அத்தியாயம் : 3 ( பகுதி 05 )
كتاب العلم
கல்வியின் சிறப்பு
(41)باب السَّمَرِ بِالْعِلْمِ
பாடம் : 41
இரவில் (உறங்கச் செல்லும்
முன்) கல்வி கற்பிப்பதற்காகப் பேசுதல்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي
اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ سَالِمٍ، وَأَبِي، بَكْرِ بْنِ سُلَيْمَانَ بْنِ أَبِي حَثْمَةَ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه
وسلم الْعِشَاءَ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ فَقَالَ "
أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ، فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ
يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ ".
116. அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம்
வாழ்நாளின் கடைசிக் காலத்தில் (ஒருநாள்) எங்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள். சலாம்
கொடுத்து முடிந்ததும் எழுந்து நின்று, இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின்
ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்க
மாட்டார்கள் என்று கூறினார்கள்.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ
حَدَّثَنَا الْحَكَمُ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ زَوْجِ
النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا
فِي لَيْلَتِهَا، فَصَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْعِشَاءَ، ثُمَّ جَاءَ
إِلَى مَنْزِلِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، ثُمَّ
قَالَ " نَامَ الْغُلَيِّمُ ". أَوْ كَلِمَةً تُشْبِهُهَا، ثُمَّ
قَامَ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ
رَكَعَاتٍ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ ـ
أَوْ خَطِيطَهُ ـ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
117. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
என் சிறிய தாயாரும் நபி
(ஸல்) அவர்களின் துணைவியாருமான மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் ஓர்
இரவில் நான் தங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்களும்
தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுவித்து விட்டுப் பின்னர்
தமது வீட்டிற்கு வந்து நான்கு ரகஅத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர்
எழுந்து சின்னப் பையன் தூங்கிவிட்டானா? அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள்.
உடனே நான் எழுந்து (அவர்களுடன்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் போய் நின்றுகொண்டேன். உடனே
(தொழுது கொண்டிருக்கும்போதே) என்னை இழுத்து தம் வலப்பக்கத்தில் நிறுத்திவிட்டு (முதலில்)
ஐந்து ரக்அத்களும் பின்னர் இரண்டு ரக்அத்களும் தொழுதுவிட்டு, அவர்களின் குறட்டை சப்தத்தை நான் கேட்குமளவுக்கு
(ஆழ்ந்து) உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
(42)باب حِفْظِ الْعِلْمِ
பாடம் : 42
கற்றதை மனனம் செய்தல்.
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ،
قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ،
وَلَوْلاَ آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا، ثُمَّ يَتْلُو
{إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ} إِلَى
قَوْلِهِ {الرَّحِيمُ} إِنَّ إِخْوَانَنَا مِنَ الْمُهَاجِرِينَ كَانَ
يَشْغَلُهُمُ الصَّفْقُ بِالأَسْوَاقِ، وِإِنَّ إِخْوَانَنَا مِنَ الأَنْصَارِ
كَانَ يَشْغَلُهُمُ الْعَمَلُ فِي أَمْوَالِهِمْ، وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ
يَلْزَمُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِشِبَعِ بَطْنِهِ وَيَحْضُرُ مَا
لاَ يَحْضُرُونَ، وَيَحْفَظُ مَا لاَ يَحْفَظُونَ.
118. அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அபூஹுரைரா அதிகமாக நபிமொழிகளை
அறிவிக்கிறார் என்று மக்கள் (குறையாகக்) கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு
வசனங்கள் மட்டும் இல்லையாயின் நான் ஒரு நபிமொழியைக்கூட அறிவித்திருக்க மாட்டேன். அந்த
வசனங்கள் வருமாறு:
நாம் இறக்கியருளிய தெளிவான
அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நாம் வேதத்தில்
எடுத்தரைத்த பின்னரும் எவர் மறைக்கின்றார்களோ அவர்களைத் திண்ணமாக அல்லாஹ் சபிக்கின்றான்.
மேலும் சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றார்கள். ஆனால், யார் (இத்தவறிலிருந்து) திருந்தி, தம் செயல்முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்து வைத்தவற்றை) எடுத்துரைக்கின்றார்களோ
அவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் உள்ளேன்
(2:159, 160).
நம்முடைய முஹாஜிர் சகோதரர்களின்
கவனத்தை கடைவீதிகளில் அவர்கள் செய்துவந்த வியாபாரம் ஈர்த்துக் கொண்டது. நம்முடைய அன்சாரி
சகோதரர்களின் கவனத்தை அவர்களுடைய (விளைநிலம் போன்ற) செல்வங்களைப் பராமரிக்கும் பணி
ஈர்த்துக் கொண்டது. ஆனால், (இந்த) அபூஹுரைராவோ வயிறு நிரம்பினால் போதுமென்ற திருப்தியுடன் (வேறு அலுவல்களில்
கவனம் செலுத்தாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே ஒட்டிக்கொண்டிருந்தேன்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மற்றவர்கள் ஆஜராகாத இடங்களிலெல்லாம் நான் ஆஜராகி
விடுவேன்; மற்றவர்கள் மனனம் செய்யாதவற்றையெல்லாம்
நான் மனனம் செய்து கொண்டிருந்தேன்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ أَبُو مُصْعَبٍ،
قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ أَبِي
ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قُلْتُ يَا
رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ حَدِيثًا كَثِيرًا أَنْسَاهُ. قَالَ
" ابْسُطْ رِدَاءَكَ " فَبَسَطْتُهُ. قَالَ فَغَرَفَ بِيَدَيْهِ
ثُمَّ قَالَ " ضُمُّهُ " فَضَمَمْتُهُ فَمَا نَسِيتُ شَيْئًا
بَعْدَهُ.
119. அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து
ஏராளமான பொன்மொழிகளைக் கேட்கின்றேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகின்றேன் என நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். நபி (ஸல்)
அவர்கள், உனது மேலங்கியை விரி! என்று சொல்ல, உடனே நான் அதை விரித்தேன். பிறகு நபி
(ஸல்) அவர்கள் தமது கைகளால் (எதையோ அள்ளுவது போன்று சைகை செய்து) அள்ளி(க் கொட்டிவிட்டு), (நெஞ்சோடு) அணைத்துக் கொள்! என்றார்கள்.
உடனே நான் அதை (என் நெஞ்சோடு) அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதையும் மறந்ததே
இல்லை.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنِ
ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وِعَاءَيْنِ، فَأَمَّا
أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا
الْبُلْعُومُ.
120. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களிடமிருந்து இரண்டு பை(செய்தி)களை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே)
பரப்பிவிட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும்
அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.)
(43)باب الإِنْصَاتِ لِلْعُلَمَاءِ
பாடம் : 43
அறிஞர்கள் கூறுவதை அமைதியாக
செவியேற்பது.
حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ
أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ جَرِيرٍ، أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ فِي حَجَّةِ الْوَدَاعِ "
اسْتَنْصِتِ النَّاسَ " فَقَالَ " لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا
يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ ".
121. ஜரீர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும்
ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றியபோது) என்னிடம் மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!
என்று கூறிவிட்டு, (மக்களே!) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும்
இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.
(44)باب مَا يُسْتَحَبُّ لِلْعَالِمِ إِذَا سُئِلَ أَىُّ
النَّاسِ أَعْلَمُ فَيَكِلُ الْعِلْمَ إِلَى اللَّهِ
பாடம் : 44
ஓர் அறிஞரிடம் மக்களிலேயே
மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டால் இதைப்
பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு என்று இறைவனிடம் சாட்டிவிடுவதே நன்று.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ
حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ
جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ
أَنَّ مُوسَى لَيْسَ بِمُوسَى بَنِي إِسْرَائِيلَ، إِنَّمَا هُوَ مُوسَى آخَرُ.
فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم قَالَ " قَامَ مُوسَى النَّبِيُّ خَطِيبًا فِي بَنِي
إِسْرَائِيلَ، فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ.
فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، فَأَوْحَى
اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ
أَعْلَمُ مِنْكَ. قَالَ يَا رَبِّ وَكَيْفَ بِهِ فَقِيلَ لَهُ احْمِلْ حُوتًا
فِي مِكْتَلٍ فَإِذَا فَقَدْتَهُ فَهْوَ ثَمَّ، فَانْطَلَقَ وَانْطَلَقَ بِفَتَاهُ
يُوشَعَ بْنِ نُونٍ، وَحَمَلاَ حُوتًا فِي مِكْتَلٍ، حَتَّى كَانَا عِنْدَ
الصَّخْرَةِ وَضَعَا رُءُوسَهُمَا وَنَامَا فَانْسَلَّ الْحُوتُ مِنَ الْمِكْتَلِ
فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا، وَكَانَ لِمُوسَى وَفَتَاهُ عَجَبًا،
فَانْطَلَقَا بَقِيَّةَ لَيْلَتِهِمَا وَيَوْمِهِمَا فَلَمَّا أَصْبَحَ قَالَ
مُوسَى لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا، لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا
نَصَبًا، وَلَمْ يَجِدْ مُوسَى مَسًّا مِنَ النَّصَبِ حَتَّى جَاوَزَ الْمَكَانَ
الَّذِي أُمِرَ بِهِ. فَقَالَ لَهُ فَتَاهُ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى
الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ، قَالَ مُوسَى ذَلِكَ مَا كُنَّا نَبْغِي،
فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا، فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ
إِذَا رَجُلٌ مُسَجًّى بِثَوْبٍ ـ أَوْ قَالَ تَسَجَّى بِثَوْبِهِ ـ فَسَلَّمَ
مُوسَى. فَقَالَ الْخَضِرُ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا
مُوسَى. فَقَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ. قَالَ هَلْ
أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا قَالَ إِنَّكَ لَنْ
تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا، يَا مُوسَى إِنِّي عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ
عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ أَنْتَ، وَأَنْتَ عَلَى عِلْمٍ عَلَّمَكَهُ لاَ
أَعْلَمُهُ. قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا، وَلاَ أَعْصِي لَكَ
أَمْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ لَيْسَ لَهُمَا
سَفِينَةٌ، فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ، فَكَلَّمُوهُمْ أَنْ يَحْمِلُوهُمَا،
فَعُرِفَ الْخَضِرُ، فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ، فَجَاءَ عُصْفُورٌ فَوَقَعَ
عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَنَقَرَ نَقْرَةً أَوْ نَقْرَتَيْنِ فِي الْبَحْرِ.
فَقَالَ الْخَضِرُ يَا مُوسَى، مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ
إِلاَّ كَنَقْرَةِ هَذَا الْعُصْفُورِ فِي الْبَحْرِ. فَعَمَدَ الْخَضِرُ إِلَى
لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ. فَقَالَ مُوسَى قَوْمٌ حَمَلُونَا
بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ
أَهْلَهَا قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ
تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ. فَكَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا.
فَانْطَلَقَا فَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ
بِرَأْسِهِ مِنْ أَعْلاَهُ فَاقْتَلَعَ رَأْسَهُ بِيَدِهِ. فَقَالَ مُوسَى
أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ
لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ـ قَالَ ابْنُ عُيَيْنَةَ وَهَذَا أَوْكَدُ ـ
فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا،
فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا، فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ
يَنْقَضَّ فَأَقَامَهُ. قَالَ الْخَضِرُ بِيَدِهِ فَأَقَامَهُ. فَقَالَ لَهُ
مُوسَى لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي
وَبَيْنِكَ ". قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَرْحَمُ
اللَّهُ مُوسَى، لَوَدِدْنَا لَوْ صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ
أَمْرِهِمَا ".
122. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (ஹிழ்ர் (அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா, இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூஸா அல்லர். அவர் வேறொரு மூஸா
என்று நவ்ஃப் அல்பகாலீ என்பார் கூறுகிறாரே? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இறைவிரோதியான அவர் பொய்யுரைத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
(ஒரு முறை) நபி மூஸா (அலை) அவர்கள் பனூ
இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்தபோது அவர்களிடம், மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா (அலை) அவர்கள் (நான் அறிந்தவரையில்)
நானே மிகவும் அறிந்தவன் என்று பதிலளித்து விட்டார்கள்.
ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா (அலை) அவர்கள் (இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு
என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். எனவே அல்லாஹ் (இல்லை) இரு கடல்கள் சங்கமிக்கும்
இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர் என்று
அறிவித்தான்.
மூஸா (அலை) அவர்கள் என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி? என்று கேட்டார்கள். அதற்கு, கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக்கொண்டு (அப்படியே கடலோரமாக நடந்து)
செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்
என்று அவர்களிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூஸா (அலை) அவர்கள் (தம்முடன்) தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும்
அழைத்துக்கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் (இருகடல்கள்
சங்கமிக்கும் இடத்திலிருந்த) ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து
உறங்கினர்.
கூடையிலிருந்த மீன் (உயிராகி) மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்து
விட்(டுச் சென்றுவிட்)டது. (இந்தப் பாதை உறங்கியெழுந்த) மூஸா (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய
உதவியாளருக்கும் வியப்பாய் அமைந்தது. (மீன் நழுவியதை உதவியாளர் கண்டிருந்தும் அதைக்
கூற மறந்து விட்டார்.) இந்நிலையில் அன்றைய மீதிப்பொழுதிலும் இரவிலும் அவர்கள் (தொடர்ந்து)
நடந்தனர். மறுநாள் பொழுது விடிந்தபோது மூஸா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் நமது காலைச்சிற்றுண்டியை
கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம் என்றார்கள். தமக்குக்
கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைக் கடக்கும்வரை மூஸா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும்
உணரவில்லை.
அவர்களுடைய உதவியாளர் நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை
ஷைத்தான்தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது
என்றார். மூஸா(அலை) அவர்கள்,
நாம் தேடிவந்த இடம் அதுதான் என்று கூறினார்கள்.
பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர்.
இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஓர் துணியால்
அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒருமனிதர் (ஹிழ்ர்) இருந்தார். மூஸா (அலை)
அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத)
சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்?) என்று கேட்டார்.
அதற்கு மூஸா (அலை) அவர்கள்,
நான் தான் மூஸா என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூஸாவா? என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள், ஆம் என்று பதிலளித்துவிட்டு, உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும்
(சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு ஹிழ்ர் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம், நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூஸா!
அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்.
அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்
என்று கூறினார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள்.
எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறுசெய்ய மாட்டேன் என்றார்கள்.
(முடிவில் மூசா, ஹிழ்ர் ஆகிய) இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால்
கடற்கரையோரமாக நடந்துசென்று கொண்டிருந்தபோது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது.
அப்போது அவர்கள் தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம்
கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) ஹிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள்.
எனவே, அவர்கள் இருவரையும் (தங்களது மரக்கலத்தில்)
கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.
அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது.
அப்போது மூஸா (அலை) அவர்களிடம் ஹிழ்ர் (அலை) அவர்கள் மூஸாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி
கொத்தியெடுத்த (நீரின்) அளவில்தான் உள்ளது என்று கூறினார்கள்.
(சற்று நேரம் கழிந்ததும்) ஹிழ்ர் (அலை)
அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த
இடத்தில் முளைக்குச்சியை அறைந்து)விட்டார்கள். (இதைக்கண்ட) மூஸா (அலை) அவர்கள் நம்மைக்
கட்டணம் ஏதுமில்லாமலேயே ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்திவிட்டீர்களே? என்று கேட்டார்கள்.
அதற்கு ஹிழ்ர் (அலை) அவர்கள்,
என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்கமுடியாது
என்று நான் (முன்பே) சொல்லவில்லையா?
என்று கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை)
அவர்கள், நான் மறந்துபோனதற்காக என்னைத் தண்டித்து
விடாதீர்கள் என்று கூறினார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
முதல் தடவை மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.
(பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து
வெளியேறி கடலோரமாக) நடந்துபோய்க் கொண்டிருக்கும்போது ஒரு சிறுவன் சிறுவர்கள் சிலருடன்
விளையாடிக்கொண்டிருந்தான். ஹிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந்தலையைப் திருகி தலையைத்
தணியே எடுத்துவிட்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்)
உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே? என்று கேட்டார்கள். அதற்கு ஹிழ்ர் (அலை) அவர்கள், நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்கமுடியாது என்று (முன்பே) நான்
உங்களிடம் சொல்லவில்லையா?
என்று கேட்டார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்
பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இம்முறை ஹிழ்ர் (அலை) அவர்கள் கூறியது, முதல்முறை கூறியதை விட கூடுதலான அழுத்தம் கொண்டதாகும்.
மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள்.
அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில்
அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக்கண்ட)
ஹிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரை தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூஸா (அலை) அவர்கள், நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே
என்றார்கள்.
ஹிழ்ர் (அலை) அவர்கள்,
இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய
கட்டம் என்று கூறினார்கள்.
(இந்த நிகழ்ச்சியை கூறி முடித்தபின்)
நபி (ஸல்) அவர்கள், மூஸா பொறுமையாக இருந்திருப்பாரேயானால்
அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே
என நாம் விரும்பினோம் என்று சொன்னார்கள்.
(45)باب مَنْ سَأَلَ
وَهْوَ قَائِمٌ عَالِمًا جَالِسًا
பாடம் : 45
அமர்ந்திருக்கும் அறிஞரிடம்
நின்று கொண்டு கேள்வி கேட்பது.
حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ
مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى
النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مَا الْقِتَالُ فِي
سَبِيلِ اللَّهِ فَإِنَّ أَحَدَنَا يُقَاتِلُ غَضَبًا، وَيُقَاتِلُ حَمِيَّةً.
فَرَفَعَ إِلَيْهِ رَأْسَهُ ـ قَالَ وَمَا رَفَعَ إِلَيْهِ رَأْسَهُ إِلاَّ
أَنَّهُ كَانَ قَائِمًا ـ فَقَالَ " مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ
اللَّهِ هِيَ الْعُلْيَا فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ ".
123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர்
(தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இனமாச்சர்யத்தினால் போரிடுகின்றார்.
இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே
போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்
என்று பதிலளித்தார்கள்.
கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப்பார்த்தார்கள்.
(46)باب السُّؤَالِ
وَالْفُتْيَا عِنْدَ رَمْىِ الْجِمَارِ
பாடம் : 46
(ஹஜ்ஜின் போது கல்லெறிய வேண்டிய இடங்களில்) கல்லெறியும் நேரத்தில்
மார்க்கத் தீர்ப்புக் கேட்பதும் பதிலளிப்பதும் (செல்லும்).
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ
الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم
عِنْدَ الْجَمْرَةِ وَهُوَ يُسْأَلُ، فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ نَحَرْتُ
قَبْلَ أَنْ أَرْمِيَ. قَالَ " ارْمِ وَلاَ حَرَجَ ". قَالَ
آخَرُ يَا رَسُولَ اللَّهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ. قَالَ "
انْحَرْ وَلاَ حَرَجَ ". فَمَا سُئِلَ عَنْ شَىْءٍ قُدِّمَ وَلاَ أُخِّرَ
إِلاَّ قَالَ افْعَلْ وَلاَ حَرَجَ.
124. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ராவில் (மக்களால்) கேள்வி கேட்கப்படுவதை
நான் கண்டேன். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்)
கல்எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை; இப்போது கல்லெறிந்து விடும்! என்றார்கள். மற்றொருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பே தலைமுடியை
மழித்து விட்டேன் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பரவாயில்லை; இப்போது குர்பானிகொடுத்து விடும்! என்றார்கள்.
(அன்றைய தினம் பிற்படுத்திச் செய்ய வேண்டிய
சில கிரியைகள்) முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்ய வேண்டிய
சில கிரியைகள்) பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம்
பரவாயில்லை; (விடுபட்டதை) செய்வீராக! என்றே சொன்னார்கள்.
(47) بَابُ قَوْلِ
اللَّهِ تَعَالَى: {وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلاَّ قَلِيلاً}
பாடம் : 47
உங்களுக்கு சிறிதளவு ஞானமே
கொடுக்கப்பட்டுள்ளது! எனும் (17:85ஆவது) இறைவசனம்.
حَدَّثَنَا قَيْسُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ
الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، سُلَيْمَانُ عَنْ إِبْرَاهِيمَ، عَنْ
عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَا أَنَا أَمْشِي، مَعَ النَّبِيِّ
صلى الله عليه وسلم فِي خَرِبِ الْمَدِينَةِ، وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ
مَعَهُ، فَمَرَّ بِنَفَرٍ مِنَ الْيَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ سَلُوهُ
عَنِ الرُّوحِ. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَسْأَلُوهُ لاَ يَجِيءُ فِيهِ بِشَىْءٍ
تَكْرَهُونَهُ. فَقَالَ بَعْضُهُمْ لَنَسْأَلَنَّهُ. فَقَامَ رَجُلٌ مِنْهُمْ
فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ، مَا الرُّوحُ فَسَكَتَ. فَقُلْتُ إِنَّهُ يُوحَى
إِلَيْهِ. فَقُمْتُ، فَلَمَّا انْجَلَى عَنْهُ، قَالَ {وَيَسْأَلُونَكَ عَنِ
الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُيتُمْ مِنَ الْعِلْمِ
إِلاَّ قَلِيلاً}. قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرَاءَتِنَا.
125. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (மக்கள் நடமாட்டமில்லாத)ஒரு பாழ்வெளியில்
சென்று கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் தம்முடனிருந்த பேரீச்ச மட்டையாலான கைத்தடியை
ஊன்றிக் கொண்டுவந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்துசென்றார்கள்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) அவரிடம் உயிரைப்
பற்றிக் கேளுங்கள்! என்றார். இன்னொருவர் அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்; நீங்கள் விரும்பாத (பதில்) ஏதும் அவரிடமிருந்து வந்து விடப்போகிறது
என்றார். இறுதியில் அவர்களில் சிலர் இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி)
கட்டாயம் அவரிடம் கேட்டேவிடுவோம் என்றனர். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து, அபுல்காசிமே! உயிர் (ரூஹ்) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக
இருந்தார்கள். அப்போது நான் நபியவர்களுக்கு இறைவனிடமிருந்து வேத அறிவிப்பு (வஹீ) அறிவிக்கப்படுகிறது
என்று கூறிக்கொண்டேன். (வேத அறிவிப்பின் போது ஏற்படும் சிரமநிலை விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது, (நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கின்றனர். கூறுக:
உயிர் என்பது என் இறைவளின் கட்டளையால் உருவானது. அவர்களுக்கு சிறிதளவு ஞானமே கொடுக்கப்பட்டுள்ளது!
எனும் (17:85ஆவது) இறைவசனத்தைக் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ்
(சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(உங்களுக்கு சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டள்ளது)
என்பதற்கு பதிலாக அவர்களுக்கு என்றுதான் எங்களது ஓதலில் அமைந்துள்ளது.
(48) بَابُ مَنْ تَرَكَ
بَعْضَ الاِخْتِيَارِ مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ
فَيَقَعُوا فِي أَشَدَّ مِنْهُ
பாடம் : 48
மக்கள் சிலர், ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத
முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக்கூட செய்யாமல் விட்டுவிடுவது.
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ
إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ قَالَ لِي ابْنُ
الزُّبَيْرِ كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي
الْكَعْبَةِ قُلْتُ قَالَتْ لِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "
يَا عَائِشَةُ، لَوْلاَ قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ ـ قَالَ ابْنُ الزُّبَيْرِ
بِكُفْرٍ ـ لَنَقَضْتُ الْكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ باب يَدْخُلُ النَّاسُ،
وَبَابٌ يَخْرُجُونَ ". فَفَعَلَهُ ابْنُ الزُّبَيْرِ.
126. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள்
கூறியதாவது :
என்னிடம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் உங்களிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே!
அவர்கள் இறையில்லம் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் (பின்வருமாறு) பதிலளித்தேன்:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்)
அண்மைக்காலத்(தில் இஸ்லாத்திற்கு வந்)தவர்கள் என்பது மட்டும் இல்லாமலிருந்தால் நான்
இறையில்லம் கஅபாவைத் துளைத்து (அதனை தற்போதுள்ள வாசல் அமைப்பிலில்லாமல்) அதற்கு இரண்டு
வாசல்கள் அமைத்து விட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
நான் அண்மைக் காலத்தவர்கள் என்று சொன்னதும் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள்
இறைமறுப்புக் (கோலோச்சிய அறியாமைக் காலத்துக்)கு அண்மைக் காலத்தவர்கள் என்று குறிப்பிடும்படி
நினைவூட்டினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில் நபி(ஸல்) அவர்களின்
எண்ணத்தை) செய்து முடித்தார்கள்.
(49)باب مَنْ خَصَّ
بِالْعِلْمِ قَوْمًا دُونَ قَوْمٍ كَرَاهِيَةَ أَنْ لاَ يَفْهَمُوا
பாடம் : 49
ஒரு சாரார் (ஒன்றை முழுமையாகப்)
புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தால் புரிந்து கொள்ளாதோரை விடுத்துப் புரிந்துகொள்ளும்
ஒரு சாராருக்குத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்தல்.
وَقَالَ عَلِيٌّ حَدِّثُوا النَّاسَ، بِمَا يَعْرِفُونَ،
أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ، اللَّهُ وَرَسُولُهُ
127. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களிடம் அவர்கள் புரிந்துகொள்பவற்றையே பேசுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப்
பற்றி பேசி, அதனால்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
(அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன?
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ
حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمُعَاذٌ
رَدِيفُهُ عَلَى الرَّحْلِ قَالَ " يَا مُعَاذُ بْنَ جَبَلٍ ".
قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. قَالَ " يَا مُعَاذُ
". قَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ. ثَلاَثًا.
قَالَ " مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ
مُحَمَّدًا رَسُولُ اللَّهِ صِدْقًا مِنْ قَلْبِهِ إِلاَّ حَرَّمَهُ اللَّهُ عَلَى
النَّارِ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ
فَيَسْتَبْشِرُوا قَالَ " إِذًا يَتَّكِلُوا ". وَأَخْبَرَ بِهَا
مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا .
128. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில் வாகனமொன்றில்) நபி (ஸல்)
அவர்களுக்குப் பின்னால் முஆத் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலே! என்று அழைத்தார்கள். அல்லாஹ்வின்
தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என்று முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
முஆதே! என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக்
காத்திருக்கிறேன் (கூறுங்கள்) என மீண்டும் முஆத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இவ்வாறு
மூன்று முறை (அழைப்பும் பதிலும்) நடந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
தூதராவார்கள் என்று உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்து
விட்டான் என்று கூறினார்கள். உடனே முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை
நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா?
(இதை கேட்டு) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே!
என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இல்லை; வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் (அதைக் கேட்டுவிட்டு) அவர்கள்
(இதுமட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல்) அசட்டையாக இருந்துவிடுவார்கள் என்று
கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து
தப்புவதற்காகத் தமது மரணத்தறுவாயில் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு) அறிவித்தார்கள்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ،
قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسًا، قَالَ ذُكِرَ لِي أَنَّ النَّبِيَّ
صلى الله عليه وسلم قَالَ لِمُعَاذٍ " مَنْ لَقِيَ اللَّهَ لاَ يُشْرِكُ
بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ". قَالَ أَلاَ أُبَشِّرُ النَّاسَ قَالَ
" لاَ، إِنِّي أَخَافُ أَنْ يَتَّكِلُوا ".
129. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத்திற்குப் பிறகு) அல்லாஹ்வைச்
சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார் என
முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள்
இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா? என்று கேட்க, (இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும்
நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்
என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(50)باب
الْحَيَاءِ فِي الْعِلْمِ
பாடம் : 50
கற்பதில் வெட்கப்படுவது.
وَقَالَ مُجَاهِدٌ لاَ يَتَعَلَّمُ الْعِلْمَ مُسْتَحْيٍ
وَلاَ مُسْتَكْبِرٌ.
وَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ
الأَنْصَارِ لَمْ يَمْنَعْهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ.
[تحفة
17996 أ].
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு)
வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்)
கல்வியைக் கற்றுக் கொள்ளமாட்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்,) மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒருபோதும் அவர்களுக்குத்
தடையாக இருந்ததில்லை.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا
أَبُو مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ
ابْنَةِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ
إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ
اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ
إِذَا احْتَلَمَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا رَأَتِ
الْمَاءَ ". فَغَطَّتْ أُمُّ سَلَمَةَ ـ تَعْنِي وَجْهَهَا ـ وَقَالَتْ
يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ قَالَ " نَعَمْ تَرِبَتْ
يَمِينُكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا ".
130. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூதல்ஹா (ரலி) அவர்களின் துணைவியார்)
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை.
ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஆம்! உறங்கி விழித்ததும்
தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமை தான்) என்று பதிலளித்தார்கள்.
உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக்கொண்டு, பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா என்று கேட்டேன். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக்
கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது? என்று கேட்டார்கள்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً
لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ ".
فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ، وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا
النَّخْلَةُ. قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ. فَقَالُوا يَا رَسُولَ
اللَّهِ، أَخْبِرْنَا بِهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" هِيَ النَّخْلَةُ ". قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي
بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَىَّ مِنْ
أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا.
131. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு;
அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு
உவமையாகும். அது என்ன மரம் என்று சொல்லுங்கள்! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கேட்டார்கள். நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான்
என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது
என்று) வெட்கப்பட்டுக் கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன். பிறகு மக்கள் அது என்ன மரம்
என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க,
அது பேரீச்சமரம் என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பின்னர் என் தந்தையிடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக்கேட்ட
என் தந்தை நீ அதைக் கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதை விட அது எனக்கு மிகவும்
விருப்பமானதாக இருந்திருக்கும் என்றார்கள்.
(51)باب مَنِ اسْتَحْيَا
فَأَمَرَ غَيْرَهُ بِالسُّؤَالِ
பாடம் : 51
(கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ
بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدٍ ابْنِ
الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ
الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ
" فِيهِ الْوُضُوءُ ".
132. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இச்சைக் கசிவு (மதீ) அதிமாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க
வெட்கப்பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் (இதுபற்றிக்) கேட்குமாறு
பணித்தேன். அவர் அதுபற்றி நபியவர்களிடம் கேட்டார். அதற்காக அங்கசுத்தி (உளூ) செய்வது
தான் கடமை; (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(52)باب ذِكْرِ
الْعِلْمِ وَالْفُتْيَا فِي الْمَسْجِدِ
பாடம் : 52
பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும்
தீர்ப்பு வழங்குவதும்.
حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا
اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَجُلاً،
قَامَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ
نُهِلَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُهِلُّ أَهْلُ
الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنَ
الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ ". وَقَالَ ابْنُ
عُمَرَ وَيَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "
وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ ". وَكَانَ ابْنُ عُمَرَ
يَقُولُ لَمْ أَفْقَهْ هَذِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
133. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
ஒருமனிதர் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் எழுந்துநின்று (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்டவேண்டும்
என கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ஜுஹ்ஃபா எனும் இடத்திலிருந்தும், நஜ்த்வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்டவேண்டும்
என்று பதிலளித்தார்கள்.
யமன்வாசிகள் யலம்லம் (இப்போதைய சஅதியா) எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்டவேண்டும்
என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். இது குறித்து
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை.
(53)باب مَنْ أَجَابَ
السَّائِلَ بِأَكْثَرَ مِمَّا سَأَلَهُ
பாடம் : 53
வினவப்பட்டதைவிட விரிவாகப்
பதில் கூறுதல்.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنِ
الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه
وسلم أَنَّ رَجُلاً سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ " لاَ
يَلْبَسِ الْقَمِيصَ وَلاَ الْعِمَامَةَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ
وَلاَ ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ
النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا
تَحْتَ الْكَعْبَيْنِ ".
134. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை,
முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த
ஆடை, அல்லது குங்குமச்சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்)
அணியக்கூடாது. காலணிகள் கிடைக்காவிட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம்.
(ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (செய்ய அதற்கு மேலிருப்பவற்றை)
வெட்டி விடவேண்டும் என்று சொன்னார்கள்.
No comments:
Post a Comment