பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் என்ற ஹதீஸ்யின் தரம்
سنن الترمذي (3/ 476)
1173 - حدثنا محمد بن بشار حدثنا عمرو بن عاصم حدثنا همام عن قتادة عن مورق عن أبي أحوص عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان
قال أبو عيسى هذا حديث حسن غريب
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (1173)
இந்தச் செய்தியை ”அபுல் அஹ்வஸ்” என்பாரிடமிருந்து அபூ இஸ்ஹாக், ஹுமைத் இப்னு ஹிலால், கதாதா ஆகியோர் அறிவிக்கின்றனர்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதா அல்லது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களின் சொந்தக் கூற்றா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தக் கருத்து வேறுபாட்டிற்கான தீர்வினை தமது ”அல்இலல்” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
العلل للدارقطني (5 / 314( :، والموقوف هو الصحيح من حديث أبي إسحاق ، وحميد بن هلال ، ورفعه صحيح من حديث قتادة.
அபூ இஸ்ஹாக், ஹூமைத் இப்னு ஹிலால் ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படும் செய்தி ”மவ்கூஃப்” (நபித்தோழரின் சொந்தக் கூற்று) என்பதுதான் சரியானது.
கதாதா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் ”மர்ஃபூ” (நபியவர்கள் கூறியது) என்பதுதான் சரியானது
நூல் : அல் இலல் பாகம் : 5 பக்கம் : 314.
கதாதா உடைய மாணவர்களில் சிலர் இந்தச் செய்தியை ”மவ்கூஃப்” ஆக அறிவித்துள்ளனர்.
சிலர் ”மர்ஃபூ” வாக அறிவித்துள்ளனர்.
இந்த இரண்டு அறிவிப்புகளில் ”மவ்கூஃப்” என்பது சரியா? அல்லது ”மர்ஃபூ” என்பது சரியா? என்ற கேள்விக்குத்தான் இமாம் தாரகுத்னீ அவர்கள் ”மர்ஃபூ” என்பது சரி என்று பதிலளித்துள்ளார்களே தவிர அந்தச் செய்தியே ஸஹீஹானது என்று அவர்கள் குறிப்பிடவில்லை.
சிலர் இதனை தவறாக விளங்கிக் கொண்டு இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தியை ஸஹீஹ் என்று கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். அது தவறானதாகும்.
ஒரு வாதத்திற்கு இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தியை ஸஹீஹ் என்றே குறிப்பிட்டுள்ளார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் அதை நாம் ஏற்றுக கொள்ள இயலாது . ஏனெனில் இந்த ஹதீஸில் பல பலவீனங்கள் உள்ளன. அவற்றை நாம் காண்போம்.
கதாதா என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாக கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.
இது போன்ற முதல்லிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ”ஸமிஃத்து” (நான் செவியேற்றேன்), ”ஹத்தஸனா” ”அஹ்பரனா” போன்ற சந்தேகமே இல்லாமல் நேரடியாகச் செவியுற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதனை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
மாறாக ”கால” (சொன்னார்), அல்லது ”அன்” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.
تهذيب التهذيب ـ محقق (8 / 317) : وقال أبو داود الطيالسي عن شعبة كان قتادة إذا جاء ما سمع قال حدثنا وإذا جاء ما لم يسمع قال قال فلان
கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை அறிவித்தால் ”ஹத்தஸனா” (இன்னார் எங்களுக்கு அறிவித்தார்) என்று கூறுவார். தான் நேரடியாகக் கேட்காத்தை அறிவித்தால் ”கால ஃபுலான்” (இன்னார் சொன்னார்) என்று கூறுவார் என ”ஷுஃபா” அவர்களிடமிருந்து அபூதாவூத் தயாலிஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 317
تهذيب التهذيب ـ محقق (8 / 318) :
وقال أبو حاتم اثبت اصحاب انس الزهري ثم قتادة قال وهو أحب إلي من أيوب ويزيد الرشك إذا ذكر الخبر يعني إذا صرح بالسماع
அனஸ் அவர்களின் மாணவர்களில் மிகவும் நம்பகமானவர்கள் ஷுஹ்ரி என்பாரும் பிறகு கதாதா அவர்களும் ஆவார்கள். கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி செய்தியை அறிவித்தால் அய்யூப் மற்றும் யஸீத் ஆகியோரை விட எனக்கு நேசத்திற்குரியவர் ஆவார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 318
سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] (9 / 325) :
وَهُوَ حُجّةٌ بِالإِجْمَاعِ إِذَا بَيَّنَ السَّمَاعَ، فَإِنَّهُ مُدَلِّسٌ مَعْرُوْفٌ بِذَلِكَ، وَكَانَ يَرَى القَدَرَ - نَسْأَلُ اللهَ العَفْوَ
கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி அறிவித்தால் ஏகோபித்த அடிப்படையில் அவர் ஆதாரத்திற்குரியவர் ஆவார். அவர் அறியப்பட்ட முதல்லிஸ் ஆவார். இன்னும் விதியை மறுக்கும் கொள்கையைச் கொண்டிருந்தார். அல்லாஹ்விடம் அவருக்கு மன்னிப்பைக் கோருவோம் என இமாம் தஹபி கூறுகிறார்.
நூல் : ஷியரு அஃலாமு அன் நுபலாவு (பாகம் : 9 பக்கம் : 325)
இதுவரை நாம் பார்த்த விமர்சனங்களிலிருந்து கதாதா அவர்கள் முதல்லிஸ் என்பது தெளிவாகிவிட்டது. அவர் நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.
ஆனால் மேற்கண்ட செய்தியின் எந்த அறிவிப்பிலும் கதாதா அவர்கள் தன்னுடைய ஆசிரியரான அல்முவர்ரிக் அல் இஜ்லீ என்பாரிடமிருந்து நேரடியாக கேட்டதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவிக்கவில்லை.
எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகிவிட்டது.
எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகிவிட்டது.
இது அல்லாமல் இதில் இன்னும் பல்வேறு பலவீனங்களும் உள்ளன.
கதாதா அவர்களிடமிருந்து மர்ஃபூ (நபியவர்கள் கூறியதாக) அறிவிக்கப்படும் செய்தியை மூன்று மாணவர்கள் அறிவிக்கின்றனர்.
1. ஹம்மாம்
2. ஸயீத் இப்னு பஷீர்
3. சுவைத் பின் இப்ராஹிம்
2. ஸயீத் இப்னு பஷீர்
3. சுவைத் பின் இப்ராஹிம்
இந்த மூன்று நபர்களுமே பலவீனமானவர்கள் ஆவார்கள்.
ஹம்மாம் என்பாரின் அறிவிப்பு
سنن الترمذي (3/ 476)
1173 - حدثنا محمد بن بشار حدثنا عمرو بن عاصم حدثنا همام عن قتادة عن مورق عن أبي أحوص عن عبد الله : عن النبي صلى الله عليه و سلم قال المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان
قال أبو عيسى هذا حديث حسن غريب
ஹம்மாம் அவர்களின் அறிவிப்பு திர்மிதி மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு நூற்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் பதிவாகியுள்ளது.
ஹம்மாம் என்பவர் மனனத் தன்மையில் மோசமானவர் ஆவார். இவர் தன்னுடைய புத்தகத்திலிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும்தான் ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலர் ”கதாதா” அவர்களிடமிருந்து ”ஹம்மாம்” அறிவிக்கும் அறிவிப்புகள் பலமானவை என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதனை பொத்தாம் பொதுவாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஹம்மாம் அவர்கள் கதாதாவிடமிருந்து தமது புத்தகத்திலிருந்து அறிவித்தால்தான் அது பலமான செய்தியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
معرفة الرجال لابن معين (1 / 122) : وقال على بن المدينى هو بمنزلة همام همام اذا حدث من كتابه عن قتادة فهو ثبت
ஹம்மாம் தனது புத்தகத்திலிருந்து கதாதாவிடமிருந்து அறிவித்தால் அது உறுதியானதாகும் என இமாம் அலி இப்னு மதீனீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : இப்னு மயீன் அவர்களுக்குரிய மஃரிஃபதுர் ரிஜால் (பாகம் : 1 பக்கம் : 122)
وقال محمد بن المنهال الضرير سمعت يزيد بن زريع يقول همام حفظه ردئ وكتابه صالح وقال ابن سعد كان ثقة ربما غلط في الحديث تهذيب التهذيب ـ محقق (11 / 60)
ஹம்மாம் அவர்களின் மனனத் தன்மை மிகவும் மோசமானதாகும். அவர் புத்தகத்திலிருந்து அறிவித்தால் சரியானதாகும் என யஸீத் பின் ஸுரைஃ அவர்கள் கூறியுள்ளார்கள். அவர் உறுதியானவர் என்றாலும் சிலநேரங்களில் ஹதீஸ்களில் தவறிழைத்து விடுவார் என இப்னு ஸஃத் கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப்)
وقال ابن أبي حاتم سئل أبو زرعة عنه فقال لا بأس به قال وسئل أبي عن همام وابان من تقدم منهما قال همام احب إلي ما حدث من كتابه وإذا حدث من حفظه فهما متقاربان في الحفظ والغلط. قال وسألت أبي عن همام فقال ثقة صدوق في حفظه شئ وهو احب إلي من حماد بن سلمة وابان العطار في قتادة. - تهذيب التهذيب ـ محقق (11 / 60)
ஹம்மாம் மற்றும் அபான் ஆகிய இருவரில் யாரை நீங்கள் முற்படுத்துகிறீர்கள் என்று இமாம் அபூஹாத்திம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அபூ ஹாத்திம் அவர்கள் ”ஹம்மாம் தனது புத்தகத்திலிருந்து அறிவித்தால் அவர் அபான் என்பாரை விட எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராவார். அவர் தன்னுடைய மனனத்திலிருந்து அறிவித்தால் மனனத்திலும், குழம்பியதிலும் இவரும் சமமானவர்களே என்று கூறினார்கள்.
ஹம்மாம் உறுதியானவர், உண்மையாளர். ஆனால் அவரது மனனத் தன்மையில் குறைபாடுள்ளது என இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் கூறியதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப்)
وقال الحسن علي الحلواني سمعت عفان يقول كان همام لا يكاد يرجع إلى كتابه ولا ينظر فيه وكان يخالف فلا يرجع إلى كتابه ثم رجع بعد فنظر في كتبه فقال يا عفان كنا نخطئ كثيرا فنستغفر الله تعالى انتهى وهذا يقتضى أن حديث همام بآخره اصح ممن سمع منه قديما وقد نص على ذلك احمد بن حنبل وقال أبو بكر البرديجى همام صدوق يكتب حديثه ولا يحتج به وابان العطار امثل منه وقال العجلي بصري ثقة تهذيب التهذيب ـ محقق (11 / 60)
அப்ஃபான் அவர்கள் கூறுகிறார்கள் : ஹம்மாம் தன்னுடைய புத்தகத்தின் பக்கம் திரும்புவற்கும் , அதில் உள்ளதைப் பார்ப்பதற்கும் நெருங்காதவராக இருந்தார். அவர் (தன்னுடைய புத்தகத்தில் உள்ளதற்கு) முரண்பாடாக அறிவித்தார். என்றாலும் தன்னுடைய புத்தகத்தின் பக்கம் திரும்பமாட்டார். பிறகு பிற்காலத்தில் தன்னுடைய புத்தகத்தின் பக்கம் திரும்பினார். தன்னுடைய புத்தகங்களைப் பார்த்து விட்டு ”அஃப்பானே! நாம் ஏராளமாக தவறு செய்து விட்டோம் நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவோம் என்று கூறினார்.
இதுதான் ஹம்மாம் அவர்களிடம் ஆரம்ப காலத்தில் செவியேற்றவர்களை விட இறுதிக் காலத்தில் செவியேற்றவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானது என்ற கருத்து ஏற்படக் காரணமாகும்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அபூபக்கர் பர்தீஜி கூறுகிறார் : ஹம்மாம் உண்மையாளர். அவருடைய ஹதீஸ்கள் எழுதப்படும். ஆனால் அது ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது.
(தஹ்தீபுத் தஹ்தீப்)
وقال الساجي صدوق سئ الحفظ ما حدث من كتابه فهو صالح وما حدث من حفظه فليس بشئ.-تهذيب التهذيب ـ محقق (11 / 60)
ஸாஜீ கூறுகிறார் : ஹம்மாம் உண்மையாளர். மனனத் தன்மையில் மிகவும் மோசமானவர். அவர் தனது புத்தகத்திலிருந்து அறிவிப்பவை சரியானவை. அவர் தனது மனனத்திலிருந்த அறிவிப்பவை ஏற்றுக் கொள்ளத் தகுந்தவை அல்ல.
(தஹ்தீபுத் தஹ்தீப்)
، قال : سَمِعْتُ أبا حفص يقول كان عبد الرحمن بن مهدي يقول إذا حدث همام من كتابه فهو صحيح وكان يحيى لا يرضى كتابه ولا حفظه الضعفاء للعقيلي (4 / 367)
ஹம்மாம் தனது புத்தகத்திலிருந்து அறிவித்தால் அது சரியானது. இமாம் யஹ்யா பின் முயீன் அவர்கள் அவரது புத்தக அறிவிப்பையும், மனன அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ளாதவராக இருந்தார்கள்.
(நூல் : அல்லுஅஃபாவுல் உகைலி )
மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ஹம்மாம் அவர்கள் தனது புத்தகத்திலிருந்து அறிவிக்கும் அறிவிப்புகள்தான் சரியானவை என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கதாதா அவர்களிடமிருந்து ஹம்மாம் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி அவர் தனது புத்தகத்திலிருந்து அறிவித்ததுதான் என்பதற்கு எந்தச் சான்றுமில்லை. எனவே இதன் அடிப்படையிலும் இந்தச் செய்தி பலவீனமாகிறது.
ஸயீத் இப்னு பஸீர் என்பாரின் அறிவிப்பு
صحيح ابن خزيمة -موافق للمطبوع (3 / 94) :
1687 - أنا أبو طاهر نا أبو بكر نا محمد بن يحيى نا محمد بن عثمان ـ يعني الدمشقي ـ ثنا سعد بن بشير عن قتادة عن مورق عن أبي الأحوص عن عبد الله : أن النبي صلى الله عليه و سلم قال بمثله
மேற்கண்ட செய்தியை கதாதா அவர்களிடமிருந்து ஸயீத் இப்னு பஸீர் அவர்கள் அறிவிப்பதாக இமாம் இப்னு ஹூசைமா பதிவு செய்துள்ளார்.
கதாதா அவர்களிடமிருந்து ஸயீதுப்னு பஸீர் என்பாரும் மேற்கண்ட செய்தியை மஃர்ஃபூவாக அறிவிக்கின்றார். ஆனால் இவரும் பலவீனமானவர் ஆவார்.
الضعفاء والمتروكين لابن الجوزي (1 / 314) :
1369 سعيد بن بشير أبو عبد الرحمن البصري مولى بني نصر
قال يحيى ليس بشيء وضعف أمره أحمد بن حنبل وقال ابن نمير منكر الحديث ليس بشيء ليس بقوي في الحديث يروي عن قتادة المنكرات وقال النسائي ضعيف وقال ابن حبان كان رديء الحفظ فاحش الخطأ يروي عن قتادة ما لا يتابع عليه وعن عمرو بن دينار ما لا يعرف من حديثه وقد وثقه شعبة ودحيم
இவர் ஒரு பொருட்டாக்க் கொள்ளத்தக்கவரில்லை என இமாம் யஹ்யா விமர்சித்துள்ளார்.
இவரை இமாம் அஹ்மத் பலவீனமானவராகக் கருதியுள்ளார். ”இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கத்தக்கவர்”. ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை. ஹதீஸ்களில் உறுதியானவரில்லை. கதாதா அவர்களிடமிருந்து மறுக்கத்தக்க பல செய்திகளை அறிவித்துள்ளார் என இப்னு நுமைர் விமர்சித்துள்ளார்.
இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
இவர் மனனத் தன்மையில் மோசமானவர், மோசமான தவறுகளைச் செய்பவர், கதாதா அவர்களிடமிருந்து துணைச் சான்றாக்க் கொள்ள முடியாத செய்திகளை அறிவிப்பவர், மேலும் அம்ரு பின் தீனார் வழியாகவும் இவருடைய ஹதீஸ்களில் அறியப்படாதவை வந்துள்ளன என இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.
ஷுஃபா, துஹைம் ஆகியோர் இவரை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நூல் : அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன்.
மேற்கண்ட விமர்சனங்களிலிருந்து ஸயீத் பின் பஸீர் என்பார் மிகவும் பலவீனமானவர் என்பதையும் அவருடைய அறிவிப்புகளை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
சுவைத் பின் இப்ராஹீம் அபூ ஹாத்திம் என்பாரின் அறிவிப்பு
المعجم الكبير للطبراني (8 / 438، بترقيم الشاملة آليا) : 9969 - حَدَّثَنَا مُوسَى بن هَارُونَ، حَدَّثَنَا مُحَمَّدُ بن أَبَانَ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بن مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:الْمَرْأَةُ عَوْرَةٌ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، وَإِنَّهَا أَقْرَبُ مَا يَكُونُ إِلَى اللَّهِ وَهِيَ فِي قَعْرِ بَيْتِهَا.
இவருடைய அறிவிப்பு இமாம் தப்ரானிக்குரிய அல் முஃஜமுல் கபீர் மற்றும் சில நூற்களில் இடம் பெற்றுள்ளது.
கதாதா அவர்களிடமிருந்து சுவைத் பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை மர்ஃபூவாக அறிவிக்கின்றார். இவருடைய அறிவிப்பும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் பலவீனமானதாகும்.
تهذيب التهذيب ـ محقق (4 / 237) : 478 - بخ (البخاري في الادب المفرد). سويد بن ابراهيم الجحدري (1) أبو حاتم الحناط البصري. قال أبو داود سمعت يحيى بن معين يضعفه وقال اسحاق ابن منصور عن يحيى بن معين صالح وقال عثمان الدارمي عن ابن معين أرجو ان لا يكون به بأس وقال أبو زرعة ليس بقوي حديثه حديث أهل الصدق وقال النسائي ضعيف قال ابن أبي عاصم مات سنة (167). قلت: وقال البرقاني عن الدارقطني لين يعتبر به وقال أبو بكر البزار في مسنده سويد صاحب الطعام ليس به بأس وقال الساجي فيه ضعف حدث عن قتادة بحديث منكر وقال العقيلي قال ابو سلمة لم يكن بالصافي وقال محمد بن المثنى ما سمعت ابن مهدي يحدث عنه وقال ابن المديني ذاكرت يحيى بحديثه فقال هات غير ذا وقال ابن حبان يروي الموضوعات عن الثقات وهو صاحب حديث البرغوث وقال ابن عدي حديثه عن قتادة ليس بذاك وسويد فيه ضعف وانما يخلط عن قتادة ويأتي عنه باحاديث لا يأتي بها عنه أحد غيره وهو إلى الضعف اقرب.
இவருடைய ஹதீஸ்கள் உறுதியானவையாக இல்லை என இமாம் அபூ சுர்ஆ விமர்சித்துள்ளார்.
இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர். இவர் பொருட்டாகக் கொள்ளத் தக்கவர் அல்ல என தாரகுத்னீ கூறியுள்ளார்.
இவரிடம் பலவீனம் உள்ளது. கதாதாவிடமிருந்து மறுக்கத்தக்க செய்தியை அறிவித்துள்ளார்.
இவர் தெளிவானவராக இல்லை என அபூ ஸலமா கூறியதாக உகைலீ கூறியுள்ளார்.
நான் யஹ்யாவிடம் இவரது ஹதீஸைக் கூறினேன். இவரல்லாத மற்றவர்களின் ஹதீஸைக் கொண்டுவா ! என்று கூறிவிட்டார் என இப்னுல் மதீனி கூறுகிறார்கள்.
இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்கள்.
இவர் நம்பகமானவர்கள் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிக்கக் கூடியவர் என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சித்துள்ளார்கள்.
இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகள் ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவை அல்ல. இவர் பலவீனமானவர். இவர் கதாதா வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளில் குழம்பிவிட்டார். கதாதாவிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை இவர் கூறியுள்ளார். இவர் பலவீனத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என இப்னு அதீ குறை கூறியுள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
கத்தாதா என்பவரும் பலவீனமானவர், அதுமட்டுமல்லாமல் அவரிடமிருந்து மர்ஃபூவாக அறிவிக்கும் மூன்று அறிவிப்பாளர்களும் பலவீனமானர்களாகவே உள்ளனர். எனவே இந்த அறிவிப்பு ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
கதாதா அவர்கள் வழியாக மவ்கூஃபாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மவ்கூஃப் என்பது நபித்தோழரின் சொந்தக் கூற்று என்பதாலும், கதாதா முதல்லிஸ் என்ற அடிப்படையில் இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.
மேலும் அபுல் அஹ்வஸ் என்பாரிடமிருந்து கதாதா அல்லாதவர்கள் வழியாக அறிவிக்கப்படும் அறிவிப்பு மவ்கூஃப் ஆனவை என இமாம் தாரகுத்னீ அவர்கள் தெளிபடுத்தி விட்டார்கள்
மொத்தத்தில் இந்தச் செய்தி எந்த அறிவிப்பாளர் தொடரிலும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளத்தக்க வகையில் அறிவிக்கப்படவில்லை. இது பலவீனமானது என்பதே ஆய்வின் முடிவாகும்.
No comments:
Post a Comment