5. தூக்கம் (ஒய்வு எடுப்போம்)
நமது மனைவியையும், பெற்றோரையும், குழந்தையும்
சந்தோஷமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இரவும் பகலுமாய் நாம் உழைக்கிறோம்.
பகலில் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதிப்பாதிக்கிறோம். இன்னும் சிலர் இரவு முழுவதும்
கண் விழித்து வேளை செய்கிறார்கள். ஆனால் பகலில் தூங்குவதில்லை. நாம் தூங்காததின் காரணத்தினால் நமது உடல் மிகவும்
பாதிக்கப்படுகிறது.
நாம் வேளைக்கு எப்படி முக்கியத்துவம் தருகிறமோ அதே போன்று நமது
உடலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். முக்கியத்துவம் தந்தால் தான் மறுபடியும்
நம்மால் உழைக்க முடியும். எப்படி முக்கியத்துவம் தருவது என்றால் நாம் காலையில்
வேளை செய்தால் இரவில் தூங்க வேண்டும். இரவில் வேளை செய்தால் பகலில் நன்றாக தூங்க
வேண்டும். நாம் தூங்கவில்லை என்றால் நமது உடலுக்கு கடுமையானக பாதிப்பு இருக்கிறது.
நமது உடலை ஆரோக்கியமாகவும் சீராகவும் வைத்துயிருக்க வேண்டும் என்றால் அனைவரும்
தூங்க வேண்டும். பெண்களே தனது கணவருக்கு நீங்கள் கஷ்டத்தை தராமல் பார்த்துக்கொள்ள
வேண்டும்.
وَهُوَ
الَّذِي جَعَلَ لَكُمْ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ
النَّهَارَ نُشُورًا
(25:47)
அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை
ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். (25:47)
وَجَعَلْنَا
نَوْمَكُمْ سُبَاتًا(9)وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا (78:10)
உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.,இரவை
ஆடையாக்கினோம் (78:10)
தூக்கினால் ஏற்படும் நன்மைகள்
1. இரத்தம் ஒட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது
2. இதய துடிப்பு சற்று குறைகிறது
3. ஜீரன உறுப்புகள் சரியாக இயங்குகின்றன.
4. ஈரலும்,
சிறுநீரகமும் தொடர்ந்து செயல்படுகிறது.
5. உறக்கதில் உடல் வெப்பம் ஒரு சென்டி கிரேடு குறைகிறது,
6. உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும்
மூல பகுதியில் உறக்க மையம் ஒன்று உள்ளது இந்த
உறக்க மையத்தை இரத்தில் உள்ள கால்சியம் கட்டுப் படுத்துகிறது. உறக்க மையத்தில்
வேண்டிய அளவு கால்சியம் சேர்ந்துடன் உறக்கம் வரும்.
ரத்தத்தில் கால்சியம் செல்லவில்லையென்றால்
உறக்கம் வராது.
தினத்தந்தி 5. 1. 2008
நாம் தூங்காமல் இருந்தால் இவை அனைத்தையும்
இழந்துவிடுவோம். இவைகள் இல்லையென்றால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்காது. நாம்
சீராக வாழ மாட்டோம்.
No comments:
Post a Comment