33 .முஅவியா (ரலி) அவர்கள் விஷம் கொடுத்து அனுப்பினார்களா?
أنساب الأشراف - (1 / 389(وقال الهيثم بن عدي: دس معاوية إلى ابنة سهيل بن عمرة امرأة الحسن مائة ألف دينار على أن تسقيه شربة بعث بها إليها ففعلت.
முஅவியா (ரலி) அவர்கள் ஸுஹைல் பின் அம்ரா என்பவரின் மகளும் ஹஸன் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தவரிடம் ஒரு லட்சம் தீனார் (தங்க காசு) கொடுத்தனுப்பி பானத்தில் விஷத்தை கலந்து கொடுக்குமாறு அனுப்பினார். அப்பெண்மணி அவ்வாறே செய்தார்.
அறிவிப்பவர் : ஹைஸம் பின் அதீ,
நூல் : அன்ஸாபுல் அஷ்ராஃப், பாகம் 1, பக்கம் 389)
இச்செய்தியை அறிவிக்கும் அல்ஹைஸம் பின் அதீ என்பவர் நம்பகமானவர் அல்லர்.
الكامل في ضعفاء الرجال - (8 / 400)2020- الهيثم بن عدي الطائي أصله كوفي منبجي ، يُكَنَّى أبا عَبد الله.حَدَّثَنَا ابن حماد ، حَدَّثَنا عباس ، عن يَحْيى ، قال الهيثم بن عدي كوفي ليس بثقة كان يكذب.
ஹைஸம் பின் அதீ என்பவர் நம்பகமானவர் அல்லர், பொய் சொல்பவர் என்று யஹ்யா அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல் அல்காமில் - இப்னு அதீ,பாகம் 8, பக்கம் 400)
الكامل في ضعفاء الرجال - (8 / 401) وقال النسائي الهيثم بن عدي متروك الحديث
ஹைஸம் பின் அதீ என்பவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல் அல்காமில் - இப்னு அதீ,பாகம் 8, பக்கம் 401)
لسان الميزان لابن حجر(اتحقيق أبو غدة) - (8 / 362)
وقال أبو حاتم متروك الحديث محله محل الواقدي وقال أبو زرعة ليس بشيء وقال العجلي كذاب وقد رأيته
ஹைஸம் பின் அதீ என்பவர் ஹதீஸ் துறையில் விடப்படப்பட வேண்டியர், இவர் (பொய்யரான) வாகிதீ என்பவரைப் போன்றவர் என்று அபூஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் எந்த மதிப்பும் இல்லாதவர் என்று அபூஸுர்ஆ அவர்களும் இவர் ஒரு பொய்யர், அவர் பொய் சொல்வதை நான் பார்த்துள்ளேன் என்று இஜ்லீ அவர்களும் கூறியுள்ளார்கள்.
(நூல் லிஸானுல் மீஸான், பாகம் 8, பக்கம் 362)
No comments:
Post a Comment