16. நபித்தோழர்களை திட்டுவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்
مسند البزار 18 مجلد كاملا (12/ 155) 5753- حَدَّثنا مُحَمد بن المؤمل بن الصباح ، حَدَّثنا النضر بن حماد ، حَدَّثنا سيف بن عُمَر ، عَن عُبَيد الله بن عُمَر ، عَن نافعٍ ، عَن ابن عُمَر ؛ أَن النَّبِيّ صَلَّى الله عَلَيه وَسَلَّم قال : من سب أصحابي فعليه لعنة الله. - وهذا الحديث لا نعلَمُ رواه عَن عُبَيد الله إلاَّ سيف.
யார் என் தோழர்களை திட்டுவார்களோ, அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : பஸ்ஸார், பாகம் : 12, பக்கம் : 155
இச்செய்தியில் இடம்பெறும் ஸைஃப் பின் உமர் என்ற அறிவிப்பாளர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.
الجرح والتعديل (4/ 278) عن يحيى بن معين انه قال: سيف بن عمر الضبى الذى يحدث عنه المحاربي ضعيف الحديث.
ஸைஃப் பின் உமர் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் : 4, பக்கம் : 278
الجرح والتعديل (4/ 278) حدثنا عبد الرحمن قال سئل ابى عن سيف بن عمر الضبى فقال: متروك الحديث، يشبه حديثه حديث الواقدي
ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர். இவருடைய செய்திகள் (பொய்யுரைக்கும்) வாகிதியின் செய்திகளுக்கு ஒப்பானவை என்று அபுஹாத்திம் அர்ராஸீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் : 4, பக்கம் : 278
இந்த அறிவிப்பு பலவீனமாக இருந்தாலும் சத்திய ஸஹாபக்களை தீட்டக்கூடாது என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரி பதிவாகி உள்ளது.
3673حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الْأَعْمَشِ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيفَهُ تَابَعَهُ جَرِيرٌ وَعَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ وَأَبُو مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنْ الْأَعْمَشِ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தர்மம் எட்ட முடியாது.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் :புகாரி (3673)
No comments:
Post a Comment