1 . உம்மு சலீத் (ரலி)
قَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ
بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ الْمَدِينَةِ،
فَبَقِيَ مِرْطٌ جَيِّدٌ فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ
أَعْطِ هَذَا ابْنَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ. يُرِيدُونَ
أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ. فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ. وَأُمُّ
سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ، مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم. قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تَزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ
மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் இப்னு கத்தாப்(ரலி) பட்டாடைகளை (அல்லது
கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள்.
அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர்(ரலி) அவர்களுக்கு
அருகில் இருந்த சிலர், 'இறைநம்பிக்கையாளர்களின்
தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) இறைத்தூதர்(ஸல்) அவர்களின்
(மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்' என்று கூறினர்.
அலீ(ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம்(ரலி) அவர்களைக் கருத்தில்
கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர்(ரலி), 'உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும்
தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள்,
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில்
ஒருவராவார்.' என்று கூறினார்கள். (மேலும்)
'அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த
நாளில் தோலினால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்' என்றும் உமர்(ரலி) கூறினார்
நூல் : ஸஹீஹுல் புஹாரி ( 2881 ) ( 4071 )
No comments:
Post a Comment