6. சிரிப்போம்
நாம் ஒரு இடத்தில் வேளை செய்யும் போது அங்கு
டெண்ஸனாக இருப்போம். அதே நிலையில் நமது வீட்டிற்கு வந்தால் மனைவியிடம் அல்லது
குழந்தையிடம் எரிச்சலாக பேசுவோம்.
அடிக்கடி சிரிக்காமல் கோபப்பட்டு
கொண்டுயிருப்போம். நமது குழந்தையிடம் சரியாக நாம் பேச மாட்டோம். சரியாக உணவு உண்ண
மாட்டோம். இப்படி நம்முடைய நிலையிருக்கும். இன்னும் சிலர் எப்பொழுதும் சிரித்துக்
கொண்டு இருப்பார்கள். எதற்கும் கவலைபட மாட்டார்கள். அழுகவும் மாட்டார்கள்.
இப்படி
இருக்க கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. அதிகமாக அழவேண்டும் குறைவாக சிரிக்க
வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
அல்லாஹ் தான் சிரிப்பை ஏற்படுத்துகிறான்
وَأَنَّهُ
هُوَ أَضْحَكَ وَأَبْكَى
(53:43)
அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான். (53:43)
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற
பழமொழி உள்ளது. ஆனால் எதற்கு எடுத்தாலும் நாம் சிரித்துக்கொண்டு இருக்க கூடாது.
அழகவும் வேண்டும்.
குறைவாக சிரிக்கட்டும்
فَلْيَضْحَكُوا
قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ (9:82)
அவர்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவே சிரிக்கட்டும்! அதிகமாக அழட்டும் (9:82)
حَدَّثَنَا
مُنْذِرُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجَارُودِيُّ حَدَّثَنَا
أَبِي حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُوسَى بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةً
مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ قَالَ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ
قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا قَالَ فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ فَقَالَ رَجُلٌ
مَنْ أَبِي قَالَ فُلَانٌ فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ لَا تَسْأَلُوا عَنْ
أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ رَوَاهُ النَّضْرُ وَرَوْحُ بْنُ
عُبَادَةَ عَنْ شُعْبَةَ البخاري 4621
அனஸ் (ர-) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்)
ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒரு போதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், ""நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள்
குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்
புகாரி 4621
அழாமல் சிரிக்காதீர்கள்
وَتَضْحَكُونَ
وَلَا تَبْكُونَ
(53:60)
அழாமல் சிரிக்கிறீர்கள்? (53:60)
சிரிப்பால் ஏற்படும் நன்மைகள்
1. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை நாம் சிரிக்கும் போது
தேவையான ஆக்ஷஸிஜன் உடலுக்கு செல்கிறது இதனால் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
2. தசைகளில் ஏற்படும் வலிகள் தவிர்க்கப்படும்
3. மன அழுத்தம் போக்கப்படுகிறது
4. சிரிப்பு,
தகவல்களை உடலுக்கு உடன் வாங்கிக் கொள்ளும்
வகையில் செயல்பட மூளைக்கு உறுதுணை புரிகிறது.
5. உடல் சேர்வு தவிர்க்கப்படும்
6. இரத்த ஒட்டம் சீராக இருக்கும்
7. இதயத்தில் வரும் நோயை தடுக்கும்.
8. எவ்வளவு கடினமான பனிகளை செய்தாலும் புதிய உத்வேகம்
கிடைக்கும்
தினத்தந்தி 5. 1. 08
நாம் சிரித்தால் நமது உடலுக்கு இத்தனை நன்மைகள்
கிடைக்கிறது. நமது உடல் சீராக இயங்குவதற்கு இந்த சிரிப்பும் ஒரு காரணம்.
நமது உடலை ஆரோக்கியமாகவும் சீராகவும் வைக்க வேண்டும்
என்றால் மேலே கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாம் சரியான முறையில் பயன்படுத்திக்
கொள்வோம்
No comments:
Post a Comment