Saturday, November 26, 2016

நபிமொழியை நடைமுறை படுத்தின அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் ( ரழி )



7 . நபிமொழியை நடைமுறை படுத்தின அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் ( ரழி )


صحيح مسلم (2 / 604):


أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ أَوَّلَ مَا بُويِعَ لَهُ، «أَنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ لِلصَّلَاةِ يَوْمَ الْفِطْرِ، فَلَا تُؤَذِّنْ لَهَا» ، قَالَ: فَلَمْ يُؤَذِّنْ لَهَا ابْنُ الزُّبَيْرِ يَوْمَهُ، وَأَرْسَلَ إِلَيْهِ مَعَ ذَلِكَ: «إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلَاةِ، وَإِنَّ ذَلِكَ قَدْ كَانَ يُفْعَلُ» ، قَالَ: فَصَلَّى ابْنُ الزُّبَيْرِ قَبْلَ الْخُطْبَةِ


அதாஉ பின் அபீரபாஹ் அவர்கள் கூறியதாவது:  
(மக்காவின் ஆட்சிப் பொறுப்பேற்ற) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதில்லை. எனவே, நீங்களும் அத்தொழுகைக்கு பாங்கு சொல்லாதீர்கள்'' என்ற செய்தியைச் சொல்லி- அனுப்பினார்கள். அவ்வாறே அன்றைய தினம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் பாங்கு சொல்லவில்லை. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் (முன்பு) செய்யப்பட்டுவந்தது' எனும் செய்தியையும் அவர்களுக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள்.

நூல் : முஸ்லிம் (1609 )  திர்மிதீ ( 537 ) அபூதாவூத் ( 1142 )  நஸாயீ ( 1569 ) இப்னு மாஜா ( 1273 ) தாரமீ ( 1603 ) அஹ்மத் ( 1905 )

படிப்பினைகள் : 

நோன்பு பெருநாள் தொழுகைக்காக பாங்கு சொல்ல வேண்டியதில்லை என்ற நபிவழியை நடைமுறைப்படுத்தினார்கள், நபித்தோழர்கள். நபிகளாரின் நடைமுறைக்கு முக்கியத்துவமளித்தார்கள். நாங்களும் நபிகளாரைப் பின்பற்றுகிறோம் என்று கூறிக் கொண்டு பாங்கிற்கு பின்னால் சொல்ல வேண்டிய ஸலவாத்தை அதற்கு முன்னால் கூறிக் கொண்டும், பாங்கு கூறும் போது கட்டை விரல்களைக் கண்களில் ஒத்திக் கொண்டும், முஆவிற்கு இரண்டு பாங்கினை சொல்லிக் கொண்டும் நபிவழிக்கு மாற்றமாக செயல்படுபவர்களாக இருக்கின்றார்கள்.
ஒரு முஸ்லிம், தனது பெற்றோர் பிள்ளைகள் குடும்பத்தார் உறவினர்கள் மற்றும் உலகமக்கள் அனைவரையும் விட மிக அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும். அப்போது தான் அவர் முழுமையான நம்பிக்கைக் கொண்டவராக திகழமுடியும். 

No comments:

Post a Comment