Wednesday, November 16, 2016

ஒவ்வொரு இரவும் கஃபாவில் 120 ரஹ்மத் இறங்குகிறது



23 . ஒவ்வொரு இரவும் கஃபாவில் 120 ரஹ்மத் இறங்குகிறது



المعجم الكبير للطبراني (9/ 396، بترقيم الشاملة آليا)
11313 - حَدَّثَنَا أَحْمَدُ بن الْقَاسِمِ بن مُسَاوِرٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن عُمَرَ بن أَبَانَ، حَدَّثَنَا يُوسُفُ بن الْفَيْضِ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ اللَّهَ تَعَالَى يُنْزِلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ.

அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை - (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலி
இந்தச் செய்தி தப்ரானீ 11313 அக்பாரு உஸ்பஹான் 365, 1163 உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் யூசுப் பின் ஃபைள் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யர் என்று சொல்லுமளவு கடும் விமர்சனத்திற்குரியவர் ஆவார்.
அபூஹாதம் இவரைப் பலவீனமானவர், புறக்கணிக்கப்படுவதற்கு ஒப்பானவர் என்று விமர்சித்துள்ளார்.அல்ஜரஹ் வத்தஃதீல் ( பாகம் 9 பக்கம்  228 )
அபுஸூர்ஆ, நஸாயி தாரகுத்னீ  போன்ற அறிஞர்களும் இவரைப் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
அல்லுஅஃபாஉ வல்மத்ரூகீன் லி இப்னில் ஜவ்சீ ( பாகம் 3 பக்கம்  220 )
இதே செய்தி தாரீகு பக்தாத் 3058 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் முஹம்மத் பின் முஆவியா இடம் பெற்றுள்ளார். இவர்  பலவீனமான நபர் ஆவார்.
இப்னு மயீன் அவர்கள் இவர் நம்பகமானவர் அல்ல என்றும் அலீ இப்னுல் மதீனீ இவரைப் பலவீனர் என்றும், இமாம் முஸ்லிம், மற்றும் நஸாயீ  இவரைப் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் விமர்சித்து உள்ளனர்.
தஹ்தீபுல் கமால் பாகம் 26  பக்கம் 478
இப்னு அதீ உள்ளிட்ட அறிஞர்கள் இந்தச் செய்தியை ஆதாரம் கொள்ளக்கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment