கிப்லா மாற்றம்
நபி (ஸல்) அவர்கள் மக்காவில்
இருந்தவரைக்கும் புனித கஅபாவை முன்னோக்கி அல்லாஹ்வைத் தொழுது வந்தார்கள். மதீனாவிற்கு
ஹிஜ்ரத் செய்த பின் பைதுல் முக்திûஸ நோக்கி தொழுதார்கள்.
இப்படியே 17 மாதங்களும் கழிந்தன. நபி (ஸல்) அவர்கள் புனித கஃபாவை நோக்கியே தொழவேண்டும் என்று
ஆசைப்பட்டார்கள். இந்நிலையில் அல்லாஹ் கஃபாவை நோக்கி தொழுவதற்கு கட்டளையிடும் வண்ணம்
""ஏற்கனவே இருந்த அவர்களின்
கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்?'' என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்.
""கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே
உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 2:142) வசனத்தை அருளினான்.
கிப்லா மாற்றப்பட்ட சம்பவத்தை மேற்கொண்டு அறிய (பார்க்க புகாரீ 4486, 4488, 4490.)
நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட போர்க்களங்கள்
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ போர்கள் நடந்தது. அதிலே. நபி(ஸல்) அவர்கள்
நேரடியாக கலந்து கொண்ட போர்கள் மொத்தம் 19 ஆகும். (ஆதாரம் புகாரீ 3949). அதிலே, மிகவும் பிரசித்தி பெற்ற
போர்கள் பின்வருமாறு : பத்ரு, உஹுத், அஹ்ஸப் (ஹன்தக்), முரைசிஃ(பனூ முஸ்தலிக்), தபூக், கைபர், மக்கா மற்றும் ஹுனைன் ஆகும். அவற்றைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment