தபூக் போர்
இந்தப்போர்தான் நபி(ஸல்) அவர்கள் கலந்துகொண்ட கடைசிப் போர் ஆகும். இப்போர் ஹிஜ்ரி
9 ஆம் ஆண்டு கி.பி. 630 ரஜப் மாதம் நடைபெற்றது.
இப்போர் நபி(ஸல்) அவர்களுக்கும் ரோமர்களுக்கும் இடையே நடைபெற்றது.
மதீனாவிலிருந்து டாமாஸ்கஸ் செல்லும் வழியில் தபூக் உள்ளது. ரோமர்கள் (பைஸந்தியர்) பெரும் படைகளைத்
திரட்டிக்கொண்டு மதீனாவைத் தாக்க வரவிருப்பதாக சிரியாவிலிருந்து மதீனா வந்த எண்ணெய்
வியாபரிகள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு தகவல் கிடைத்தது. ரோமர்களுக்கு லக்ம், ஜுதாம் ஆகிய அரபி குலத்தவரின்
ஆதரவும் கிடைத்தது.
எதிரிகள் 40ஆயிரம் பேர்கள் இருந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் தலைமையில் 30 ஆயிரம் முஸ்லிரிம்கள் போருக்குச் சென்றனர். போர்க்களத்தில் கடுமையான பசியும் தாகமும்
பீடித்தது. மற்றும் கடுமையான வெப்பமும் இருந்தது. இப்போரில் முஸ்ரிலிம்கள் கடுமையாகக்
கஷ்டப்பட்டார்கள்.
ஆகையால் இப்போருக்கு கஸ்வத்துல் உஸ்ரா
(கஷ்டகாலப் போர்) என்று பெயர் வந்தது. தபூக் என்ற இடத்தில் நபியவர்கள் 20 நாட்கள் தங்கினார்கள்.
எதிரிகள் பின் வாங்கி ஓடிவிட்டனர் சண்டை நடக்கவில்லை (.பத்ஹுல்பாரீ, உம்ததுல்காரீ)
இப்போரில் கலந்துக் கொள்ளாத கஅப் இப்னு மாலிக்(ரலி), ஹிலால் பின் உமைய்யா(ரலி), முராரா(ரலி) ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை யாரும் அவர்களிடம்
பேசக்கூடாது என்று கட்டளையிட்டார்கள். பின்னர் இறைவன் இவர்களுக்கு மன்னிப்பளித்து குர்ஆன்
வசனத்தை அருளினான்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக
இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி
விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள்
நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை
ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (அல்குர்ஆன்
9:118)
இப்போரைப் பற்றி விரிவாக அறிய பார்க்க
(புகாரீ 4418, 2947,
2948, 2949, 2950, 3556, 3889, 3951, 4673, 4676, 4677, 4678, 6255, 6690, 7225)
No comments:
Post a Comment