Tuesday, November 15, 2016

அன்பையும் நல்லுபதேசத்தையும் பறிமாறிக் கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்



15 . அன்பையும் நல்லுபதேசத்தையும் பறிமாறிக் கொண்டால் பாவங்கள் மன்னிக்கப்படும்


عمل اليوم والليلة  (193) أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الضَّحَّاكِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَنْجِرَ، ثنا عَمْرُو بْنُ عَاصِمٍ الْقَيْسِيُّ، ثنا عَمْرُو بْنُ حَمْزَةَ، ثنا الْمُنْذِرُ بْنُ ثَعْلَبَةَ، عَنْ يَزِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بِنِ الشِّخِّيرِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ ஃ فَصَافَحْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا مِنْ أَخْلاقِ الْعَجَمِ، أَوْ هَذَا يُكْرَهُ. فَقَالَ: “ إِنَّ الْمُسْلِمِينَ إِذَا الْتَقَيَا فَتَصَافَحَا وَتَكَاشَرَا بِوُدٍّ وَنَصِيحَةٍ، تَنَاثَرَتْ خَطَايَاهُمَا بَيْنَهُمَا “

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : 
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து கைகொடுத்தேன். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே இது அரேபியர் அல்லாத அந்நியர்களின் வழக்கமா? இது வெறுக்கத்தகுந்த செயலா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்து அன்பையும் நல்லுபதேசத்தையும் பறிமாறிக் கொண்டால் அவ்விருவரின் பாவங்களும் நீங்கிவிடுகின்றது எனக் கூறினார்கள்.
நூல் : அமலுல் யவ்மி வல்லைலா (193)
இப்னு சன்னீ அவர்களின் நூலான அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியில் அம்ர் பின் ஹம்சா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவரா? பலவீனமானவரா? என்பது தெரியவில்லை என முஹம்மது பின் இஸ்ஹாக் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.
இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்படாத காரணத்தால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.

No comments:

Post a Comment