Wednesday, November 9, 2016

மதுவை தவிர்ப்போம்

மனிதனுக்கு அழிவு தர கூடிய பொருள்(காரியங்)களையும் தவிர்ப்போம்

அல்லாஹ் மனிதனை படைத்து அவனுக்கு தீங்கு தர கூட பொருட் (காரியங்) களையும், தீங்கு ஏற்படுத்தாத பொருட்(காரியங்)களையும் ஏற்படுத்தியுள்ளான். ஆனால் மனிதன் தனக்கு தீங்கு தராத பொருட் (காரியங்)களை விட்டு விட்டு தீங்கு தரக் கூட பொருட்(காரியங்)களை பயன்படுத்துகினான். அல்லாஹ் மனிதர் மூலமாக தீங்கு தரக்கூடிய பொருட்(காரியங்)களை தயாரித்துள்ளான். மது, புகையிலை, லிப்ஸ்டிக், சிசுவைக் கொள்ளுதல். தூங்காமல் இருத்தல், சிரிக்காமல் அடிக்கடி கோபப்படுதல் இது போன்ற செயல்கள் மனிதனுக்கு தீங்கு தரக் கூடியதாக ஏற்படுத்தியுள்ளான். இவை அனைத்தும் அல்லாஹ் எதற்காக ஏற்படுத்தியுள்ளான் என்றால் நம்மை சோதிப்பதற்காக தான். நாம் அனைவரும் இந்த செயல் விட்டும் நாம் விளகி இருக்கவேண்டும்.  இந்த செயல்களின் நாம் ஈடுபட்டால் நமக்கு தான் தீங்கு ஏற்படும் தவிர பிறருக்கு தீங்கு ஏற்படாது. (+) ஒரு மனிதன் ரோட்டில் (சைக்கிள், பைக்) வண்டி ஒட்டுகிறான்.

 அவன் ஒட்டும் போது பள்ளம் மேடு பார்த்து ஒட்டினால் தான் காயம் இல்லாமல் தப்பிக்கலாம். அதிலே மெதுவாக போகாமல் வேகமாக வண்டி ஒட்டினால் நமக்கு தான் ஆபத்து. அதே போன்று தான் இவ்வுலகத்தில் அல்லாஹ் நம்மை படைத்து பள்ளம் மேடு என்ற தீய காரியங்களை ஏற்படுத்தியுள்ளான். ஆனால் தீய காரியங்களை விட்டு ஒதுங்கி  விளகினால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விளகவில்லையென்றால் நமக்கு தான் ஆபத்து ஏற்படும். இஸ்லாம் தீமையை விட்டு விளக வேண்டும் என்று கூறுகிறது. தீமையால் ஏற்படும் ஆபத்தை கூறாது. அனைத்தையும் கூறினால் இந்த குர்ஆன் பன்மடங்காக மாறி பெரியதாக காட்சியளிக்கும். அதற்காக வேண்டி தான் தீமையை மட்டும் கூறுகிறது. அதனால் ஏற்படும் விளைவை கூற வில்லை.

1.             மதுவை தவிர்ப்போம்


நம் நாட்டில் பணக்காரன் முதல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வரை சிலர் மது அருந்தாமல் இருக்கவில்லை.. மதுவை அருந்த கூடியவர்களிடத்தில் நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால், மதுவை குடித்தால் அந்நேரத்தில் நமது மனத்திற்கு சந்தோஷம் கிடைக்கிறது என்று கூறுவார்கள். 

மதுவை அருந்துபவர்களின் சிலர் மதுவை குடிப்பதற்கு சில காரணங்களை கூறுவார்கள். பணக்காரனிடம் கேட்டால் எனது கம்பெனியில் நஷ்டம் அடைந்து விட்டது என்று கூறுவான். அதனால் தான் நான் மது அருந்துகிறோன் என்று கூறுகிறான். அதே போன்று ஏழையிடம் நீ ஏன் மது அருந்துகிறாய் என்று கேட்டால் எனது வீட்டில் வறுமையாக இருக்கு எனக்கு வேலையில்லை.

 எனது மனைவி விட்டு சென்று விட்டால் என்று கூறுவார்கள். இது எல்லாம் சரியான காரணமா என்று பார்த்தால் நியாயமான காரணங்கள் கிடையாது. மது அருந்துபவனின் நிலைமைகளை பார்த்தால் மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. சிலர் நபர் மதுவை அருந்திவிட்டு போதையில் தனது சொத்தை இழந்துவிடுகிறார்கள். இன்னும் சில நபர் போதைக்கு அடிமையாகி தனது குடும்பத்தை மறந்தவர்களும் உண்டு. ஆனால் அதனின் உள்ள தீமைகளை அறிந்துயிருந்தால் மதுவின்பால் நாம் செல்லமாட்டோம்.  இஸ்லாம் அழாகான வழிமுறைகளை செல்கிறது. 

இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றினால் நமது உடலுக்கு எந்த ஒரு கேடும் வராது. மது அருந்துவதால் நமக்கு பல தீமைகள் ஏற்படுகிறது. பெண்களே மது அருந்த கூடிய எந்த ஆண்களையும் திருமணம் முடிக்காதீர்கள். இவர்களை முடித்தால் உங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். நீங்கள் மிகவும் கஷ்டபடுவீர்கள்.


மது அருந்துவது ஷைத்தானின் செயலாகும். நாம் மது அருந்துவதினால் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும், மக்கள் மத்தியில் வெறுப்பையும், பகைமையும் ஏற்படுத்துகிறான். நாம் மது அருந்துவதால் மக்கள் நம்மை வெறுத்து விளகி ஒடுகிறார்கள். நமது அருகில் கூட வருவதற்கு தயங்குகிறார்கள். ஷைத்தான் நம்மை வழிகொடுப்பதற்கு நாடுகிறான்.


يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (90) إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمْ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنْ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنتَهُونَ  (5:91)


நம்பிக்கை கொண்டோரே! மது  சூதாட்டம், பலிபீடங்கள்,  (குறி கேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
 மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ் வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?  (5:90+91)

மதுவால் நமக்கு குறைவான நன்மைகள் இருந்தாலும் அதிகமான் தீமைகள் ஏற்படும்.


يَسْأَلُونَكَ عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلْ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ  (2:219)


மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 

""அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்க ளுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ் விரண்டின் பயனை விட கேடு இவ்வுல கிலும், மறுமையிலும் மிகப் பெரியது'' எனக் கூறுவீராக  (2:219)

மதுவால் ஏற்படும் தீமைகள்

1.நரம்பு தளர்ந்து போகும்
2.ஆண்மை குறையும் 
3.குடல் பாதிப்பு 
4.பசியின்மை 
5.கல்லீரல் மண்ணீரல் பாதிப்பு 
6.மலம் சிக்கல் 
7.சிறுநீரகப் பாதிப்பு
8.உடலில் கெட்ட நீர் தங்குதல்

  நூல்   :  தினமனி 30. 12. 2007


No comments:

Post a Comment