Monday, November 7, 2016

திக்ர் செய்தல்


1. பாவத்தை அழிக்கும் நல்லறங்கள்


ஏக இறைவனாகிய அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை படைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஏற்படுத்தினான். பின்னர் அவர்களை தவறிழைக்கும்படியாகவும் ஆக்கினான். மேலும் அவர்களை திருத்துவதற்காக நபிமார்களைக் கொண்டு போதனை செய்வதற்காக அனுப்பினான்

அவர்களின் பிரச்சாரத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்பதற்கு உண்டான வழிமுறைகளையும் சுவனத்திற்கு செல்வதற்கு உண்டான வழிவகைகளையும் ஏற்படுத்தினான்.

நடுநடுங்க வைக்கும் நரக வேதனையை பற்றி நாளெல்லாம் நமது அறிஞர்களின் பயான்களிலிருந்து கேட்டிருந்தாலும் கவனக்குறைவாக வாழ்வதே நமது நிலையாக கொண்டிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் அழித்துவிடுமளவு பாவம் செய்த என் அடியார்களே! உங்கள் கடந்த கால பாவங்களை விட்டும் உங்களை மன்னிக்கிறேன் என்று இறைவன் நம்மை நோக்கி அழைப்பு விடுக்கிறான்

ஆனாலும் அந்த அழைப்பை அலட்சியம் செய்துவிடுகிறோம். இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் நாம் மறுமையில் வெற்றி பெறவே முடியாது. எனவே தமது பாவங்களை போக்கும் நல்லறங்களை கண்டறிந்து மறுமை வெற்றிக்கு வழி காண்போம்.

திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நமது பாவங்களை அழிக்கும அழகிய நல்லறங்களை நமக்கு காட்டித் தந்துள்ளார்கள். அந்த நல்லறங்களை செய்து மறுமை வெற்றிக்கு வித்திடுவோம். 

திக்ர் செய்தல்

அல்ஹ்வுக்கு மிகவும் பிரியான இரண்டு எளிமையான வாசகங்கள். அவை நன்மை தராசில் கனமானவையாகவும். பாவங்களை அழிப்பவையாகவும் இருக்கும்.


6406 عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப் படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில்அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி.

நூல் : புகாரி 6406

6405 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி),


நூல் :புகாரி 6405

No comments:

Post a Comment