الْجَبَلِ فَإِنْ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ
تَرَانِي فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى
صَعِقًا فَلَمَّا أَفَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ
الْمُؤْمِنِينَ(143) سورة الأعراف
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸô வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ""என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறை வன்) ""என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸô மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது ""நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார் (அல்குர்ஆன் 7:143)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي ذَرٍّ،
قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ
" نُورٌ أَنَّى أَرَاهُ " .
நபி(ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா? என்று கேட்கப்பட்டபோது அவனோ ஒளியானவன் நான் அவனை எப்படிப் பார்க்கமுடியும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
நூல் : முஸ்லிம் (291)
மறுமையில் நல்லடியார்கள் இறைவனைக் காண்பார்கள்.
وُجُوهٌ يَوْمَئِذٍ
نَاضِرَةٌ(22)إِلَى رَبِّهَا نَاظِرَةٌ(23) سورة القيامة
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும். (அல்குர்ஆன் 75:22,23)
عَنْ
أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا فِي زَمَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا يَا رَسُولَ اللَّهِ، هَلْ نَرَى رَبَّنَا
يَوْمَ الْقِيَامَةِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نَعَمْ، هَلْ تُضَارُّونَ
فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ، ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ ".
قَالُوا لاَ. قَالَ " وَهَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ
لَيْلَةَ الْبَدْرِ، ضَوْءٌ لَيْسَ فِيهَا سَحَابٌ ". قَالُوا لاَ.
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ
اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ، إِلاَّ كَمَا تُضَارُّونَ فِي
رُؤْيَةِ أَحَدِهِمَا
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் சிலர் அல்லாஹ்வின்தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?
என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஆம்! காண்பீர்கள். மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரையொருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டார்கள். மக்கள் இல்லை என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேகமே இல்லாத பவுர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவினைப் பார்ப்பதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா? என்று கேட்டனர். மக்கள் (அப்போதும்) இல்லை என்று பதிலளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துச் செல்லாதது போலவே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வைக் காணவும் முண்டியடிக்க மாட்டீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)
நூல் : புகாரீ (4581)
காஃபிர்கள் மறுமையில் இறைவனைப் பார்ப்பதை விட்டும் திரையிடப்படுவார்கள்.
كَلَّا إِنَّهُمْ عَنْ
رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ(15) سورة المطففين
அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 83:15)
அழகிய திருநாமங்கள்
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا وَذَرُوا الَّذِينَ يُلْحِدُونَ فِي أَسْمَائِهِ سَيُجْزَوْنَ مَا كَانُوا يَعْمَلُونَ(180) سورة الأعراف
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்!
قُلْ ادْعُوا اللَّهَ أَوْ ادْعُوا الرَّحْمَانَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا(110) سورة الإسراء
""அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவ னுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! உமது பிரார்த் தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெது வாகவும் செய்யாதீர்! இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியைத் தேடுவீராக! (அல்குர்ஆன் 17:110)
அவன் ஒருவனே!
وَإِلَهُكُمْ إِلَهٌ
وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَانُ الرَّحِيمُ(163) سورة البقرة
உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரு மில்லை. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:163)
شَهِدَ اللَّهُ أَنَّهُ
لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُوْلُوا الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ
لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(18) سورة آل عمران
""தன்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்க ளும், நீதியை நிலை நாட்டும் அறிவுடை யோரும் (உறுதி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாரு மில்லை. மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 3:18)
ذَلِكُمْ اللَّهُ
رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى
كُلِّ شَيْءٍ وَكِيلٌ(102) سورة الأنعام
அவனே உங்கள்
இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு
யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே
வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.
(அல்குர்ஆன் 6:102)
قُلْ لَوْ كَانَ مَعَهُ
آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا(42)
سورة الإسراء
""அவர்கள் கூறுவது போல் அவனுடன் பல கடவுள்கள் இருந்திருந்தால் அவர்களும் அர்ஷுடையவ(இறை) வனிடம் (சரணடைய) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:42)
No comments:
Post a Comment