Tuesday, November 8, 2016

ஹதீஸ் கலை ( முன்னுரை பகுதி )

                       ஹதீஸ் கலை علوم الحديث

முன்னுரை

இஸ்லாத்தின் அடிப்படையாக திகழ்பவை இரண்டு. ஒன்று திருமறைக் குர்ஆன்.இரண்டாவது நபிமொழி.இவற்றில் திருமறைக்குர்ஆன் நூல் வடிவில் நபி(ஸல்) அவர்கள் காலத்திலேயே எழுதப்பட்டுவிட்டதால் இன்று நம்மிடம் நூல் வடிவில் இருந்து வருகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபி மொழிகளை அதிகமானோர் எழுதிவைக்கவில்லை.ஏனெனில் அங்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள் மிகமிக குறைவானவர்களாகவே இருந்தனர்.மேலும் குறைவாக இருந்தவர்கள் திருமறைக் குர்ஆனை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டனர்.இதனால் நபிமொழிகள் எழுத்துவடிவில் கொண்டுவரும் பணி தமாமதமானது.இப்போது பொரும்பாலான ஹதீஸ் நூற்கள் அச்சிடப்பட்டுள்ளன.இந்த நூற்கள் எப்படி எழுத்து வடிவில் கொண்டுவரப்பட்டன? என்பதின் முழுவிபரத்தைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஹதீஸை எழுதி வைத்திருந்தவர்கள்

1. அபூ ஷாஹ் (ரலி)

112 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالَ حَدَّثَنَا شَيْبَانُ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ خُزَاعَةَ قَتَلُوا رَجُلًا مِنْ بَنِي لَيْثٍ عَامَ فَتْحِ مَكَّةَ بِقَتِيلٍ مِنْهُمْ قَتَلُوهُ فَأُخْبِرَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَكِبَ رَاحِلَتَهُ فَخَطَبَ فَقَالَ إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْقَتْلَ أَوْ الْفِيلَ قَالَ أَبُو عَبْد اللَّهِ كَذَا قَالَ أَبُو نُعَيْمٍ وَاجْعَلُوهُ عَلَى الشَّكِّ الْفِيلَ أَوْ الْقَتْلَ وَغَيْرُهُ يَقُولُ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهِمْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْمُؤْمِنِينَ أَلَا وَإِنَّهَا لَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ بَعْدِي أَلَا وَإِنَّهَا حَلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ أَلَا وَإِنَّهَا سَاعَتِي هَذِهِ حَرَامٌ لَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا يُعْضَدُ شَجَرُهَا وَلَا تُلْتَقَطُ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ فَمَنْ قُتِلَ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُعْقَلَ وَإِمَّا أَنْ يُقَادَ أَهْلُ الْقَتِيلِ فَجَاءَ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبْ لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ اكْتُبُوا لِأَبِي فُلَانٍ فَقَالَ رَجُلٌ مِنْ قُرَيْشٍ إِلَّا الْإِذْخِرَ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّا نَجْعَلُهُ فِي بُيُوتِنَا وَقُبُورِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ إِلَّا الْإِذْخِرَ قَالَ أَبُو عَبْد اللَّهِ يُقَالُ يُقَادُ بِالْقَافِ فَقِيلَ لِأَبِي عَبْدِ اللَّهِ أَيُّ شَيْءٍ كَتَبَ لَهُ قَالَ كَتَبَ لَهُ هَذِهِ الْخُطْبَةَ رواه البخاري


அபூஹூரைரா(ரலி) கூறியதாவது :
பனூலைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்து விட்டதற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்று விட்டார்கள். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே, தமது வாகனத்தில் அமர்ந்தவர்களாக ஓர் உரை நிகழ்த்தினார்கள்.(அவ்வுரையில்) சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த(ப்புனித) மக்கமாநகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும், மக்காவாசிகள் மீது அல்லாஹ் தனது தூதரையும் மூமின்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை, எனக்குப் பின்னரும் யாருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கும்கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி, அது இந்த நிமடத்திலேயே (முற்றாகத்) தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப்படக்கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) விளம்பரம் செய்பவரைத் தவிர (பொருளுக்கு உரிமையற்றவர்) எடுக்கக்கூடாது. ஒருவர்(இனிமேல்) கொலை செய்யப்பட்டு விட்டால் அவரது குடும்பத்தார்கள் நட்ட ஈடு பெற்றுக் கொள்ளுதல் அல்லது பழிக்குப் பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதை அவர்கள் தேர்வு செய்யலாம்.
அப்போது, யமன் வாசிகளில்(அபூ ஷாஹ் என்ற) ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச் சொல்லுங்கள் என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் இவருக்கு எழுதிக் கொடுங்கள் என்றார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! (மக்காவில் செடி, கொடிகளை வெட்டக்கூடாது என்பதிலிருந்து) வாசனைப் புற்களில் ஒருவகையான இத்கிர் என்ற தாவரத்திற்கு விதிவிலக்கு அளியுங்கள், ஏனெனில், நாங்கள் எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்றார். நபி(ஸல்) அவர்கள், இத்கிர் என்ற வாசனைப் புற்களைத் தவிர என்றார்கள்.
(நூல் : புகாரி 112,2434)


2.அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்; (ரலி)

113 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَمْرٌو قَالَ أَخْبَرَنِي وَهْبُ بْنُ مُنَبِّهٍ عَنْ أَخِيهِ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ مَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدٌ أَكْثَرَ حَدِيثًا عَنْهُ مِنِّي إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَإِنَّهُ كَانَ يَكْتُبُ وَلَا أَكْتُبُ تَابَعَهُ مَعْمَرٌ عَنْ هَمَّامٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رواه البخاري

அபூஹூரைரா(ரலி) கூறியதாவது :
நபி(ஸல்) அவர்களுடைய தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்களைத் தவிர.அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன.காரணம் அவர்கள் ( ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை. (நூல் : புகாரி 113)


3. அலீ (ரலி)

1870 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ مَا عِنْدَنَا شَيْءٌ إِلَّا كِتَابُ اللَّهِ وَهَذِهِ الصَّحِيفَةُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ ... رواه البخاري

அபூஹூரைரா(ரலி) கூறியதாவது :
அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் எங்களிடம் இல்லை என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 1870)



உமர் (ரலி) அவர்களின் ஆலோசனை


731 أخبرنا أبو الحسين بن بشران العدل ببغداد أبنا اسماعيل بن محمد الصفار ثنا أحمد بن منصور الرمادي ثنا عبدالرزاق أبنا معمر عن الزهري عن عروة بن الزبير أن عمر بن الخطاب رضي الله عنه أراد أن يكتب السنن فاستشار في ذلك أصحاب رسول الله صلى الله عليه وسلم فأشاروا عليه أن يكتبها فطفق عمر يستخير الله فيها شهرا ثم أصبح يوما وقد عزم الله له قال إني كنت أردت أن أكتب السنن وإني ذكرت قوما كانوا قبلكم كتبوا كتبا فأكبوا عليها وتركوا كتاب الله وإني والله لا ألبس كتاب الله بشيء أبدا
(المدخل إلى السنن الكبرى ج: 1 ص: 407)


நபி மொழிகளை எழுதிவைத்துக்கொள்ள உமர் (ரலி) அவர்கள் நாடி நபித்தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.ஒரு மாதம் அல்லாஹ்விடம் இஸ்திகாரா தொழுகை தொழுதுவந்து ஒரு நாள் காலை அவருக்கு அல்லாஹ் ஒரு உறுதியை கொடுத்தான்.அப்போது நான் நபிமொழியை எழுதிக்கொள்ள நாடினேன்.அப்போது முன்னர் ஒரு கூட்டத்தினர் புத்தகமாக எழுதிவைத்துக்கொண்டு அதை பற்றிப்பிடித்துக்கொண்டு இறைவேதத்தை விட்டுவிட்டனர்.அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் வேதத்தோடு ஒருபோதும் எந்த ஒன்றையும் நான் சேர்க்கமாட்டேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.(நூல் : மத்கல்)




தாபியீன்களில் நபிமொழியை முதலில் தொகுத்தவர்கள்

உமர்(ரலி) அவர்கள் காலத்திற்கு பிறகு நபி மொழியை தொகுக்க கவனம் சொலுத்தியவர் உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களாவார்.அவர்களின் மரணம் ஹிஜ்ரீ 101


بَاب كَيْفَ يُقْبَضُ الْعِلْمُ وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ انْظُرْ مَا كَانَ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاكْتُبْهُ فَإِنِّي خِفْتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَ الْعُلَمَاءِ وَلَا تَقْبَلْ إِلَّا حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْتُفْشُوا الْعِلْمَ وَلْتَجْلِسُوا حَتَّى يُعَلَّمَ مَنْ لَا يَعْلَمُ فَإِنَّ الْعِلْمَ لَا يَهْلِكُ حَتَّى يَكُونَ سِرًّا حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ بِذَلِكَ يَعْنِي حَدِيثَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ إِلَى قَوْلِهِ ذَهَابَ الْعُلَمَاءِ رواه البخاري كتاب العلم باب كيف يقبض العلم


நபி(ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளை ஆராய்ந்து அதனை எழுதி வைத்துக் கொள்வீர்களாக! ஏனெனில், மார்க்கக் கல்வி அழிந்து போய்விடுமென்றும் ( மார்க்க) அறிஞர்கள் (இவ்வுலகை விட்டுச்) சென்று விடுவார்கள் என்றும் நான் அஞ்சுகின்றேன். (அவ்வாறு எழுதும்போது) நபி(ஸல்) அவர்களுடைய பொன்மொழிகளைத் தவிர வேறு எதையும் ஏற்கக்கூடாது. (அறிஞர்கள்) அறிவைப் பரப்பட்டும், அறியாதவர்களுக்கு அது கற்றுக் கொடுக்கப்படும் வரை அவர்கள் (ஓரிடத்தில் நிலையாக) அமர்ந்து கொள்ளட்டும். ஏனெனில், கல்வி மறைக்கப்படாதவரை அது பாதுகாக்கப்படும், அழிந்து விடாது என உமர் பின் அப்துல் அஜீஸ் (மதீனாவின் ஆளுநராயிருந்த) அபூபக்ர் பின் ஹஸ்முக்கு எழுதினார்கள்.

உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் காலத்தில்தான் நபிமொழியைத் தொகுப்பு முக்கியத்துவம் அடைந்தது. அவர்கள் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் நபிமொழியைத்தொகுத்தவராகவும் திகழ்ந்தவர் இமாம் ஸூஹ்ரீ ஆவார்கள். இவர்களைப் போன்று அக்காலத்தில் நபிமொழியைத் தொகுத்தவர்களில் முக்கியமானவர்கள் சிலர் இதோ :

1. மதீனா -முஹம்மத் பின் முஸ்லிம் பின் ஸூஹ்ரி- ம. 124 ஹிஜ்ரீ
2. மதீனா - ஸஈத் பின் அபீ உர்வா - ம.156 ஹிஜ்ரீ
3. மதீனா - ரபீவு பின் ஸபீஹ் - ம.160 ஹிஜ்ரீ
4. மதீனா - இமாம் மாலிக் - ம.179 ஹிஜ்ரீ
5. மக்கா - இப்னு ஜூரைஜ் - ம.150 ஹிஜ்ரீ
6. மக்கா - இப்னு இஸ்ஹாக் - ம.151 ஹிஜ்ரீ
7. மக்கா - ஸூஃப்யான் பின் உயையனா - ம.198 ஹிஜ்ரீ
8. கூஃபா - ஸூஃப்யான் ஸவ்ரீ - ம.161 ஹிஜ்ரீ
9. பஸரா - ஷூஅபா பின் ஹஜ்ஜாஜ் - ம.160 ஹிஜ்ரீ
10. சிரியா - அபூ உமர் அல் அவ்ஸாயீ - ம.157 ஹிஜ்ரீ
11. வாஸித் - ஹூஸைம் - ம.173 ஹிஜ்ரீ
12. குராஸான் - அப்துல்லாஹ் பின் முபாரக் - ம.181 ஹிஜ்ரீ
13. யமன் - மஃமர் - ம.154 ஹிஜ்ரீ

இவர்களின் தொகுப்புகளில் முழுக்க முழுக்க நபிமொழிகள் மட்டும் இடம்பெறவில்லை. மாறாக நபித்தோழர்களின் கூற்றுகள் தாபியீன்களின் பத்வாக்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

இவர்கள் காலத்திற்கு பிறகு நபிமொழிகளை தொகுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதன் விளைவாக பல நாடுகளுக்குச் சென்று நபிமொழிகளைக் கேட்டவரிடம் செவியுற்று சேகரித்தொடங்கினர்.இதன் விளைவாக நபிமொழிகளை மட்டும் முஸ்னத் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.அதாவது ஒவ்வொரு நபித்தோழர்களும் அறிவித்தவைகளை அந்த நபித்தோழர் அறிவித்தவை என்று அவரின் பெயரிட்டு அதன் கீழ் அவர் அறிவித்தவையை சட்டப்பாடங்கள் வரிசையில் இல்லாமல் பொதுவாக அனைத்தையும் பதிவு செய்வது.

இதை முதலில் செய்தவர்கள் عبد الله بن موسى العبسي الكوفي அப்துல்லாஹ் பின் மூஸா அல்அபஸீ அல்கூஃபீ ,مسدد البصريமுஸத்தத் அல்பஸரீ , أسد بن موسى அஸத் பின் மூஸா , نعيم بن حماد الخزاعي நயீம் பின் ஹம்மாத் அல்குஸாயீ மற்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்,இமாம் ஷாஃபீ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர்களின் தொகுப்புகளில் நபிமொழிகள் மட்டும் இருந்தாலும் அவற்றி;ல் ஆதாரப்பூர்வமான,பலவீனமான ஹதீஸ்கள் கலந்திருந்தன.மேலும் மார்க்கச் சட்டங்களின் பாடங்கள் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை எனவே குறிப்பிட்ட சட்டங்களின் ஹதீஸ்களை தேடுவது பெரும் சிரமமாக அமைந்தது.

இக்குறை நீக்கி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மார்க்கச்சட்டப்பாடங்களின் வரிசைப்படி தொகுத்தவர்களின் முக்கியமானவர், முதலாமானவர் இமாம் புகாரி ஆவார்கள். இவர்களுக்கு முன்னர் இமாம் மாலிக் முஅத்தா என்ற நூலை தொகுத்துள்ளார்.எனினும் இமாம் புகாரி அவர்களின் தொகுப்பைப் போன்று அவை இருக்குவில்லை.

இவர்களைப் போன்று இமாம் முஸ்லிம் மற்றும் பலரும் தொதுத்துள்ளனர்.

அவர்களின் விபரம் :

1. இமாம் மாலிக் ஹிஜ்ரீ 93-179
2. இமாம் புகாரீ ஹிஜ்ரீ 194-256
3. இமாம் முஸ்லிம் ஹிஜ்ரீ 204 - 261
4. இமாம் நஸயீ ஹிஜ்ரீ 215 - 303
5. இமாம் அபூதாவுத் ஹிஜ்ரீ 202 - 275
6. இமாம் திர்மிதீ ஹிஜ்ரீ 209 - 270
7. இமாம் இப்னுமாஜா ஹிஜ்ரீ 207- 273

நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி கூறும் பழக்கம் எப்போது தோன்றியது?

ஹிஜ்ரீ 40-ன் தொடக்கத்தில் இந்த மோசமான பழக்கம் தொடங்கியது.உஸ்மான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபின் அலீ(ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்து அலீ(ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி)அவர்களுக்கும் ஏற்றப்பட்ட சண்டையினால் முஸ்லிகள் பிளவுபட நேரிட்டது. இதன் காரணமாக அலீ(ரலி)அவர்கள் புகழ்ந்து, நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புனைந்து சொல்லத்தொடங்கினர் சிலர்.இதைப் போன்று முஆவியா (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் சிலர் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில செய்திகளை புனைந்து கூறினர்.அவற்றில் சில:


44 هذا وصيي وأخي والخليفة من بعدي فاسمعوا له وأطيعوا (نقد المنقول ج: 1 ص: 49)


'இவர் என்னுடைய வஸீயத் ஆவார்.என்னுடைய சகோதரராவார். எனக்கு பின் கலீஃபா ஆவார். எனவே அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள்.


عن بن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم من أراد أن ينظر إلى آدم في علمه وإلى نوح في حكمته وإلى إبراهيم في (حلمه فلينظر إلى علي رضي الله عنه ( لسان الميزان ج: 6 ص: 24

கல்வியில் ஆதத்தைப் போலவும் ஹிக்மத்தில் நூஹ் நபியைப்போலவும் சகிப்புத்தன்மையில் இப்ராஹீம் நபியைப் போலவும்; ஒருவரை நீர் பார்க்க விரும்பினால் அலீயை பார்த்துக் கொள்!



روى عن الحسن أن رسول الله صلى الله عليه وسلم قال إذا رأيتم معاوية على المنبر فاقتلوه قال كذب
 (الكامل في ضعفاء الرجال ج: 5 ص: 98)

'முஆவியாவை மின்பரில் கண்டால் கொலைசெய்யுங்கள்! '


عن أبي هريرة مرفوعا الأمناء ثلاثة أنا وجبرائيل ومعاوية وهذا كذب (ميزان الإعتدال في نقد الرجال ج: 2 ص: 251)

'நம்பிக்கைக்குரியவர்கள் மூன்று நபர்கள்.1.நான் 2.ஜிப்ரீல் 3.முஆவியா'



وعن حذيفة مرفوعا يبعث معاوية وعليه رداء من نور الإيمان (سير أعلام النبلاء ج: 3 ص: 130)

'ஈமானின் ஒளியான மேலாடையை அவரிடம் இருக்க முஆவியா (மறுமையில்) எழுப்பப்படுவார். '

ஹதீஸைகளை இட்டுக்கட்டியவர்களில் நபித்தோழர்கள் எவரும் கிடையாது. அவர்களிடம் அவர்கள் செய்த தவறை ஹதீஸ் மூலம் சுட்டிக்காட்டும் போது அதை அடக்கத்துடன் ஏற்றுக்கொணடார்களே தவிர இதற்கு மாற்றமாக ஹதீஸ்களை புனைந்து கூறவில்லை. மேலும் பின் வரும் ஹதீஸை கவனத்தில் கொண்டு ஹதீஸ்களை கூறவே பயந்தார்கள்.


107 حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ لِلزُّبَيْرِ إِنِّي لَا أَسْمَعُكَ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا يُحَدِّثُ فُلَانٌ وَفُلَانٌ قَالَ أَمَا إِنِّي لَمْ أُفَارِقْهُ وَلَكِنْ سَمِعْتُهُ يَقُولُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் ஸூபைர்(ரலி) கூறியதாவது :
நான் எனது தந்தை ஸூபைர் (ரலி) அவர்களிடம் கேட்டேன் : (தந்தையே! உங்களைப் போன்ற நபி(ஸல்)அவர்களுடன் தோழமைகொண்ட)இன்னின்னாரெல்லாம் நபி(ஸல்)அவர்கள் பற்றி (அதிகமாக)அறிவிப்பது போல் நாங்கள் அவர்களைப் பற்றி அறிவிப்பதை நான் கேள்விப் பட்டதேயில்லையே? ஏன்? அதற்கு ஸூபைர்(ரலி),(மகனே!)இதோ பார்! நான் (இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து பெரும்பாலும்) நபி(ஸல்) அவர்களை பிரிந்ததே இல்லை. ஆயினும் 'என் மீது யார் இட்டுக்கட்டிச் சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும். ' என நபி (ஸல்)கூறக்கேட்டிருக்கிறேன் ' (அதனால்தான் நான் அதிகமாக அறிவிக்கவில்லை) என்றார்கள்.(நூல் : புகாரி 107)


அலீ(ரலி) அவர்கள் காலத்தில் அரசியல் குழப்பம் ஏற்றப்பட்டு நபி(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டக்கூடிய நிலை ஏற்றப்பட்டபோது நபி மொழியை சொன்னவர்களின் தரம் ஆராயப்பட்டது.

19 و حَدَّثَنِي أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْغَيْلَانِيُّ حَدَّثَنَا أَبُو عَامِرٍ يَعْنِي الْعَقَدِيَّ حَدَّثَنَا رَبَاحٌ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ مُجَاهِدٍ قَالَ جَاءَ بُشَيْرٌ الْعَدَوِيُّ إِلَى ابْنِ عَبَّاسٍ فَجَعَلَ يُحَدِّثُ وَيَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ ابْنُ عَبَّاسٍ لَا يَأْذَنُ لِحَدِيثِهِ وَلَا يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَ عَبَّاسٍ مَالِي لَا أَرَاكَ تَسْمَعُ لِحَدِيثِي أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَسْمَعُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّا كُنَّا مَرَّةً إِذَا سَمِعْنَا رَجُلًا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَدَرَتْهُ أَبْصَارُنَا وَأَصْغَيْنَا إِلَيْهِ بِآذَانِنَا فَلَمَّا رَكِبَ النَّاسُ الصَّعْبَ وَالذَّلُولَ لَمْ نَأْخُذْ مِنْ النَّاسِ إِلَّا مَا نَعْرِفُ رواه مسلم

முஜாஹித் பின் ஜபர்(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
புஷைர் பின் கஅப் அல்அதவீ(ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று கூறியவாறு நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களோ அவரது அறிவிப்பைச் செவி கொடுத்துக் கேட்கவோ அவரை ஏறெடுத்துப் பார்க்கவோ தலைப்படவில்லை. உடனே, புஷைர் அல் அதவீ, இப்னு அப்பாஸ் அவர்களே! நீங்கள் எனது ஹதீஸை செவிமடுத்துக் கேட்டதாகத் தெரியவில்லையே! நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடம் அறிவித்துக் கொண்டிருக்க நீங்களோ காது கொடுக்காமல் இருக்கின்றீர்களே! என்று கேட்டார். அதற்கு, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலுரைத்தார்கள்:
ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் யாரேனும் ஒருவர், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்வதை நாங்கள் கேட்டுவிட்டால் உடனே அவரை நோக்கி எங்கள் பார்வை செல்லும். அவர் கூறுவதைக் கேட்க எங்கள் காதுகளைத் தாழ்த்துவோம். பிறகு மக்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும் கட்டப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்ல ஆரம்பித்தவுடன் நாங்கள் (நபியவர்களிடமிருந்து) அறிந்துள்ள (சரியான)வற்றை மட்டுமே மக்களிடமிருந்து ஏற்றுக் கொண்டோம்.இதைக் கைஸ் பின் சஅத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 19)


20 حَدَّثَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو الضَّبِّيُّ حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ كَتَبْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ أَنْ يَكْتُبَ لِي كِتَابًا وَيُخْفِي عَنِّي فَقَالَ وَلَدٌ نَاصِحٌ أَنَا أَخْتَارُ لَهُ الْأُمُورَ اخْتِيَارًا وَأُخْفِي عَنْهُ قَالَ فَدَعَا بِقَضَاءِ عَلِيٍّ فَجَعَلَ يَكْتُبُ مِنْهُ أَشْيَاءَ وَيَمُرُّ بِهِ الشَّيْءُ فَيَقُولُ وَاللَّهِ مَا قَضَى بِهَذَا عَلِيٌّ إِلَّا أَنْ يَكُونَ ضَلَّ رواه مسلم


அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், எனக்கு ஒரு மடல் வரையுமாறும், (அதில் குழப்பவாதிகளான ஷியாக்களின் கருத்துகள்) எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கடிதம் எழுதினேன். (கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், அவர் நல்ல பிள்ளை. அவருக்காக நான் சில விஷயங்களை நன்கு தேர்ந்தெடுத்து, சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்துவிடப் போகிறேன். என்று கூறிவிட்டு, அலீ(ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகளைக் கொண்டு வரும்படிக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு(குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது, இப்படியெல்லாம் அலீ(ரலி) அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது, வழி தவறியவன்தான் இப்படித் தீர்ப்பளிப்பான் என்று கூறினார்கள்.
இதை நாஃபிஉ பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்லிம் 20)

25 حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ عَنْ ابْنِ سِيرِينَ قَالَ لَمْ يَكُونُوا يَسْأَلُونَ عَنْ الْإِسْنَادِ فَلَمَّا وَقَعَتْ الْفِتْنَةُ قَالُوا سَمُّوا لَنَا رِجَالَكُمْ فَيُنْظَرُ إِلَى أَهْلِ السُّنَّةِ فَيُؤْخَذُ حَدِيثُهُمْ وَيُنْظَرُ إِلَى أَهْلِ الْبِدَعِ فَلَا يُؤْخَذُ حَدِيثُهُمْ رواه مسلم

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும் போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது, உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறலாயினர். ஆகவே, இந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாக இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படா.
இதை ஆஸிம் அல்அஹ்வல்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்:முஸ்லிம் 25)

26 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى قَالَ لَقِيتُ طَاوُسًا فَقُلْتُ حَدَّثَنِي فُلَانٌ كَيْتَ وَكَيْتَ قَالَ إِنْ كَانَ صَاحِبُكَ مَلِيًّا فَخُذْ عَنْهُ و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى قَالَ قُلْتُ لِطَاوُسٍ إِنَّ فُلَانًا حَدَّثَنِي بِكَذَا وَكَذَا قَالَ إِنْ كَانَ صَاحِبُكَ مَلِيًّا فَخُذْ عَنْهُ رواه مسلم

சுலைமான் பின் மூஸா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, இன்னார், எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார் என்று கூறினேன். அதற்கு தாவூஸ்(ரஹ்) அவர்கள், இதை உமக்கு அறிவித்தவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக் கொள்க. என்று கூறினாhகள்.
இதை அபூஅமுர் அப்துர் ரஹ்மான் பின் அமுர் அல்அவ்ஸாயீ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : முஸ்லிம் 26)

30و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ مِنْ أَهْلِ مَرْوَ قَالَ سَمِعْتُ عَبْدَانَ بْنَ عُثْمَانَ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ يَقُولُا الْإِسْنَادُ مِنْ الدِّينِ وَلَوْلَا الْإِسْنَادُ لَقَالَ مَنْ شَاءَ مَا شَاءَ رواه مسلم

அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :
அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின் ஒரு அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னத்) மட்டும் இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள். (நூல் முஸ்லிம் 30)

و قَالَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنِي الْعَبَّاسُ بْنُ أَبِي رِزْمَةَ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقُولُا بَيْنَنَا وَبَيْنَ الْقَوْمِ الْقَوَائِمُ يَعْنِي الْإِسْنَادَ رواه مسلم

அப்பாஸ் பின் அபீரிஸ்மா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள், நமக்கும் மக்களுக்குமிடையே அறிவிப்பாளர் தொடர் என்ற கால்கள் உள்ளன. (அவற்றைக் கொண்டே ஹதீஸ்கள் நிற்கும்) என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன். (நூல் : முஸ்லிம் 30)

وقَالَ مُحَمَّدُ سَمِعْتُ أَبَا إِسْحَقَ إِبْرَاهِيمَ بْنَ عِيسَى الطَّالَقَانِيَّ قَالَ قُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحَدِيثُ الَّذِي جَاءَ إِنَّ مِنْ الْبِرِّ بَعْدَ الْبِرِّ أَنْ تُصَلِّيَ لِأَبَوَيْكَ مَعَ صَلَاتِكَ وَتَصُومَ لَهُمَا مَعَ صَوْمِكَ قَالَ فَقَالَ عَبْدُ اللَّهِ يَا أَبَا إِسْحَقَ عَمَّنْ هَذَا قَالَ قُلْتُ لَهُ هَذَا مِنْ حَدِيثِ شِهَابِ بْنِ خِرَاشٍ فَقَالَ ثِقَةٌ عَمَّنْ قَالَ قُلْتُ عَنْ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ قَالَ ثِقَةٌ عَمَّنْ قَالَ قُلْتُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا أَبَا إِسْحَقَ إِنَّ بَيْنَ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ وَبَيْنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَفَاوِزَ تَنْقَطِعُ فِيهَا أَعْنَاقُ الْمَطِيِّ وَلَكِنْ لَيْسَ فِي الصَّدَقَةِ اخْتِلَافٌ رواه مسلم

அபீஇஸ்ஹாக் இப்றாஹீம் பின் ஈஸா(ரஹ்) அவர்கள் கூறியதாவது :
நான் அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்களிடம் , நீ உனக்காக தொழுவதுடன் உன் பெற்றோருக்காகத் தொழுவதும் உனக்காக நோன்பு நோற்பதுடன் உன் பெற்றோருக்காக நோன்பு நோற்பதும் நன்மைக்கு மேல் நன்மை தரும் செயலாகும் என்று ஒரு நபிமொழி வந்துள்ளது என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள், அபூ இஸ்ஹாக்! இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்டார். நான், இது ஷிஹாப் பின் கிராஷ்(ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் என்றேன். அதற்கு, அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள், அன்னார் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்தாம் என்று கூறிவிட்டு அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்? என்று கேட்டார்கள். நான், ஹஜ்ஜாஜ் பின் தீனார் என்றேன். அன்னாரும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்தாம் என்று கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்? என்று அப்துல்லாஹ் கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்றேன். அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள், அபூஇஸ்ஹாக்! ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே பயண ஒட்டகங்களின் கழுத்து முறிந்துவிடும் அளவுக்கு நீண்ட (கால) இடைவெளி உள்ளது. (இதை எப்படி அவர் நபியவர்களிடம் கேட்டிருக்க முடியும்? . எனினும் (ஒருவர் தம் பெற்றோருக்காக) தான தர்மம் செய்வது (நன்மையே என்பது) தொடர்பாக எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. என்று சொன்னார்கள்.(நூல் :முஸ்லிம் 30)

وَقَالَ مُحَمَّدٌ سَمِعْتُ عَلِيَّ بْنَ شَقِيقٍ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْمُبَارَكِ يَقُولُا عَلَى رُءُوسِ النَّاسِ دَعُوا حَدِيثَ عَمْرِو بْنِ ثَابِتٍ فَإِنَّهُ كَانَ يَسُبُّ السَّلَفَ رواه مسلم
 
அலீ பின் ஷகீக்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அப்துல்லாஹ் பின் அல் முபாரக் (ரஹ்) அவர்கள் மக்கள் மத்தியில் அம்ர் பின் ஸாபித்திடமிருந்து அறிவிப்பதை விட்டு விடுங்கள். ஏனெனில், அவர் முன்னோரைப் பழிப்பவராவார் என்று கூறுவதைச் செவியுற்றேன். இவ்வாறு, அன்றை காலத்தில் ஹதீஸை தரம் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்றப்பட்டது.



ஹதீஸை தரம் பிரிக்க அடிப்படையாக அமைந்த வசனங்கள்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَنْ تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ(6) سورة الحجرات


நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்கா திருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُوْلَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا(36) سورة الإسراء

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)

فَلَا تُطِعْ الْمُكَذِّبِينَ(8) سورة القلم

பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:8)

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَهِينٍ(10) سورة القلم


அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ آثِمًا أَوْ كَفُورًا(24) الإنسان

எனவே உமது இறைவனின் கட்டளைக்காகக் காத்திருப்பீராக! அவர்களில் பாவம் செய்பவருக்கோ, (ஏக இறைவனை) மறுப்பவருக்கோ கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 76:24)

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ(67) سورة آل عمران

இப்ராஹீம், யூதராகவோ, கிறித்த வராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்¬மாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 3:67)

يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تُحَاجُّونَ فِي إِبْرَاهِيمَ وَمَا أُنْزِلَتْ التَّوْرَاةُ وَالْإِنجِيلُ إِلَّا مِنْ بَعْدِهِ أَفَلَا تَعْقِلُونَ(65) سورة آل عمران

வேதமுடையோரே! இப்ராஹீமைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கின்றீர்கள்? தவ்ராத், மற்றும் இஞ்சீல் அவருக்குப் பிறகே அருளப்பட்டன. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் 3:65)


No comments:

Post a Comment