Thursday, November 10, 2016

மத்ஹபு இமாம்களின் அறிவுரை!


மத்ஹபுகளைத்தான் பின்பற்ற வேண்டும்; அப்போதுதான் நாம் சொர்க்கம் செல்ல முடியும். மத்ஹபு இமாம்களது கூற்று  திருக்குர் ஆன் மற்றும் நபி வழிக்கு எதிரானதாக இருந்தாலும் அதை பின்பற்றுவது மார்க்கக் கடமை என்று சொல்லி மத்ஹபு வெறி பிடித்து அலையக்கூடிய நிலையை தற்போது காண்கின்றோம். ஆனால் மத்ஹபு இமாம்கள் என்ன சொல்லியுள்ளார்கள் தெரியுமா?
நபிகள் நாயகத்தின் சொல்லுக்கு மாற்றமாக நாங்கள் சொல்லியிருந்தால் நபிகளாரின் சொல்லைத்தான் பின்பற்ற வேண்டுமேயொழிய எங்களது சொல்லை பின்பற்றக்கூடாது என்றுதான் மத்ஹபு இமாம்கள் சொல்லியுள்ளார்கள். இந்த செய்திகளையெல்லாம் சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் போலி உலமாக்கள் சொல்லமாட்டார்கள்.
இது குறித்து மத்ஹபு இமாம்களின் சத்தியக் கூற்றுகள்: பாகம் 1
பிரபல்யமான இமாம்கள் நால்வரும் குர்ஆன் , ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றே கூறியுள்ளனர். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக இருந்தாலும் நாங்கள் எங்கள் மத்ஹபைத்தான் பின்பற்றுவோம் என்று கூறும் உலமாக்கள் இவற்றை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இமாம்களின் சத்தியக்கூற்றுகளிலிருந்து சிலவற்றைக் காண்போம்.
இமாம் அபூ ஹனீஃபா :
صَحَّ عَنْ الْإِمَامِ أَنَّهُ قَالَ : إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي  (رد المحتار - (1 / 166)
இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கூறினார்கள் : ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.
(நூல் : ரத்துல் முஹ்தார் பாகம் : 1 பக்கம் : 166)
وذكر في الخزانة عن الروضة الزندويسية سئل أبو حنيفة إذا قلت قولا وكتاب الله يخالفه قال اتركوا قولي لكتاب الله فقيل إذا كان خبر الرسول صلى الله عليه وسلم يخالفه قال اتركوا قولي لخبر رسول الله صلى الله عليه وسلم (إيقاظ الهمم - (1 / 62)
நீங்கள் கூறிய கருத்து அல்லாஹ்வின் வேதத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என இமாம் அபூ ஹனீஃபாவிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் : அல்லாஹ்வின் வேதத்திற்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் என கூறினார்கள். அல்லாஹ்வின் தூதருடைய கருத்திற்கு மாற்றமாக இருந்தால் என்ன?  என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதருடைய செய்திக்காக என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள் எனக் கூறினார்கள்
(நூல் : ஈகாளுல் ஹிமம்  பாகம் : 1 பக்கம் 62
وذكر في المثانة عن الروضة الزندويسية عن كل من أبي حنيفة ومحمد أنه قال إذا قلت قولا يخالف كتاب الله وخبر الرسول صلى الله عليه وسلم فاتركوا قولي (إيقاظ الهمم - (1 / 62)
இமாம் முஹம்மத், இமாம் அபூ ஹனீஃபா கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் வேதத்திற்கோ, இறைத்தூதரின் செய்திக்கோ மாற்றமாக ஏதேனும் ஒரு கருத்தை நான் கூறியிருந்தால் என்னுடைய கருத்தை விட்டுவிடுங்கள்
(நூல் : ஈகாளுல் ஹிமம் பாகம் : 1 பக்கம் : 62)
فإن أبا حنيفة وأبا يوسف رحمه الله قالا لا يحل لأحد أن يأخذ بقولنا مالم يعلم من أين أخذناه  (إيقاظ الهمم - (1 / 53)
இமாம் அபூ ஹனீஃபா, இமாம் அபூ யூசுப் ஆகியோர் கூறுகிறார்கள் : நாங்கள் எங்கிருந்து எடுத்தோம் என்பதை அறியாமல் எங்கள் கருத்தை எடுப்பது யாருக்கும் அனுமதியில்லை.
(நூல் :ஈகாளுல் ஹிமம் பாகம் : 1 பக்கம் : 53)

No comments:

Post a Comment