10. உறவைப் பேணி வாழ்
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ وَقَالَ سُفْيَانُ
لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ حَسَنٌ
وَفِطْرٌ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ،
وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا "
இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்'
பதிலுக்கு
பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு
முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ்
இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 5991 ) திர்மிதீ ( 1908 ) அபூதாவூத் ( 1697 ) அஹ்மத் (6488)
விளக்கம் :
இரத்த உறவைப் பேணி வாழ்வது முஸ்லிம்களின் கடமைகளில்
ஒன்றாகும். உறவு முறையைப் பேணி , அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு ,
அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
இஸ்லாத்தின் இந்தக்
கட்டளையைப் பேணும் சிலர் , தம்முடன் இணைந்து உறவாட விரும்புவோரிடம் மட்டுமே
இணைந்திருக்கிறார்கள்.
ஒரு சண்டை வந்துவிட்டால் அல்லது அவர்கள் பேச
விரும்பாவிட்டால் அவர்களிடம் நாம் ஏன் பேச வேண்டும் ? அவர்களுக்கு ஏன் உதவி செய்ய
வேண்டும் ? என்று கூறி அவர்களின் உறவை நிரந்தரமாக வெட்டி விடுகின்றனர்.
ஆனால் இஸ்லாம் இந்த நிலையை
ஏற்றுக் கொள்வதில்லை. உறவைப் பேணுதல் என்றால் அவர்கள் விரும்பாவிட்டாலும்
அவர்களின் நலன் நாடுபவனே உண்மையில் உறவைப் பேணுபவன் என்று கூறுகிறது.
No comments:
Post a Comment