Monday, November 21, 2016

விவசாயம்



 32 . விவசாயம்

عن جابر بن عبد الله قال  قال رسول الله صلى الله عليه وسلم من كانت له أرض فليزرعها فإن لم يزرعها فليزرعها أخاه


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்; தாம் பயிரிட 

(விரும்பா)விட்டால், அதை தம் (முஸ்லிம்) சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்து விடட்டும்!

இதை ஜாபிர் ( ரழி ) அறிவித்தார்கள்

நூல் : புஹாரி ( 2216 ) முஸ்லிம் ( 3117 ) நஸாயீ ( 3874 ) இப்னு மாஜா ( 2451 ) அஹ்மத் ( 13857 ) தாரமீ ( 2615 )

விளக்கம் :

மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவை உற்பத்தி செய்வது மிக மிக முக்கியமானதாகும் . ஆனால் இன்று பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இயந்திர உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து. 

விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலத்தில் உணவு உற்பத்தி கடுமையாகக் குறைந்து பஞ்சம் ஏற்படும்.

இது போன்ற நிலை ஏறபடக் கூடாது என்பதற்காக விவசாய நிலத்தை சும்மா போடாமல் உணவு உற்பத்தி செய்ய வேண்டும் அல்லது மற்ற சகோதர்ருக்கு வழங்கி , உணவு உற்பத்தியைப் பெருக்கவும் அந்தச் சகோதரர் பயன் பெறவும் உதவிட வேண்டும். உணவு உற்பத்தி எவ்வளவு அவசியம் என்பதையும் வீணாக நிலங்கள் இருக்கக் கூடாது என்பதையும் இந்த நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

No comments:

Post a Comment