Monday, November 7, 2016

மென்மை நன்மையே !


11. மென்மை நன்மையே !

عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ ‏" ‏.‏

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.

இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் ( 5052 ) அபூதாவூத் ( 4809) இப்னு மாஜா (3687) அஹ்மத் (27829)

விளக்கம் :


தமின் பிள்ளைகளாக இவ்வுலகத்தில் இருக்கும் மனிதர்கள் தம் சகோதர்களிடம் அன்போடு நடந்து கொண்டு சச்சரவு இல்லாமல் சகோதரப் பாசத்தோடு இருக்க வேண்டும். ஆனால் இதைக் கவனத்தில் கொள்ளாத பலர் அடுத்தவர்களிடம் பேசும் போது கடுமையான வார்த்தைகளைத் பயன்படுத்துவதையும் , அவர்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணம் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இப்படிப்பட்டவர்களைத் திருத்தும் வன்ணம் இந்த நபிமொழி அமைந்துள்ளது.
மென்மையாக நடக்காமல் கடுமை காட்டும் நபர்கள் எல்லா நன்மைகளை இழக்க நேரிடும் அடுத்தவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலாக அவர்களின் சாபத்திற்கு ஆளாகி , இறைக் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். இன்னொரு நபிமொழியில் “ அல்லாஹ் மென்மையானவன் மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். கடுமைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்”  ( முஸ்லிம் 5055 ) என்று இடம் பெற்றுள்ளது.



மென்மையாக நடக்கும் போது இறையருளை நிறைய நாம் அடைய முடியும்.

No comments:

Post a Comment