இறுதி ஹஜ்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி
10 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம்
ஹஜ் செய்தார்கள்.
இதுவே நபியவர்கள் முதலாவதாகவும் இறுதியானதாகவும் செய்த ஹஜ்ஜாகும்.
இந்த ஹஜ்ஜின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்கள். இவ்வுரையில் மனித
சமுதாயத்திற்குத் தேவையான பெரும்பாலான கருத்துக்களை அவர்கள் கூறினார்கள்.
இதோடு மக்களிடமிருந்து விடைபெறுவதாக நபிகளார் அறிவித்ததால் இதற்கு ஹஜ்ஜத்துல் வதா
(விடைபெறும் ஹஜ்) என்று பெயர் வந்தது. (ஆதாரம் :
ஃபத்ஹுல்பாரீ)
நபியவர்களின் இறுதி ஹஜ்ஜைப் பற்றிய செய்தியைப் பற்றி மேலும் அறிய பார்க்க (புகாரீ
1545, 1625, 1731,1564,
1534, 2037, 7343, 1551, 1548, 2951, 2986, 1556, 1638, 1650, 1709, 4395, 1518,
1560, 1550, 1795, 1911,45, 4520)
மாநபியின் மரணம்
நபி(ஸல்)அவர்கள் ஹிஜ்ரி
11 ல் நோய்வாய்ப்பட்டார்கள்.
இந்நோய் கைபர் போர் நடந்த ஆண்டு யூதப் பெண்மணி விஷம் தடவிக் கொடுத்த இறைச்சியின் மூலம் ஏற்பட்ட நோயின் காரணத்தால் உண்டானது.
இதன் காரணமாக
நோய் அதிகரித்த போது தன் துணைவியர் ஆயிஷா(ரலி) அவர்கள் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்த அபூபக்ர்(ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களுக்கு 13 நாட்கள் இந்நோய் நீடித்தது.
இறுதியில் ஹிஜ்ரி 11ல் ரபியுல் அவ்வல் மாதம்
12 ஆம் நாள் திங்கள் கிழமை
63வது வயதில் நபியவர்களின் உயிர் பிரிந்தது. (ஆதாரம்
ஃபத்ஹுல்பாரீ)
நபியவர்களின் இறப்பைப் பற்றி மேலும் அறிய பார்க்க (புகாரீ 4428, 4429, 4431, 4432, 4433, 4434,
4435. 4436, 4438, 4440, 4441, 4442, 4443, 4444, 4463, 4464, 4466, 5646, 4455,
3665, 5711, 2462, 1264, 3536, 3711.)
நபியவர்களுக்குப்பிறகு
ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு நபித்தோழர்கள்.
1. அபூபக்ர்(ரலி) அவர்கள்
ஹிஜ்ரி 11 முதல் 13 வரை ஆட்சி செய்தார்கள்.
அதன் பிறகு தனது 63 வது வயதில் மரணித்தார்கள்.
2. உமர்(ரலி) அவர்கள். ஹிஜ்ரி
13 முதல் 23 வரை மொத்தம் 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்.
அதற்குப் பிறகு இவர்களும் தனது 63வது வயதில் வீரமரணமடைந்தார்கள்.
3. உஸ்மான்(ரலி) அவர்கள் ஹிஜ்ரி
23 முதல் 35 வரை மொத்தம் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்.
பின்பு இவர் தனது 82வது வயதில் வீரமரணமடைந்தார்கள்.
4. அலீ(ரலி) அவர்கள் ஹிஜ்ரி
35 முதல் 40 வரை மொத்தம் 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள்.
பின்னர் தனது 63வது வயதில் ஈராக்கில் வீரமரணமடைந்தார்கள்.
(ஆதாரம் : ஃபத்ஹுல் பாரீ)
மேற்கண்ட நபிகளாரின் வாழ்க்கைத் தொகுப்பை தொகுப்பதற்கு நமக்கு உதவிய நூல்கள்
1. ஸஹீஹுல் புகாரீ
2. ஸஹீஹ் முஸ்லிம்
3. ஸனன்அபூதாவூத்
4. முஸ்னத் அஹ்மத்
5. முஸ்னத் இப்னு அபீஷைபா
6. ஃபத்ஹுல் பாரீ
7. அல் பிதாயா வன்நிஹாயா
8. தபகாத்து இப்னு ஸஅத்
9. உம்ததுல் காரீ
10. இர்ஷாதுஸ் ஸôரீ
11. தப்ரானீ
No comments:
Post a Comment