42 . பிரார்த்தனை வணக்கங்களின் மூளை?
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ (رواه الترمدي 3293)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (3293)
இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ”இப்னு லஹீஆ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.
346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف :الضعفاء والمتروكين - النسائي (ص 64)
(நூல்: அல்லுஃபாவு வல் மத்ரூகீன்-நஸயீ, பாகம்: 1, பக்கம்: 64
இதே ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
نهاية المراد من كلام خير العباد (1/ 52)
51 - أَخْبَرَنَا أَبُو مُوسَى، أنبا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، أَنَا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ، ثنا أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، ثنا عَبْدَانُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو مُعَاوِيَةَ. ح قَالَ أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، وَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، ثنا الْقَوَارِيرِيُّ، نا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، جَمِيعًا، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ , ثُمَّ قَرَأَ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும். பிறகு ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; ( 40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல் : நிஹாயத்துல் முராத் மின் கலாமி ஹைரில் இபாத் பாகம் : 1 பக்கம் : 52)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அல்பள்லு இப்னு முஹம்மத் இப்னு ஸயீத்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் ”யாரென்றே அறியப்படாதவர் ஆவார்”.
எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.
No comments:
Post a Comment