Wednesday, November 16, 2016

ஹஜ்க்கு முன் உம்ரா செய்யகூடாது



22 . ஹஜ்க்கு முன் உம்ரா செய்யகூடாது 



1793 - حدثنا أحمد بن صالح ثنا عبد الله بن وهب قال أخبرني حيوة أخبرني أبو عيسى الخراساني عن عبد الله بن القاسم عن سعيد بن المسيب أن رجلا من أصحاب النبي صلى الله عليه و سلم أتى عمر بن الخطاب رضي الله عنه فشهد عنده أنه سمع رسول الله صلى الله عليه و سلم فيمرضه الذي قبض فيه ينهى عن العمرة قبل الحج .

நபித்தோழர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜூக்கு முன் உம்ரா செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நோயின் போது இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றேன் என்று கூறினார்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)
இந்தச் செய்தி அபூதாவூத் 1528, பைஹகீ 8868 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது முழுக்க பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் காசிம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் இவரை நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை.
நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாதவர்களையும் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் சான்றளித்து விடுவதால் தனித்த நிலையில் இவரது சான்றிதழ் ஏற்கப்படாது என்பது ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிந்த விஷயமாகும்.
எனவே இதனடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.
மேலும் இதில் இடம் பெறும் அபூஈஸா அல்குராஸானீ என்பவரின் நிலையும் அறியப்படவில்லை என்று யஹ்யா அல்கத்தான் எனும் அறிஞர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த செய்தி ஆதாரமாகக் கொள்ளத்தகாது.
இப்னு ஹஸ்ம், இப்னுல் கய்யும் உள்ளிட்ட அறிஞர்கள் இந்த ஹதீஸை தவறான செய்தி என்று குறை கண்டுள்ளதும், தொடர்பு அறுந்த செய்தி எனும் வகையில் இதை இணைத்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment