Monday, November 7, 2016

உளூ மற்றும் தொழுகை



2. உளூ மற்றும் தொழுகை

ஒவ்வொரு ஐவேளைத் தொழுகைக்காகவும் உபரியான தொழுகைக்காகவும் நாம் செய்யும் உளூவின் மூலம் பாவங்களை மன்னிக்கப்படும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

عن عثمان بن عفان  قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் முறையாக அங்கத் தூய்மை செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடரிரிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.

அறிவிப்பவர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி),


நூல் : முஸ்லிம் (413)

No comments:

Post a Comment