6 . அறிவுரை கூறுவதில்
நபிவழியைப் பேணிய அப்துல்லாஹ் ( இப்னு மஸ்வூத் ரழி )
صحيح البخاري (1 / 25):
عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ؟ قَالَ: أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ، وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا، مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا "
அபூவாயில்
ஷகீக் பின் சலமா அவர்கள் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய்
இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து "அபூ அப்திர்ரஹ்மான்!
தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன்' என்றார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "உங்களைச் சலிப்படையச் செய்து
விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்ய விடாமல் என்னைத் தடுக்கிறது. நான்
உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறு
தான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி
வந்தார்கள்'' என்றார்கள்.
நூல் : புகாரி (70 ) முஸ்லிம் ( 2824 ) திர்மிதீ ( 2855 ) அஹ்மத் ( 3571 ) இப்னு ஹிப்பான் ( 4524 )
படிப்பினை :
மற்றவர்களுக்கு அறிவுரை
கூறுகின்ற பண்பு பாராட்டுதலுக்குரியது தான். அதே நேரத்தில் இப்பண்புடையவர்கள், தம்மை பார்த்தாலே மக்களெல்லாம்
விரண்டோடக் கூடிய வகையில் அறிவுரைக் கூறி அரள வைத்து விடாமல் அடுத்தவர்களின்
சூழ்நிலையறிந்து நடந்து கொள்ள வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டார்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
இன்றைய காலத்தில்
கவலைக்குரிய விஷயம், பல
முஸ்லிம்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்ற சிந்தனையே சிறிதளவும்
இல்லாமல், தான்
உண்டு தன் வேலை உண்டு என்று சுயநலமாக இருப்பது தான்.
No comments:
Post a Comment