இணைவைத்தல் சமந்தமான நபிமொழிகள் .
1. முதல் கடமை இணைவைக்காமல் இருப்பது
قال فإن حق الله على العباد أن يعبدوه ، ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யும் கடமை, அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை வணங்குவதாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை தனக்கு எதையும் இணை கற்பிக்காதவரை வேதனை செய்யாமல் இருப்பதாகும்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: புகாரீ 2856
2 . மிகப்பெரிய பாவம்
5708حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنْ الشِّرْكِ مَنْ عَمِلَ عَمَلًا أَشْرَكَ فِيهِ مَعِي غَيْرِي تَرَكْتُهُ وَشِرْكَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (5708)
3. உதவி தேடுதல் அல்லாஹ்விடமே
سنن الترمذي - شاكر + ألباني (4/ 667)
إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله
நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (2440)
4 .அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றுதல்
1599حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَيْمُونٍ حَدَّثَنَا سَعْدُ بْنُ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي عُبَيْدَةَ قَالَ آخِرُ مَا تَكَلَّمَ بِهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْرِجُوا يَهُودَ أَهْلِ الْحِجَازِ وَأَهْلِ نَجْرَانَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَاعْلَمُوا أَنَّ شِرَارَ النَّاسِ الَّذِينَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ رواه احمد
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள். மக்களிலேயே மோசமானவர்கள் தங்களின் தங்களின் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டவர்கள்தான்.
அறிவிப்பவர் : அபூஉபைதா (ரலி)
நூல் : அஹ்மத் (1599)
5 . நோய் நிவாரணம் அழிப்பவன் அவனே
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (7/ 157)
5675 حدثنا موسى بن إسماعيل ، حدثنا أبو عوانة عن منصور ، عن إبراهيم ، عن مسروق ، عن عائشة ، رضي الله عنها ، أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أتى مريضا ، أو أتي به- قال أذهب الباس رب الناس اشف وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما
நபி ஸல் அவர்கள் கூறினார்கள். மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.
நூல் : புஹாரி ( 5675 )
6 . நேர்ச்சை அல்லாஹ்விற்கே
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (8/ 177)
عن عائشة ، رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم قال : من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه.
அல்லாஹ்விற்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்.: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6696, 6700)
7 . அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்விற்கே!
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (6/ 84)
وَلَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவரை அல்லாஹ் சபித்துவிட்டான்.
அறிவிப்பவர். அலீ பின் அபீ தாலிப் ( ரலி )
நூல்: முஸ்லிம் (4001)
8. மறைவான ஞானம் அல்லாஹ்விற்கே!
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (6/ 99)
أن رسول الله صلى الله عليه وسلم قال : مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم ما في غد إلا الله ، ولا يعلم ما تغيض الأرحام إلا الله ، ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ، ولا تدري نفس بأي أرض تموت ، ولا يعلم متى تقوم الساعة إلا الله.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்து. அல்லாஹ்வைத் தவிர அவற்றை வேறு யாரும் அறிய மாட்டார்கள். நாளை நடப்பதையும், கருவில் உள்ளவற்றையும், மழை எப்போது பொழியும் என்பதையும், ஒரு ஆத்மா எப்போது மரணிக்கும் என்பதையும் மறுமை நாள் எப்போது நிகழும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர். இப்னு உமர் ( ரலி )
நூல். புகாரி 4697
9 . சகுணம் பார்த்தல்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ عَيْسَى بْنِ عَاصِمٍ عَنْ زِرِ بْنِ حُبَيْشٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الطِّيَرَةُ شِرْكٌ الطِّيَرَةُ شِرْكٌ ثَلَاثًا وَمَا مِنَّا إِلَّا وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ رواه أبو داود 3411
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சகுனம் பார்ப்பது இணை வைத்தலாகும் என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: அபுதாவுத் (3411)
10 . ஜோதிடனிடம் குறி கேட்பது
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (7/ 37)
4488 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِىُّ حَدَّثَنَا يَحْيَى - يَعْنِى ابْنَ سَعِيدٍ - عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ صَفِيَّةَ عَنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.
அறிவிப்பவர். ஸஃபிய்யா
நூல்: முஸ்லிம் (4488)
11 .சூனியத்தை நம்புதல்
36212حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ رواه أحمد
(பெற்றோரை) நோய்வினை செய்பவன், சூனியத்தை (உண்மையென) நம்புபவன், மதுவில் (குடிப்பதில்) மூழ்கியவன், விதியை மறுப்பவன் ஆகியோர் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.
நூல்: அஹ்மத் (36212)
12 . வரம்புமீறி புகழக்கூடாது
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري (4/ 204)
3445- حدثنا الحميدي ، حدثنا سفيان قال : سمعت الزهري يقول ، أخبرني عبيد الله بن عبد الله ، عن ابن عباس سمع عمر ، رضي الله عنه ، يقول على المنبر سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تطروني كما أطرت النصارى ابن مريم فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கிறித்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வுடைய அடியான்தான். அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் கூறுங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: புகாரி 3445
No comments:
Post a Comment