32 . ஹஸன் (ரலி) அவர்களின் மனைவியை விஷம் கொடுக்கச் சொன்னவர் முஆவியா (ரலி) அவர்களின் மகன் யஸீத் ????
تاريخ دمشق 020 - (1 / 72( أنبأنا أبو محمد بن الأكفاني نا عبد العزيز الكتاني أنا عبيد الله بن احمد الصيرفي اجازة أنا أبو عمر بن حيوية أنا محمد بن خلف بن المرزبان حدثني أبو عبد الله الثمامي نا محمد بن سلام الجمحي عن ابن ( 3 ) جعدبة قال كانت جعدة بنت الأشعت بن قيس تحت الحسن بن علي فدس إليها يزيد أن سمي حسنا أني مزوجك ففعلت فلما مات الحسن بعثت إليه جعدة تسأل يزيد الوفاء بما وعدها فقال أنا والله ولم نرضك للحسن فنرضاك لانفسنا
ஜஅதா பின்த் அஸ்அஸ் பின்த் கைஸ் என்ற பெண்மணி ஹஸன் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரிடம் யஸீத், ஹஸனுக்கு விஷத்தைக் கொடுக்குமாறும் (அவர் இறந்த பின்னர்) உன்னை மணம் புரிந்து கொள்வேன் என்றும் கூறினார். அவ்வாறே ஹஸனின் மனைவி செய்தார். ஹஸன் (ரலி) அவர்கள் இறந்த பின்னர் தன்னிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டுமென ஜஅதா அவர்கள், யஸீத் இடம் கேட்டார். அதற்கு யஸீத், ஹஸனிடம் நீ இருப்பதை நாம் பொருந்திக் கொள்ளவில்லை. நாங்கள் (நீர் எம்மிடம் இருப்பதை) பொருந்திக் கொள்வோமா என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு ஜுஃதுபா,
நூல் : தாரீக் திம்ஸ்க், பாகம்1, பக்கம்72
இந்தச் செய்தியில் இடம்பெறும் ஜுஃதுபா என்பவரின் முழுமையான பெயர் யஸீத் பின் இயாள் என்பதாகும். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
وَيَزِيدُ بْنُ عِيَاضٍ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ
ஹதீஸ் கலை அறிஞர்கள் யஸீத் பின் ஸியாத் என்பவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளதாக இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல் திர்மிதீ 584)
تقريب التهذيب - (2 / 604)7761- يزيد بن عياض ابن جعدبة بضم الجيم والمهملة بينهما مهملة ساكنة الليثي أبو الحكم المدني نزيل البصرة وقد ينسب لجده كذبه مالك وغيره من السادسة ت ق
யஸீத் பின் இயாள் என்பவரை இமாம் மாலிக் மற்றும் அவரல்லாதவர்களும் பொய்யர் என்று கூறியுள்ளார்கள்.
(நூல் தக்ரீபுத் தஹ்தீப், பாகம் 2, பக்கம் 604)
No comments:
Post a Comment