Tuesday, November 15, 2016

நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்


7 . நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்


حَدَّثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، - يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي أَسِيدٍ، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ الْعُشْبَ ‏"‏


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்பதைப் போன்று பொறாமை நன்மையைத் தின்று (அழித்து) விடும்.

அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி)  அபூதாவூத் 4257
இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் (பாகம் 9 பக்கம் 10) முஸ்னது பஸ்ஸார் (8412) உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இப்றாஹீம் பின் அபீ அசீத் என்பாரின் பாட்டனார் இடம் பெற்றுள்ளார். இவரது பெயர் எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. இவர் யாரென்று அறியப்படாத நபர் ஆவார். இவரது நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாததால் இது பலவீனமான செய்தியாகிறது.
மேலும் இதே செய்தி அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாக இப்னுமாஜா 4200 வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஈஸா பின் அபீ ஈஸா அல்ஹன்னாத் என்பார் இடம்பெற்றுள்ளார். 
இவரை அறிஞர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் எனும் அறிஞர் இவரை ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் நஸாயீ, இப்னு மயீன், அஹ்மத் போன்ற அறிஞர்களும் இவரை குறை கூறியுள்ளனர். ஆகவே இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

No comments:

Post a Comment