Monday, November 7, 2016

நல்ல விஷயங்கள் இரண்டு

4. நல்ல விஷயங்கள் இரண்டு


سمعت عبد الله بن مسعود قال  قال  - ص 40 - النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلط على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي 
بها ويعلمها

'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நூல் : புஹாரி ( 73 ) முஸ்லிம் ( 1486 ) இப்னு மாஜா (4208) அஹ்மத் (3643)

விளக்கம் :

ன்மையான விஷயங்களில் போட்டி போடுவதும் அதில் அதிக அக்கறை காட்டுவதும் மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் , செல்வம் அதிகம் வழங்கப்பட்டு அதை நல்ல வழியில் செலவழிப்பவரைப் பார்த்துப் பொறாமைப்படலாம்.


 நமக்கும் இவருக்கு வழங்கப்பட்டது போல் செல்வம் இருந்தால் நாமும் அவரைப் போன்று நற்காரியங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கலாமே ! மறுமையில் அதிகமதிகம் நன்மைகளைப் பெறலாமே ! என்று எண்ணுவதும் அதற்காக ஆர்வப்படுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக , நல்ல அறிவாற்றல் வழங்கப்பட்டு அதனால் அவர் ஆணவம் கொள்ளாமல் அதன் மூலம் நியாயமான நேர்மையான தீர்ப்பை வழங்கி வருகிறார். மேலும் இவர் பெற்ற கல்வியின் மூலம் பலருக்கு நற்கல்வியும் கற்றுத் தருகிறார்.



இவரைப் போன்று நாமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது கூடும் . கல்வி வேண்டும் அதன் மூலம் நற்காரியங்களைச் செய்ய வேண்டும் . இந்த அடிப்படையில் ஆசைப்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment